Posts

Showing posts from September, 2010

மெழுகா.... நான்...???

வாழ்வு இருண்ட என்னை- நீ மடி சாய்த்த நொடியில் மபுணிப்பு மறைந்தது! கவலைச் சிறை எனை விடுத்து களிப்பு என் இதயக்கதவை அணைத்துக் கொண்டது! மெல்லத் தெளிந்த என் மனதில் - மேன்மை உருவம் நீ...! செல்லம் கொஞ்சும் உன் சிரிப்பில் கலந்த நெஞ்சம் இன்பக்கோர்வை ! கானல் தான் இனிமையோ இரு நாட்களில் இடிந்த - என் இதயத்தை வலிகள் சூழ்ந்தன  அன்பனே...! உயிர் சொரியும் - உன் இனிய வார்த்தைகள் எங்கோ தொலைந்து....; மனம் கணக்கும் மௌன பாஷைகள் மொழியானதால்....; உன்னன்பு கரம் பற்றி உயிர் பெற்ற நானோ சிலையாகிறேன்! இன்று மெழுகாய் நான் உருக்கும் சுடராய் நீ!

அந்தி சாயும் பொழுதுகளும் அர்த்தப்பட்டுப் போகின்றன!

Image
அதிகாலை துயிலலில் பனித்துளிகள் பட்டு நீராடும் புல்வெளியை தென்றல் தொட்டு செல்லும் வருடல் போலவே.., வலிகள் தாங்காமல் நொறுங்கும் என் இதயத்தை சேர்வையாக்கி கோர்வை செய்யுது உன் அன்பு! வேண்டும் என துடித்து விரும்பிப் பெற்ற விரத தவத்தின் பரிசுகள் என்னை பகடையாக்கி பார்த்து சிரித்து மகிழ்ந்திட.., மெல்லிய தூரல்களே சிலிர்க்க வைக்கும் என்னில் அடை மழையின் சாரல் பட்டும் தெப்பமாய் வெப்பம் உள்ளே! என்றாலும்; கவலைகளை சுமந்து வெம்பும் நொடிகள் தாண்டி அந்தி சாயும் பொழுதுகளும் அர்த்தப்பட்டுப் போகின்றன..; நெஞ்சோடு நீ இருப்பதால்!

"சந்தீயும் சமதனாமம் நிறைந்த ஈனிய தேசம் ஓன்றை காட்டி எழூப்பூவன்"

சுபீட்சம் நிறைந்த சுந்தர நாட்டில் - தமிழரின் சுந்தரப் புன்னகை மட்டும் தொலைவில் கருவாக ! இரத்த பூமி பார்த்த கண்களில் வற்றிப் போனது கண்ணீர் ஏனோ மனது மட்டும் இன்னும் மரணித்தே ! தீவிரவாதம் கொலை செய்யப்பட்டதாய் சந்தோச கோஷம் எழுப்புது ஆட்சி தமிழரின் உணர்வு கொலைகளுக்கும் சேர்த்தே ! அது தெரியாமல் இன்னும் நம்மில் பலர் அவர்களும் தமிழர்கள் ! எல்லோருக்கும் சமவுரிமை பகிர்ந்தளிக்கப்படுவதாய் சொல்லிச் சொல்லியே பறிக்கப்பட்டது தமிழரின் உரிமை ! அழிக்கப்பட்டுப் போனது தமிழரின் வாழ்விடங்கள் குடியமர்த்தப்பட்டதென்னமோ சகோதர இனம் ! அகதிமுகாம்கள் அகற்றப்பட்டாலும் அகதித் தமிழன் வாசகம் மட்டும் அடிக்கொரு முறை கூவலாக ! எதிர்காலத்தில் எம் பிள்ளைகளும் அவர்களை அடையாளப்படுத்திக் கொள்ள இந்த வாசகம் புதிய அரசியலமைப்பிற்கூடாக அவசியமாக்கப்படலாம் ஐயமில்லை ! சில்லென்ற காற்றும் சீறிப் பாய்கின்றது முடக்கப்பட்ட தமிழரின் நிலையைக் கண்டு ! ஏனோ சிறைப்பிடிக்கப்பட்டது ஒவ்வொரு தமிழரின் தமிழ் உணர்வுகளும் தான் ஏங்கித் தவிக்குது மனசு ஏக்கங்களை சுமந்து கொண்டே ! அடிபட்டும் மிதிபட...

நினைவுச் சாரல்

Image
இருள் வான நிலா மகள் என் ஜன்னலோரம் கண் சிமிட்டிப் போனாள் ! இடை நடுவாய் இளம் தென்றல் குளிர்மையை குடித்துவிட்டு வந்து மெல்ல வருடிவிட்டே சென்றாள் ! வானொலியும் மெல்லிசைக் கொண்டு தன் பங்கிற்கு என்னை தாலாட்டிக் கொண்டிருந்தது ! என் தாயின் கை பக்குவம் அமிர்த உணவு தொண்டைக்குள் சுவை கக்கிக்கொண்டே இருந்தது ! மென்மையை சுமந்த பஞ்சு மெத்தை மென்மை மயக்க நிலையில் எனை சேர்த்தது ! எல்லாம் இருந்தும் இந்த பசுமை தினமும் வழமைப் போலவே தூக்கம் தொலைத்து ஏதோ ஒன்றை முனுமுனுத்துக் கொண்டே இருந்தது ! ஆம் உண்மை தான் இத்தனையும் என்னில் இனிமையை ச் சேர்க்க நீ என்னருகில் இருந்திருக்கலாம்!

நான் யாரோ அவன் யாரோ....!

Image
மனிதன் பகுத்த றியும் தன்மையைக் கொண்டிருப்பதனாலும் பேசும் திறன் கொண்டிருப்பதனாலும் ஏனைய விலங்குகளிலும் சிறந்தவ னாக அடையாலப்படுத்தப்படுகின்றான் . ஆம் பகுத்தறிவு என்பது ஒரு செயற்பாட்டின் கூறுகளை அவதானித்து , ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து அதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவு களை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது . இது ஆறாவது அறிவு என அழைக்கப்படுகின்றது . ஆறாம் அறிவான பொது அறிவு ( பகுத்தறிவு ) கொண்டவர்களை " மனிதன் " என பொதுவானதொரு பெயர் கொண்டு அழைத்து வந்தாலும் , அமைப்புக்களில் ஒத்தவர்களாகக் காணப்பட்டாலும் அவரவர் எண்ணங்களிலும் , செய ல்களிலும் , புரிந்துக் கொள்ளும் தன்மையிலும் , நினைவாற்றலிலும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்களாகவும் , மாறுபாடுகளைக் கொண்டவர்களாகவுமே காணப்படுகின்றனர். உதாரணமாக ஒரு பாடசா லையின் குறித்த வகுப்பு ஒன்றினை எடுத்து நோக்குவோமானால் அனைத்து மாணவர்களுக்கும் குறித்த நேரத்தில் குறித்த ஒரு ஆசிரியராலேயே வகுப்புக்கள் நட...