எங்கேயும் எப்போதும்

இப்போது வரும் படங்கள் பொதுவாக காதல், அந்த காதலர்களின் குடும்பங்களுக்கிடையில் நடக்கும் சண்டை மற்றும் அந்த ஊரில் நடக்கும் அட்டூழியங்களை அழிப்பதாகவும் கதையை நகர்த்தி சென்று கொண்டிருக்க இரண்டு ஜோடிகளை வைத்து படம் இயக்கப்பட்டுள்ளதென்றதும் காதல் பிரச்சினை கிளைமாக்ஸ் சண்டை இறுதியில் ஈரோ ஈரோயினோடு சேர்வதாக உருகி உருகி காதல் செய்யப்போகின்றாரோ இயக்குனர் என்ற எண்ணத்தோடு தான் நானும் படம் பார்க்க அமர்ந்தேன் ஆனால் இத்தனை ஆழமாக இன்றைய சமுதாயத்திற்கு அறிவுரை கூறுவதான ஒரு விடயத்தை அனைவர் மனதிலும் பதியும் வண்ணம் செதுக்கி இருக்கும் இயக்குனர் சரவணனுக்கு சபாஸ் போடலாம்.

தொடக்கமே மனதை வதைக்கும் காட்சியோடு உயிர்பெற எத்தனையோ உயிர்களின் இழப்பினை கண்முன்னே நிஜத்தில் கொண்டு வந்திருக்கின்றார். ஜெய், சர்வா, அஞ்சலி, அனன்யா ஆகியோரின் அறிமுகம் இவர்கள் நால்வரும் அந்த பேரூந்து விபத்தில் சிக்கிக்கொள்வதாக கதை அமையும் என்ற எண்ணத்தை முன்னதாகவே உண்டுபண்ணினாலும் இப்படியாகத்தான் கதை முடிவு அமையும் என்ற தீர்க்கமான முடிவிற்கு வரமுடியாமல் கதையை நகர்த்தி சென்றிருப்பது அருமை. பத்து நிமிடம் படம் பார்த்ததுமே சலிப்பை ஏற்படுத்துவதாக அமையும் நிலை மாறி எம்மையும் அந்த கதாபாத்திரமாக தொடர்ந்து பயணிக்கும் உணர்வை ஏற்படுத்திவிட்டது.

அதிக பணசெலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது என்ற தம்பட்டங்கள் இல்லாமல் குறைந்த செலவில் செதுக்கப்பட்ட அழகான சிற்பம் இந்த கதை, கதை நகர்வாகட்டும் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களாகட்டும் அலட்டலில்லாமல் அற்புதமாக பொருந்தியுள்ளது. படக்குழுவினருக்கு ஜே ஜே....

(நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஒருமுறை பார்த்த படம்)Comments

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்