உணர்வின் மதிப்பு
எத்தனை முறை
“நான் உனக்காக இருக்கிறேன்…”
என்று ஒருவர் சொல்கிறார்
என்பது முக்கியமல்ல…
அவர் அருகாமை உன் மனதிற்கு
எவ்வளவு பாதுகாப்பாக உணர்வை
தருகிறது என்பதுதான் முக்கியம்.
எல்லா இருப்பும்
ஆறுதலைத் தருவதில்லை…
எல்லா மௌனமும்
அமைதியைக் குறிப்பதில்லை…
சில நேரங்களில்,
பலருக்கு நடுவிலும்
நாம் முற்றிலும்
தனிமையாகவே உணர்வோம்.
ஆனால் மனதுக்கு நெருக்கமான ஒருவருடனோ, சிலரோடு மட்டுமோ இருக்கும் போது ஆயிரம் பேர் சூழ இருந்தும் கிடைக்காத ஒரு உணர்வு கிடைத்துவிடும்.
ஏனெனில்,
அருகில் இருப்பது வேறு…
உணர்வோடு இருப்பது வேறு.
ஒருவரின் உலகில்
நாம் மட்டுமே மிக முக்கியமானவராக
இருக்க வேண்டிய அவசியமில்லை…
ஆனால்,
என் உணர்வு மதிக்கப்படுகிறது,
என் மௌனம் கவனிக்கப்படுகிறது,
என் இல்லாமை உணரப்படுகிறது,
நான் தேவைக்கு மட்டும்
நினைவுகூரப்படவில்லை என்பதை மட்டும்
என் உள் மனம் எப்போதும் உணர விரும்புகிறது
புரிதல் இல்லாத அன்பு
தனிமையைத் தரலாம்…
அக்கறையில்லாத கவனம்
வெறுமையைத் தரலாம்…
உணர்வுகளுக்கு மதிப்பில்லாத
ஒரு உறவு,
ஒருநாள்
எதையும் எதிர்பார்க்காமல் இருக்க
நம் மனதிற்கே கற்றுக்கொடுத்துவிடும்.
அதனால்,
ஒருநாள் நான் விலகிச் சென்றால்…
அது
அக்கறை இல்லாமல் போனதால் அல்ல…
என் உணர்வுகளுக்கு
மதிப்பில்லாத இடத்தில்
தொடர்ந்து இருப்பது
நான் என் சுயத்தையே
இழந்து வாழ்கிறேன் என்பதை
இறுதியில் புரிந்துகொண்டதால் மட்டுமே!
விலகுதல்
எப்போதும் வெறுப்பின் அடையாளமல்ல,
அது தோல்வியும் அல்ல,
சில நேரங்களில்
தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும்
ஒரு அமைதியான முடிவு!
சம்யு❣️
i3 planet 🌎
Comments