தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு
கடந்த
23.08.2
009 ஞாயிற்றுக்கிழமை அன்று முதன்முறையாக இலங்கையில்ஒன்று கூட்டப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பை தொடர்ந்து அடுத்த பதிவர் சந்திப்பு எப்போது எப்போது என துடித்துக் கொண்டிருந்த எம் அனைவரையும் சந்தித்து மகிழ வைத்தஇருக்கிறம்இருக்கிறமின் வலைப்பதிவருடனான சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவினருக்கு எமது நன்றிகள்.

கடந்த வாரம் இருக்கிறமால் மின்னஞ்சல் செய்யப்பட்ட அழைப்பிதலைத்
தொடர்ந்து “சிந்தனை சிறகினிலே.... நீங்கள் எதிர்ப்பார்த்ததைப் போலவே வலைப்பதிவர் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுவிட்டது என தொடங்கி இவ்வாறு செய்ய வேண்டும், அவ்வாறு செய்ய வேண்டும்” என பல்வேறுப்பட்ட விடயங்களை தாங்கி மின்னஞ்சல்கள் குவிந்த வண்ணமாக! சக பதிவர்களே உங்கள் ஆர்வம் என்னை வியக்க வைத்தது என்றாலும் இது வலைப்பதிவரின் ஒன்றுகூடல் அல்ல என்பதை தெளிவுப்படுத்த நினைக்கின்றேன்.


நேற்று
3.00
பிற்பகல் “இருக்கிறமின் அலுவலகத்தில் நடாத்தப்பட்ட கூடலானது வலைப்பதிவர்களை இருக்கிறம் குழுவினர் சந்திப்பதற்கா ஏற்பாடாகவே அமைந்ததே தவிர அது வலைப்பதிவர்களுக்கான சந்திப்பாகவோ, வலைப்பதிவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நிகழ்வோ அல்ல. அப்படியானால் வலைப்பதிவர் சந்திப்பு எப்போது என்னும் கேல்வி தானே உங்களுக்குள் எழுகின்றது? ஆம் வலைப்பதிவர்களின் அறிமுகத்தோடு முன்னெடுத்து வரப்பட்ட பதிவர் சந்திப்பின் அடுத்த கட்ட சந்திப்பிற்கான வேலைப்பாடுகள் நிகழ்ந்த வண்ணமாக! ஆம் வெகு சீக்கிரத்தில் பதிவர்களுக்கான ஒன்றுகூடலானது ஒழுங்கு செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம். ஆனாலும் எங்களால் மென் பானங்கள் மாத்திரமே ஏற்பாடு செய்யப்படும் என்பதனையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
இனி
நேற்று பதிவர்
களுடனான இருக்கிறமின் ஒன்றுகூடல் நிகழ்வுகள் பற்றிய சிறு விளக்கம்

இருக்கிறம் குழுவினரி
ன் அழைப்பை ஏற்று மணியளவிலேயே அவர்களின் நிகழ்வு ஆரம்பம் என குறிப்பிடப்பட்டிருந்த போதும் ஆர்வக்கோளாறால் நானும் என் சக பதிவுலக நண்பர்களும் 2.45 அளவிலேயே இருக்கிறம் அலுவலகத்தை சென்றடைந்தோம். அங்கே இருக்கிறம் குழுவினர் பரபரப்போடும், ஆர்வத்தோடும் நிகழ்வு சார்ந்த ஒழுங்குப்படுத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சிறிது சிறிதாக பதிவர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பார்வையாளர்கள் என கூட்டம் சேரவே மனதில் மகிழ்ச்சி பொங்கியது என்றாலும் புல் தரையில் இயற்கையை அனுபவித்துக் கொண்டே நடத்திடலாம் என நினைத்து அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வை இயற்கையே இடையூறு செய்தது. ஆம் மழை வந்து சில்மிஷம் செய்தது.

