தலை நிமிர்ந்து செல்லுவோம்
வஞ்சங் கொண்டவர் புடைசூழ குலவி வாஞ்சையோ டனைத்து வார்த்தைகள் உதிர்த்து விருந்தின ராகி தயவோ டமுதுண்டு மகிழ்ந்து பொருத்தமுற பொய்மை தனை போற்றி நின்றபோதிலும் தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்! மனை பறித்து இடை மடமமைத்து கொடுத்து மந்தைகளி லொன்றாக எம் குலமும் சேர்க்க உடன்பிறந்த உறவுகளை ஒவ்வொன்றாய் க லைத்து உடலோடு மனமுடைந்து சோர்ந்து விட்ட போதிலும் தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்! நோக்குந் திசையெலாம் களியாட்டம் வளியாகி மண் பறித்த நோ வந்து நெஞ்சையு மடைத்து தீண்டும் தென்றலும் தீய தனலாக எரித்து இரவிலொரு ஒளிவீச்சு கண்பறித்து போகினும் தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்! களிப்பினொடு காலனும் பாசக் கயிற்றை நீட்டி காயத்தில் மண்ணள்ளி தூவிவிட்டு சிரித்து சிறைவாசல் களிதன்னை ஏற்று தினம் வாடி சீற்றமுற சிங்கமும் உயிர் குடித்து போகினும் தமிழனென்று உரக்கச் சொல்லி தலை நிமிர்ந்து செல்லுவோம்! வேஷங்களைப் பூசிக்கொண்டு வாசல் வரை வந்து பொய் ப...