Posts

Showing posts from 2018

இறுதிச்சடங்கு

Image
இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட  பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம்  இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தாத  உங்கள் கண்கள் கூட கண்ணீரை சிந்தலாம், சிந்தாமலும் விடலாம் வாழ்க்கை வகுத்து தந்த மேடு பள்ளங்களை  முட்டிமோதி மூச்சுவாங்க கடந்த காலங்களுக்கெல்லாம்  முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிவிட்டது விதி  நானோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றேன் என்ன நடக்குமோ என எதிர்காலம் குறித்த அச்சமில்லை  இறந்தகாலம் குறித்த நினைவுகளும் இல்லை  நிகழ்காலத்தில் நிறுத்தப்பட்டது என் மூச்சு என்றாலும் அதுவும்  “இறந்த”காலமாக மாறிப்போகும் உங்களுக்கு கண்ணீரும் கதறலுமாக உங்கள் ஒப்பாரி என் காதுகளில் விலவில்லை  தொல்லை ஒழிந்தது போதும் எனும் சிலரது விமர்சனங்களைக்கூட  என் செவி உள்வாங்கப்போவதில்லை - அனைத்துக்கும் மாறாக  இருக்கும் போது இல்லாத ஏதோ ஓர் அமைதி சூழ்ந்துகொள்கின்றது பொருளோ, மனையோ, சொத்தோ சொந்தமில்லை  பெற்றோர், உடன்பிறந்தோர், தம்பதிகள், உறவுகள் எது...