எதை கொ(ன்)ண்(று)டு எதை வெல்வாய்
சாவி தொலைந்த பூட்டைப்போல திறவாமல் மூடியே இருக்கிறது விடியல்! எப்படியாவது திறந்து விடுவாய் என தட்டிக்கொடுக்கிறது நம்பிக்கை! முன்னேறும் முன்னே.... உன்னால் அசைக்க முடியாது என பேதியை கிளப்புகிறது பயம். உச்சி முதல் பாதம் வரை ஆழமாய் பதிந்து கிடக்கிறது விரக்தி. முடியாததை முயலாதே என கட்டிப் பிடிக்கிறது தயக்கம். அனுபவம் போதாது என ஆட்டி வைக்கிறது அறியாமை. என்ன தான் நடக்குமோ என ஆட்சி செய்கிறது கவலை. ஆபத்தாக அமையலாம் என அறிவிப்பு செய்கிறது சிந்தனை. இப்படியாக குழப்பங்கள் சூழ்ந்து கொ(ள்)ல்(ள)ல... நம்பிக்கை மட்டும் எப்படியாவது திறந்து விடுவாய் என தட்டிக்கொடுக்கிறது அழுத்தமாய்! கண்களை இருக்கி மூடி தனிமையில் தனிமையாகிறேன் தயக்கங்கள் தள்ளிச்சென்று எனை தாக்கும் ஏக்கங்களாக ஏற்றம் கொள்கிறது. ஏக்கத்தின் தாகங்கள் அவ்வப்போது தீர்க்கப்பட வேண்டியவை. ஏன் முடியாது...? முயலாமல் முடிவேது காதுகளில் கனீர் ஒலிகளாக நம்பிக்கை மட்டும் உரக்க குரல் எழுப்புகிறது. தோழா! உன்னைச் சுற்றி இட்ப்பட்ட வட்டத...