அந்தி சாயும் பொழுதுகளும் அர்த்தப்பட்டுப் போகின்றன!


அதிகாலை துயிலலில்
பனித்துளிகள் பட்டு நீராடும்
புல்வெளியை தென்றல் தொட்டு
செல்லும் வருடல் போலவே..,


வலிகள் தாங்காமல்
நொறுங்கும் என் இதயத்தை
சேர்வையாக்கி கோர்வை
செய்யுது உன் அன்பு!



வேண்டும் என துடித்து
விரும்பிப் பெற்ற விரத தவத்தின்
பரிசுகள் என்னை பகடையாக்கி
பார்த்து சிரித்து மகிழ்ந்திட..,


மெல்லிய தூரல்களே
சிலிர்க்க வைக்கும் என்னில்
அடை மழையின் சாரல் பட்டும்
தெப்பமாய் வெப்பம் உள்ளே!


என்றாலும்;


கவலைகளை சுமந்து
வெம்பும் நொடிகள் தாண்டி
அந்தி சாயும் பொழுதுகளும்
அர்த்தப்பட்டுப் போகின்றன..;


நெஞ்சோடு நீ இருப்பதால்!


Comments

///...மெல்லிய தூரல்களே
சிலிர்க்க வைக்கும் என்னில்
அடை மழையின் சாரல் பட்டும்
தெப்பமாய் வெப்பம் உள்ளே!...//
அருமை சகோதரா வாழ்த்துக்கள்...
நன்றி சுதா! என்றாலும் என்னை சகோதரனாக்கி விட்டீர்களே.... :(

உங்கள் வலைத்தளம் அருமை பதிவுகளும் அருமை

இப்படிக்கு,
சகோதரி கீர்த்தி
Anonymous said…
அந்த ஆளுக்கு - அதான் ‘அவன்’ - எவ்வளவு சக்தியிருக்க வேண்டும் ஒரு பெண்ணின் கவலைகளை அவனை நினத்தமாத்திரத்தில் போக்கவைக்கும் சக்தி -

அவனை என்னிடம் அனுப்புங்கள் என் கவலைகள் கொஞ்சம் நஞமல்ல. ஒரு நிவாரணியாக இருப்பான்.
Anonymous said…
Juxtapose the first and second stanzas:

The second stanza says that your heart is burdened with sorrows and pains, and his love lightens that burden.

Since the second stanze flows from the first stanza, it gives the meaning that the blades of grass on the meadow are burdened by the dew drops painfully; and that pain is lightened or alleviated by the cool breeze.

I think, Ms Jo S.K, why do you think that for the blades of grass, the dew drops are a burden and a pain ?
Anonymous said…
Third stanza is nice: it is an antithesis: You got something out of your penance; but alas, that turns out to be a disappointment and a cause for ridicule.

Fourth is to be considered the master stroke in this poem: good turn of phrase and thought.

The penultimate (கடைசிக்கு முந்தி) and the anticlimax in the last ( ie. the solution (He) - have nicely come out. It clinches the whole poem, although I like the aforesaid masterstroke.

You are a good poet. I hope you will tackle a variety of themes, not only 'love'!
ரொம்ப நல்லா இருக்குங்க ..........
வரிகளுக்கேடற்போல் படங்களும் அருமை....

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

ஹைக்கூ கவிதைகள்

29. தவிப்போடு ஒரு மனசு