Posts

Showing posts from 2012
எங்கேயும் எப்போதும் இப்போது வரும் படங்கள் பொதுவாக காதல், அந்த காதலர்களின் குடும்பங்களுக்கிடையில் நடக்கும் சண்டை மற்றும் அந்த ஊரில் நடக்கும் அட்டூழியங்களை அழிப்பதாகவும் கதையை நகர்த்தி சென்று கொண்டிருக்க இரண்டு ஜோடிகளை வைத்து படம் இயக்கப்பட்டுள்ளதென்றதும் காதல் பிரச்சினை கிளைமாக்ஸ் சண்டை இறுதியில் ஈரோ ஈரோயினோடு சேர்வதாக உருகி உருகி காதல் செய்யப்போகின்றாரோ இயக்குனர் என்ற எண்ணத்தோடு தான் நானும் படம் பார்க்க அமர்ந்தேன் ஆனால் இத்தனை ஆழமாக இன்றைய சமுதாயத்திற்கு அறிவுரை கூறுவதான ஒரு விடயத்தை அனைவர் மனதிலும் பதியும் வண்ணம் செதுக்கி இருக்கும் இயக்குனர் சரவணனுக்கு சபாஸ் போடலாம். தொடக்கமே மனதை வதைக்கும் காட்சியோடு உயிர்பெற எத்தனையோ உயிர்களின் இழப்பினை கண்முன்னே நிஜத்தில் கொண்டு வந்திருக்கின்றார். ஜெய், சர்வா, அஞ்சலி, அனன்யா ஆகியோரின் அறிமுகம் இவர்கள் நால்வரும் அந்த பேரூந்து விபத்தில் சிக்கிக்கொள்வதாக கதை அமையும் என்ற எண்ணத்தை முன்னதாகவே உண்டுபண்ணினாலும் இப்படியாகத்தான் கதை முடிவு அமையும் என்ற தீர்க்கமான முடிவிற்கு வரமுடியாமல் கதையை நகர்த்தி சென்றிருப்பது அருமை. பத்து நிமிடம் படம் பார்த்தத...
Image
விளக்கமில்லாத  குழப்பம் இருப்பிடம் இரவல் வாங்கிய கொடுமை வந்த வழி மறந்து தொலைந்தது வந்த கதையும் மறந்தே போனது நினைவைத் தொலைத்து நொந்ததில் வெறுமைத்தீ கால் வேரிலிருந்து உடல் விருட்சம் முழுதும் காதல் காவுக்கு இரையாவது இதயங்கள் மட்டும் தானா..? உயிராய் சுமந்த பெற்றோருமா? உலகச் சாக்கடையில்  உப்புக்கா பஞ்சம் -  ஏனோ தெருவெங்கும் எச்சில் நாய்கள் உரிமையை மட்டும் அல்ல உணர்வையும் தொலைத்தே  மனித நடைப்பிணம் வாழ்கிறது மதிகொண்டென்ன பயன் மரணத்தோடு போட்டியிடும் வீரனுண்டோ...?