இதயம் பேசுகிறது

இளமை மறந்து இரவுகளோடு இருண்டு போன

நாட்களைக் கடந்து இதயங்கள் பேசிக்கொள்ளும்

காலம்..... இது இனிமை காலம்!


தனிமைச்சிறை தன்னை கவ்விக் கவ்வி

தலையாட்டிச் சென்றதொரு காலம்

அது இறந்த காலம்!


இழப்புக்கள் இடியென தாக்க...

இன்பத்தின் சுவடுகள் மறைய...

இருதயம் நொருங்கிப்போன தடயங்கள் ஏராளம்


அவன் இருப்பான் இவன் இருப்பான் சொல்லிச் சொல்லி

கடந்து வந்தேன் சொல்லாமல் எவனிருப்பான்? என்று

ஏங்கியதொரு காலம் - அது கடந்த காலம்!


நரகமும் சொர்க்கமயம் விசமதும் அமிர்த உணவு

அகிம்சைகள் அணைத்துக் க்ஒண்டு அன்பதோ என்னை ஆளும்

அழகிய காலம் அது என்னோடு நீ இருக்கும் நிகழ்காலம்!


மீண்டும் மீண்டும் வேண்டும் இந்த இனிமை காலம்

நிஜங்களை என்னில் ஏந்திக்கொள்ள...!

Comments

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
"இழப்புக்கள் இடியென தாக்க...
இன்பத்தின் சுவடுகள் மறைய...
இருதயம் நொருங்கிப்போன தடயங்கள் ஏராளம்..."

ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் வலிகள். உங்கள் வார்த்தைகளில் அழகாக ....
நல்ல கருத்துள்ள கவிதை...

http://zenguna.blogspot.com

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு