அன்பே நீ வருவாயா...?
மறுத்துப்போன உணர்வுகளை சுமந்து
உதிரம் சிந்திய என் இதயத்தூடும்
உலாவரும் உனக்காக
எழுதுகின்றேன் ஒரு கடிதம்
பதில் கூட வினா தொடுக்கும்
வேள்விகள் அரங்கேறியதில்
உள்மன ஓலங்கள்
மௌனமாய் மறைந்தன
தவிப்போடு தடுமாறிய கணங்களில்
தலைசாய்க்க மடி தேடியதில்
தோற்றுப்போன என் மனவலியை
தலையணையைத் தாண்டி யார் அறிவார்?
உனைத் தேடி உனைத்தேடி
உரிமைப்போர் நிகழ்த்தி தோற்ற
விம்மலின் ஏக்கத்தோடே தூக்கம் தொலைத்தது
என் எத்தனை இரவுகள்?
இறுகிப்போன மனதினில்
இறுக்கி வைத்த உன்னன்பில்
இளைப்பாற இன்றும் துடிக்கிறேன்
அன்பே நீ வருவாயா...?
Comments