நன்றி நவிலல்

பதிவர்களோடு பதிவராக பதிவுலகில் நடைப்பயிலும் யாழ்தேவி நிர்வாக குழுவினருக்கும், தினக்குரல் பத்திரிக்கை நிருபர்களுக்கும் நன்றிகள் கோடி....!

உடனடியாக நன்றி நவில முனைந்தும் ஒரு சில வேலைப் பளு காரணமாக சில நாட்களை கடந்த நிலையில் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதையிட்டு மனவருத்தமடைகின்றேன். எனது ஆக்கத்தை தினகுரலில் பிரசுரித்து தந்தமைக்கு நன்றிகள் இரு சாராருக்குமே.

பதிவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்தன்மைகளோடு தமது ஆக்கங்களை அவரவர் சொந்த தளத்தில் பதிவிட்டு வருகின்றார்கள். அவர்களுக்கென பதிவுலக நண்பர்களின் கருத்துப்பகிர்வுகளும், பின்னூட்ட ஊக்குவிப்புகளும் என்றென்றும் காணப்படும் என்றாலும் பதிவுலக பதிவர்களின் ஆக்கங்களை அவர்களின் அறிமுகத்தோடும், படத்துடனும் வெளியிட்டு தளத்துக்கான அனேகரின் வருகையை ஏற்படுத்தித்தருவதான இந்த முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கது. இது வளர்ந்து வரும் பதிவர்களை மேலும் ஊக்குவித்து அவர்களை மேலும் மேலும் எழுதத்தூண்டும் முயற்சியாகும். இது போன்ற உங்கள் நற்பணிகள் தொடர எனது வாழ்த்துக்கள்!
வாழ்க
வளமுடன்!

Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்