வலையுலகும் எனது நூறாவது பதிவும்

வலையுலகில் கால் வைத்து எனது நூறாவது பதிவை எட்டிவிட்ட எந்தனுக்கு ஊக்குவித்து உறுதுணையாய் இருந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். ஒருவாறு 99 பதிவுகள் எழுதியாயிற்று 100 பதிவாக எதைப் பற்றி எழுதுவது என மூளையை குடைந்தபோது என் எண்ணங்களை தொட்டது அப்பா, காதல், நட்பு என்னும் 3 விடயங்கள்... சரி அந்த மூன்றைப் பற்றியுமே எழுதிடலாம் என இப்பதிவை தொடங்குகிறேன். வாசித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அப்பா

“அப்பா
” நான் அதிகமாக ஒட்டிக் கொண்ட, என் மீது அதிக பாசம் கொண்ட நபர். இவரை பற்றி சொல்லும் போதே மனசு வலி கொள்ளுது கண்கள் கலங்குது. வரும் நவம்பர் மாதம் 16ம் திகதியோடு அவர் எங்களை விட்டுப் போய் 9 வருடங்கள். இன்று வரை அதை நம்ம முடியாமலே தான் இருக்கு. இந்த உலகத்திலேயே நான் அதிகமாக நேசித்த உறவு என் அப்பா தான். இவரைப் பார்த்து ஓவ்வொரு விடயத்திலும் நான் வியந்து போயிருக்கேன். அன்பானவர் அதிலும் என் மேல் உயிரானவர். கோபம் வந்தாலும் அப்படி தான் தேங்காய், வாழைப்பழத்தோடு பூஜை கலைகட்டும். ஆனாலும் அவர் சொல்லும், செய்யும் ஒவ்வொரு விடயமும் அவர் மேல் பாசத்தை அதிகப்படுத்தும். வாழ்ந்தால் இவரைப் போல வாழனும்னு ஒரு எண்ணத்தை மனதில் ஏற்படுத்தும். இப்படியான ஒரு தங்கமான மனிதரோடு அதிக நாள் இருக்க கிடைக்காதது என் துரதிஸ்டம் தான். இப்போதும் மறு ஜென்மம் பற்றிய நம்பிக்கை இல்லை என்றாலும் அவரை சந்திக்கும் பாக்கியம் வேண்டும் என அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.


காதல்

காதலைப்
பற்றி பல்வேறான கருத்துக்கள் கூறப்பட்டாலும் இரு உயிர்களுக்கிடையில்
நிகழும் இதயங்களின் உணர்வுள்ள பரிமாற்றம் (உடலும், மனமும் ஒன்றாய் இலயிக்கும் இடம்) தான் காதல். இன்றைய சமுதாயம் காதல் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் தான் என கூறுகின்றது ஆனால் தன்னலம் மட்டும் கருதாத அன்பின் வெளிப்பாடே காதல். ஊடல் இல்லாத காதல் இல்லை என சொல்கின்றார்கள் அதே போல் ஊடல் இல்லாத காதலில் உண்மையும் இல்லை என்பது என் கருத்து. உலகில் எத்தனையோ பேர் இருக்கும் போதும் அவனுக்கு அவள் மீதும், அவளுக்கு அவன் மீதும் பாசத்தை அதிகமாக கொட்ட வைக்கும், அவர்களை மட்டுமே அழகாக காட்டும் சிறப்பான உணர்வு காதல். சிரிக்கும் போது சேர்ந்து சிரிக்கும், அழும் போது ஆறுதலாகும் அன்பில் தொடுகை காதல். இன்னும் சிறப்பா சொல்ல வேண்டுமென்றால் அதிரசமும் ஒன்று சேர்ந்த பழரசம் காதல், இருந்தாலும் பிரிவுனு வரும்போது மரண விளிப்பையே தொட வைக்கும் கொடிய அமிலமாகி கொள்கின்றது உயிரை.

நட்பு

நட்பு
பற்றி நினைக்கும் போதே என்னை அறியாமல் நான் முனுமுனுத்த பாடல் “தோழா தோழா தோல் கொடு கொஞ்சம் சாய்ந்துக்கனும்” இன்றைய சமுகம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை காதலாக மட்டுமே பார்த்து பழக்கப்பட்டதா
ல் உண்மையான நட்போடு பழகும் ஆணையும், பெண்ணையும் அவர்கள் சொல்லம்புகளாலேயே குத்திக் கிழித்து சாகடிக்கின்றது. ஆனால் நட்பு என்பது இருவருக்கிடையேவோ, பலரிடமோ வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் ஒரு உறவாகும். நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நண்பனின் நல்ல செயற்பாடுகளை பாராட்டும் அதே சமயம் அவனது குறை நிறைகளையும் எடுத்து சொல்லித் திருத்தும் உறவாக அமைவார்கள். இது போன்ற நட்பு சொந்தங்களை சுவாசிக்க் கிடைத்ததற்காக மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.Comments

வாழ்த்துக்கள் கீர்த்தி விரைவில் 200 அடிப்பீர்கள்.
நன்றி அண்ணா. உங்கள் நம்பிக்கைக்கு நன்றிகள்

முயற்சி செய்கின்றேன்
வாழ்த்துக்கள் கீர்த்தி விரைவில் 200 அடிப்பீர்கள். வலையுலகில் மேலும் முன்னேறவும் வாழ்த்துக்கள்.
சதத்திற்கு வாழ்த்துக்கள்..