அதனை
தொடர்ந்து இருக்கிறமின் அலுவலக அறையினுள்ளே அனைவரையும் ஒன்று கூட்டி 4.00
மணியளவிலேயே நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு ஆரம்ப நிகழ்வாக கலந்து கொண்டவர்களின் அறிமுகமும் அதனை தொடர்ந்து திருமதி சாந்தி சச்சிதானந்தம் (இருக்கிறம்) அவர்களின் உரையும் அவரை தொடர்ந்து வலையுலகு சார்ந்த டாக்டர். முருகானந்தா அவர்களின் உரையும் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து புல் தரையில் என அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வு புற் தரைதனிலே நிகழ்த்தப்படட்டும் என மீண்டும் அனைவரையும் ஏலவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இடத்திலேயே குடைகளுக்கு கீழ் ஒன்று கூட்டப்பட்டது. சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது.


மழை
சோவென பெய்ய தண்ணீரில் தண்ணீரோடு சில பதிவர்கள் இணைய, நிகழ்த்தப்பட்ட சில உரைகள் சிலர் காதுகளில் விழாமலேயே போனது வருத்தமே! மேலும், தண்ணீரில் நிகழ்ந்த தடுக்கமுடியாத இயற்கையின் அமைவை ஏற்றுக்கொள்ளலாம் என்ற போ
தும் தண்ணீரோடான நிகழ்வு தேவையா என்பது பலரின் ஆதங்கம்.இங்கே விஷேடமாக குறிப்பிடப்பட வேண்டியது திருமதி.
சாந்தி சச்சிதானந்தம் அம்மையாரின் உரை. ஆம் பெண்கள் ஆண்களுக்கு நிகர் என சொல்லப்பட்டாலும் இவ்வாறான துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. அவ்வாறான ஒரு நிலையைத் தாண்டி பெண்களால் முடியும் என ஊக்குவிக்கும் வகையில் அவரது உரை வரவேற்கத்தக்கது.


மேலும்
லோசன்
அண்ணா, மருதமுரான் ஆகியோரின் உரையை தொடர்ந்து திரு.வித்தியாதரன் (சுடரொளி) அவரின் அனுபவங்கள் பகிரப்பட்டது. அதனை தொடர்ந்தும் பல கருத்துக்கள் பகிரப்பட்டது. மேலும் வேறொரு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்தபடியால் இடை நடுவே அங்கிருந்து புறப்பட்டது வருத்தமே என்றாலும் அனைவரையும் சந்திக்க கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.மீண்டும் நம் வலைப்பதிவர் சந்திப்பில் சந்திப்போம் என கூறி விடைபெருகின்றேன்.
நன்றி

Comments

உங்களை எல்லாம் சந்திக்க கிடைத்தது மகிழ்ச்சியே மற்றும்படி நேற்று பெரிதாக சொல்லிக் கொள்ள ஏதுமில்லை...
உண்மை யோகா. இதைப் பற்றி பதிவிட மனமில்லை. பதிவர்களை சந்திக்கக் கிடைத்ததில் மட்டுமே மகிழ்ச்சி. பதிவர்கள் சாமான்ய மனிதரிலிருந்து சற்று விலகி தங்கள் குரல்களை சமூக நலனுக்காக பயன்படுத்துவதாக ஓர் எண்ணம் இருந்தது. இப்போது இல்லை.

பதிவிற்கும், உண்மைகளை தெளிவாக உரைத்தமைக்கும் நன்றி சிந்தனா
Anonymous said…
//மன்னார் அமுதன் said...
பதிவர்கள் சாமான்ய மனிதரிலிருந்து சற்று விலகி தங்கள் குரல்களை சமூக நலனுக்காக பயன்படுத்துவதாக ஓர் எண்ணம் இருந்தது. இப்போது இல்லை.//

கொஞ்சம் தெளிவாக விளக்கவும். தண்ணிக்கும் சமூக அக்கறைக்கும் என்ன தொடர்பு?
நல்ல சுருக்கமான பதிவு.
பலரையும் காண முடிந்தபோதும் ஒவ்வொருவருடனும் அளவளாவ முடியவில்லை.
மழை கெடுத்துவிட்டத எனலாமா?
உண்மைகளை தெளிவாக உரைத்தமைக்கும் நன்றி
ஈழவன் said…
தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு! ஆகா அருமையான தலைப்பு.
வெள்ளிமலர் போட்டி இலக்கம் 9 - தலைப்பு "இருக்கிறம் அச்சுவலை சந்திப்பு" சமர்ப்பிக்க பூச்சரத்துக்கு வாருங்கள்
http://poosaram.blogspot.com/
தயவு செய்து உங்கள் Blogஇன் font color orBackground colour ai மாற்றுங்க ...ஒழுங்கா வாசிக்க முடியல.
Thanks
மேலும் லோசன் அண்ணா, மருதமுரான் ஆகியோரின் உரையை தொடர்ந்து சுடரொளி வித்தியாதரனால்

