நினைவுச் சாரல்

இருள் வான நிலா மகள்
என் ஜன்னலோரம்
கண் சிமிட்டிப் போனாள்!

இடை நடுவாய் இளம் தென்றல்
குளிர்மையை குடித்துவிட்டு வந்து
மெல்ல வருடிவிட்டே சென்றாள்!
வானொலியும் மெல்லிசைக் கொண்டு
தன் பங்கிற்கு என்னை
தாலாட்டிக் கொண்டிருந்தது!

என் தாயின் கை பக்குவம்
அமிர்த உணவு தொண்டைக்குள்
சுவை கக்கிக்கொண்டே இருந்தது!

மென்மையை சுமந்த
பஞ்சு மெத்தை மென்மை
மயக்க நிலையில் எனை சேர்த்தது!

எல்லாம் இருந்தும் இந்த பசுமை தினமும்
வழமைப் போலவே தூக்கம் தொலைத்து
ஏதோ ஒன்றை முனுமுனுத்துக் கொண்டே இருந்தது!

ஆம் உண்மை தான்
இத்தனையும் என்னில் இனிமையைச் சேர்க்க
நீ என்னருகில் இருந்திருக்கலாம்!

Comments