இன்னும் நிறைய எழுதுங்கள்..
Vijay said…
வாழ்த்துக்கள் கீர்த்தி
100 வது வலைப்பதிவில் அப்பா, காதல், நட்பு பற்றி அழகாகக் கூறியிருந்தீர்கள்....
தந்தையை இழந்தவலி என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும்...

100 என்ன நூறாயிரத்தையும் தாண்டட்டும் உங்கள் பயணம்
வாழ்த்துக்கள் :)
100 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்...
தாடர்ந்து பதிவிட்டு மேலும் நல்ல பதிவுகளை இட வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் ... 100 not out...all the very best for the next....
வாழ்த்துக்கள் ... 100 Not Out...all the very best for the next...100
//வாழ்த்துக்கள் கீர்த்தி விரைவில் 200 அடிப்பீர்கள். வலையுலகில் மேலும் முன்னேறவும் வாழ்த்துக்கள்.//

நன்றி நன்றி நன்றி

முன்னேற்றம் காணப்படும்
//சதத்திற்கு வாழ்த்துக்கள்..

இன்னும் நிறைய எழுதுங்கள்..//

நன்றி

தொடர்ந்து எழுதுவேன்
//தந்தையை இழந்தவலி என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும்...//

தந்தையை மறக்க முடியுமா?

நன்றி நன்றி உங்கள் அன்புக்கு நன்றி
//வேந்தன் said...

வாழ்த்துக்கள் :)//

நன்றி
//100 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்...
தாடர்ந்து பதிவிட்டு மேலும் நல்ல பதிவுகளை இட வாழ்த்துக்கள்...//

நன்றி தொடருவேன்
//யசோ...அன்பாய் உரிமையோடு கரன் said...

வாழ்த்துக்கள் ... 100 not out...all the very best for the next......//

Tnx i will try ma best
Subankan said…
நூறு அடித்ததற்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி...
LOSHAN said…
வாழ்த்துக்கள் கீர்த்தி.. தொடர்ந்தும் பதிவுலகில் தமிழ் நடை போடுங்கள்..

நூறாவது பதிவும் அருமை.
வாழ்த்துக்கள் தங்கச்சி..தொடரட்டும் உங்கள் எழுத்தக்கள்..அடுத்த இலக்கை நோக்கி..கூட இருந்து ஊக்கம் தந்து உங்கள் பின் வருவோம்...
100 வது பதிவாக நீங்கள் எடுத்த தலைப்பும் உங்கள் வலிகளையும் எங்களுடன் பகிர்நது கொண்டீர்களே நிச்சயம் எங்களையும் தொட்டது அந்த உணர்வுகள்
Gurusamy said…
I couldn't write my wishes in the world's finest language Tamil as I don't get the settings correct in Blog. Iam very sorry for that.

Your Language is superb and Your Thoughts are really good.

Congratulations !!!
Keep Writing !!
You live in Lanka or in some other country ??
I was so touched by your words written in your profile. I understand your concerns. But My belief is We Tamilians must become economically rich like Jews and then should fight for our own.
//Subankan said...

நூறு அடித்ததற்கு வாழ்த்துக்கள்//

நன்றி
நன்றி பிரியமுடன்...வசந்த்
//வாழ்த்துக்கள் கீர்த்தி.. தொடர்ந்தும் பதிவுலகில் தமிழ் நடை போடுங்கள்..

நூறாவது பதிவும் அருமை.//

நன்றி லோசன் அண்ணா. தமிழை சுவாசிப்போம் என்றும்.

கருத்துக்களுக்கு நன்றி
நன்றி மனதின் கிறுக்கல்கள். உங்கள் துணையுடன் தொடருவேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி
நன்றி Gurusamy!

உங்கள் தமிழ் பற்று புரிகின்றது. தமிழை பேசுவதற்கே பயந்து ஒதுங்கும் உலகில் தமிழில் எழுத முடியவில்லை என கவலை கொள்ளும் உங்கள் உணர்வுகள் மேலானவை. வாழ்த்துக்கள்

கருத்துக்களுக்கு நன்றி. பொருளாதார முன்னேற்றம் காண்பதற்கு முன் மனிதம் பேணப்படட்டும் என்பது என் கருத்து
100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...
தொடர்ந்தெழுதுங்கள்...
மன்னார் அமுதன் வழியாக இங்கு வரக் கிடைத்தது
மேலும் எழுதுங்கள்... வாழ்த்துக்கள்
Ilavazhuthi said…
வாழ்த்துக்கள் தோழி!....
மேன்மேலும்
நம் அழகு தமிழில்
பொங்கு நடையில்
உங்கள் எழுத்துக்கள்
உலா வர வாழ்த்துக்கள்

தமிழன்புடன்,
இளவழுதி

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்