விளக்கமில்லாத குழப்பம்
இருப்பிடம் இரவல் வாங்கிய கொடுமை
வந்த வழி மறந்து தொலைந்தது
வந்த கதையும் மறந்தே போனது
நினைவைத் தொலைத்து நொந்ததில்
வெறுமைத்தீ கால் வேரிலிருந்து
உடல் விருட்சம் முழுதும்
காதல் காவுக்கு இரையாவது
இதயங்கள் மட்டும் தானா..?
உயிராய் சுமந்த பெற்றோருமா?
உலகச் சாக்கடையில்
உப்புக்கா பஞ்சம் - ஏனோ
தெருவெங்கும் எச்சில் நாய்கள்
உரிமையை மட்டும் அல்ல
உணர்வையும் தொலைத்தே
மனித நடைப்பிணம் வாழ்கிறது
மதிகொண்டென்ன பயன்
மரணத்தோடு போட்டியிடும்
வீரனுண்டோ...?
Comments