புரியா நிஜங்கள்

நினைவு தோற்கும் போது
கனவு தானே வாழ்க்கை
கவலை சுமந்து சுமந்து
களைத்துப் போவதேது...?

உறவு உதறும் போது
உணர்வு தானே வாழ்க்கை
உரிமை கோரிக் கோரி
இடிந்துப் போவதேது...?

தனிமை சூழும் போது
மௌனம் தானே உறவு...
துணையை தேடித் தேடி
தொலைந்துப் போவதேது....?

மனது நோகும் போது
நினைவு தானே உறவு
மரணம் தேடித் தேடி
விரைந்துப் போவதேது...?

வினாக்களில் விடைகள்
ஒழித்துக் கொண்டு
விந்தை செய்யுது உலகம்!

விடைத் தேடிய
புரியா நிஜமாய்
புவி சூழ உயிர்கள்!

Comments

சில வரிகளை வாசிக்கும் போது மனதை ஏதோ செய்கிறது. நல்ல கவிதை கீர்த்தி

“மனது நோகும் போது
நினைவு தானே உறவு”

நல்ல வரி
Unknown said…
நிலை இல்லா வாழ்வில் நிஜங்களை தேடும் மனிதன்.

Popular posts from this blog

29. தவிப்போடு ஒரு மனசு

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்