வாழ்க்கைப் பிச்சையா?

உன்னிலும் நான் வித்தியாசமானவள்
ஒவ்வொரு முறை நீ சொல்லும்போதும்
உள்ளுக்குள் ஏதோ நெருடும்!

மனதினை தீண்டும் வலி
இருந்தாலும் உள் ஆழம் புதைந்து
உணர்ந்ததில்லை அதன் அர்த்தத்தை!

ஏனோ முழு நம்பிக்கைக் கொண்ட
மூடச்சியாய் எனையும் சுமந்து கொண்டே
காற்றாய் கரைந்தது காலம்!

என் நிலை தளர்ந்து உன்னடி சேர்வை
உணர்ந்து ஓட விடுகிறாய் நீயும்
மூச்சு முட்டும் மட்டும்!

தேடித் தேடித் தொலைந்ததில்
இன்று வரை நீ தரும் காயங்களால்
நொந்து நூலாய் ஜெஞ்சம்!

நீ பாவப்பட்டு எனை சேர
அப்படி நான் என்ன உன்னிடம்
வாழ்க்கைப் பிச்சையா கேட்டேன்?

Comments

நியோ said…
கோபத்தில் வீரமும் மானமும் மிளிர்கிறது ...

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்