இனி வேண்டாம்

அணு தினமும் துதிப் பாடி
மன்றாடி உனை நாடி
மடி பிச்சை கேட்கின்றேன்
மறு ஜென்மம் இனி வேண்டாம்

இருந்தாலும் மறுபடியும்
வேற்றுமைகள் காட்டிவரும்
ஒற்றுமைகள் குழைத்துவிடும்
மனிதப் பிறவி இனி வேண்டாம்

மாற்றானின் மனை கவர்ந்து
தன் மனையை அழகாக்கும்
அழுக்கான மனங்கொண்ட
மனிதப்பிறவி இனி வேண்டாம்

பொன்னோடும் பொருளோடும்
சுகமாக தினம் வாழ்ந்து
மகிழ்வோவே மாண்டாலும்
மறு ஜென்மம் இனி வேண்டாம்

Comments

Admin said…
திருந்துமா நம் சமூகம்?
V.N.Thangamani said…
நல்ல கவிதை. மறு ஜென்மம் வேண்டாம்
என்பதை விடுத்து.
மனித ஜென்மம் திருந்திட
ஏதாவது செய்வோம் கீர்த்தி.
வாழ்க வளமுடன்.

Popular posts from this blog

29. தவிப்போடு ஒரு மனசு

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்