என் முதுகிலுள்ள அழுக்கை அகற்றிவிட்டு உங்களிடம் வருகிறேன்
இன்று எங்கு பார்த்தாலும் ஒருவர் இன்னொருவரை குறை கூறுவதும் இன்னொருவர் மற்றொருவரை குறை கூறுவதுமாக தொடர்கின்றதே தவிர தன் குறைகளை இனங்கண்டு அவற்றை அகற்றுவார் மிக குறைவாகவே இருக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களை அசைப்போட்டதில் அருவருப்பு தன்மை சூடிக்கொண்டது. உண்மை தான் இன்று பொதுவாக ஆண்களே தவறு செய்பவர்களாக சுட்டிக்காட்டப்படுகின்றார்கள் பெண்கள் விடயத்தில் ஆண்கள் மோசமானவர்கள் அப்படி இப்படி எல்லாம் கதைக்கின்றார்கள் ஆனால் ஆண்களில் மட்டுமல்ல பெண்களிலும் தவறு செய்பவர்கள் இருக்கவே செய்கின்றார்கள் என்பதே என் வாதம் (இங்கு தவறு செய்யும் பெண்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்) என்னடா ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தன்னினத்தைப் பற்றியே குறைக்கூறுகின்றாளே என நினைக்கின்றீர்களா? யார் செய்தால் என்ன தவறு தவரு தானே...? அதிலென்ன ஆண் பெண் என்ற பேதம்??? என்ன சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருக்கின்றாள் என யோசிக்கின்றீர்களா? விடயத்தோடு தான் பேசுகின்றேன் ஆம் கடந்த சில மாதங்களாக எனது நண்பர் ஒருவருக்கு ஒரு பெண் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் தொலைப்பேசியில் அழைத்துக்கொண்டிருந்தாள் ஆனால் அந்த குறித்தப்பெண் யார் என்பது சார்பான தகவ...