உங்கள் மரியாதை உங்களுடன். மு.மயுருனும் சுடரொளி வித்தியாரதன் என்று குறிப்பிட்டிருந்தார். அது என்ன? லோசன் அண்ணா.. வித்தியாதரன் மட்டும் சும்மா? வித்தியாதரன் போன்றவர்கள் வானோலியில் 1000 கருத்துப்பிழை உச்சரிப்புப்பிழை விட்டு வாசிக்கும் லோசன் போன்ற வெங்காயங்களுடன் உரையடவந்ததற்கு தேவைதான் இது. 1லட்சம் ருபா சம்பளத்திற்காக அரசவானொலியில் பணிபுரியும் லோசன் ஆரம்பகாலத்தில் சூரியன் எப்எம் தான் வெற்றி என்று சொல்லாமல் சொல்லிவந்தார்.
பதிவுகளை எழுதும்பாது பொறுப்புடன் எழுதுங்கள்.
//உங்களை எல்லாம் சந்திக்க கிடைத்தது மகிழ்ச்சியே மற்றும்படி நேற்று பெரிதாக சொல்லிக் கொள்ள ஏதுமில்லை...//

உண்மை தான் உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மீண்டும் நம் பதிவர் சந்திப்பில் சந்திப்போம்
//பதிவர்கள் சாமான்ய மனிதரிலிருந்து சற்று விலகி தங்கள் குரல்களை சமூக நலனுக்காக பயன்படுத்துவதாக ஓர் எண்ணம் இருந்தது. இப்போது இல்லை.//

அப்படியானால் நீங்கள் யார்....??? நீங்களும் ஒரு பதிவர் தானே??? உங்களை காயப்படுத்துவதற்காக இந்த கேள்வி இல்லை விளக்குவதற்காகவே

உங்கள் ஆதங்கம் புரிகின்றது ஆனாலும் நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள் இந்த ஒன்று கூடலில் பதிவர்கள் கலந்து கொண்டார்களே தவிர பதிவர்களால் ஒழுங்கு செய்யப்படவில்லை இது இருக்கிறம் சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாகும். அதனால் பதிவர்கள் சார்பாக நீங்கள் முன் வைக்கும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை
//நல்ல சுருக்கமான பதிவு.
பலரையும் காண முடிந்தபோதும் ஒவ்வொருவருடனும் அளவளாவ முடியவில்லை.
மழை கெடுத்துவிட்டத எனலாமா?//

நன்றி
ஆம் பலரையும் காண கிடைத்ததே மகிழ்ச்சி
//உண்மைகளை தெளிவாக உரைத்தமைக்கும் நன்றி//

உண்மைகள் உறங்குவதில்லை
வெண்காட்டான்

பொறுப்புடன் எழுதுங்கள் என்பதனை தெளிவாக விளக்குவீர்களா? எனது பதிவில் ஒரு பெரியவரை பெயர் கூறி எழுதியது பிழையாக கருதுவீர்களானால் அதனை எனக்கு தெரியப்படுத்துவீர்களானால் நான் திருத்திக் கொள்வேன் அதனை விடுத்து இன்னொரு தனி நபரை பற்றிய தவறான கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமை உங்களுக்கு இல்லை. மேலும் லோசன் அண்ணா அவர் திறமையை வைத்தே இன்றைய நிலையை அடைந்திருக்கின்றாரே தவிர யாரையும் நம்பியவராக அல்ல. அவருக்கு 1லட்சம் ரூபா சம்பளம் அவருக்கு வழங்கப்படுகின்றதென்றால் அவரின் வேலையின் முக்கியத்துவத்தை உங்கள் வேலையோடும் உங்கள் சம்பளத்தோடும் ஒப்பிட்டு உங்களை உயர்த்த முயற்சி செய்யுங்கள்
LOSHAN said…
மனதில் பட்டதை சொல்லி உள்ளீர்கள் கீர்த்தி..
எனது கருத்தை ஏற்கெனவே என் பதிவில் சொல்லி விட்டேன்.:)
உங்கள் பதிவுகளை எல்லாம் வாசித்த பின்னரே என் பதிவை இட்டேன்.

