உன்னால் நான்

உன் காதல் பள்ளியில்
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம் நான்!

உன் புறக்கணிப்புக்களால்
புதைக்கப்பட்டதாக என் வாழ்க்கை!

சுவாசங்களின் இடைவெளியையும்
சுருட்டிக் கொண்டது உன் நினைவு!

என் இரவுகளெல்லாம் பகலாகவும்
பகலெல்லாம் கனவானதும் உன்னால்!

விழி துயில் கொள்வதும் தினம்
விழித்துக் கொள்வதும் உன் தரிசனத்திற்காகவே!

இன்று உன் விடை பெறலால்
வினாவாகி தொக்கி நிற்பதுவும் நானே!

Comments

Popular posts from this blog

29. தவிப்போடு ஒரு மனசு

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்