தொடங்கிடுங்கள்
நித்திரை தொலைத்த நெஞ்சத்தின் குமுறல் நித்தமும் பிழியும் உண்மையின் நினைவுகள்.... தமிழ் தாகமும் தேகமும் பசிக்கு இரையாகும் போது எங்கே ஒழிந்தன உங்கள் போர்க் கொடிகள்.... வெல்வேன் வீழ்த்தி வாளேந்தி சொன்னீர் அன்றைய முழக்கத்தின் சுவடுகள் எங்கே.... ஆயுதம் இழந்தேன் அழுது துடிக்கின்றீர் அடிமையானேன் நீரே உரைக்கின்றீர்.... புரியாதவரே....! உங்கள் எண்ணங்களின் சிசுக்கள் விரல்வழி பிறக்கட்டும் உங்கள் பேனையை விடவா ஆயுதம் வேண்டும்.... படிந்த கரும்புள்ளிகளை காணாமல் செய்து புதியதோர் யுகத்தை புதிதாய் சமைக்க..... இன்றே தொடங்கிடுங்கள் உள்ளே உறங்கும் உணர்வுகளுக்கு உயிர்கொடுத்து உண்மையை விளக்கிட.... கத்தி முனையை விட கூர்மையாய் இருந்து குத்திக் கிழிக்கட்டும் உங்கள் எழுத்துக்கள்!