அது சரி, யார் இந்த வெண்காட்டான்?
என்னோடு ஏதாவது தனிப்பட்ட கோபம் இருக்கா?
என்னைப் பற்றி முழுமையாகத் தெரியாமலேயே இரண்டு மூன்று இடங்களில் கருத்து சொல்கிறேன் என்று காழ்ப்பு காட்டி உள்ளார்.

//விட்டு வாசிக்கும் லோசன் போன்ற வெங்காயங்களுடன் உரையடவந்ததற்கு தேவைதான் இது. 1லட்சம் ருபா சம்பளத்திற்காக அரசவானொலியில் பணிபுரியும் //

வேடிக்கை.. என்னைப் பற்றி எனக்கும் தெரியும். என் நண்பர்கள்,ரசிகர்களுக்கும் தெரியும்..
நீங்கள் சொன்ன சம்பளக் கணக்கும் பிழை.. :) அதை விட அதிகம்..

முதலில் கொஞ்சம் இலங்கை வந்து வானொலிகளைக் கேளுங்கள்..

அதற்கு முதல் உங்கள் எழுத்துப் பிழைகளையும் அவதானியுங்கள்..

நன்றி கீர்த்தி உங்கள் பதிலுக்கு..
//மனதில் பட்டதை சொல்லி உள்ளீர்கள் கீர்த்தி..//
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! என் மனதில் பட்டதைதே எழுதினேனே தவிர யார் சொல்லியும் எழுதவில்லை.

//அது சரி, யார் இந்த வெண்காட்டான்?
என்னோடு ஏதாவது தனிப்பட்ட கோபம் இருக்கா?//
எனக்கும் இவர் யாரென தெரியவில்லை முகம் காட்ட விரும்பாத நபராக இருக்கின்றார் போல எனக்கும் அப்படி தான் தோன்றுகின்றது ஆனால் தனிப்பட்ட கோபங்களை காட்டுவதற்கான இடம் இதுவல்ல என்பதை தெரியப்படுத்துகின்றேன்

//லோசன் போன்ற வெங்காயங்களுடன் உரையடவந்ததற்கு தேவைதான் இது.//

இது போன்ற வெளிபாடுகள் ஒருவரின் வெற்றிக்கான முயற்சிகளை தூண்டுவதற்கான செயற்பாடுகளாக கொண்டு முன்னேறுவோம். மேலும் எழுத்துப்பிழைகள் அனைவருக்கும் ஏற்படுகின்றது அனைவரும் திருத்திக் கொள்வோம்

நன்றி
சூரியன் சக்தியில் 2 முஸ்லீம் அறிவிப்பாளர்கள். ரவுப் மற்றும் ஒருவர் மற்றும் ஒருவர் தான் ஒழுங்காக தமிழ் உச்சரிப்பது.அடுத்ததாக படி சூரியனில் நிசாந்தினி ஓரளவிற்கு பறவாயில்லை. லோசன் மற்றும் காலையில் முக்கிக்கொண்டு ஆங்கிலம் பேசத்தெரிந்ததாக காட்டிக்கொள்ள பத்திரிகை செய்தி படிக்கும் இன்னொருவர்(பெயர் ஞாபகம் இல்லை, ஆனால் சூரியனிலிருந்து வெளியேற்றபட்டவர்களில் ஒருவர்) எல்லாம் நான் வானொலி கேட்கும் போது காலையில் இவர்கள் குரல்களை கேட்டாலே எனக்கு ஏறும். அந்தகாலத்தில் இவர்கள் இவ்வளவு பிரபல்யம் இல்லை. ஆகவே என் கோபம் பிரபல்யம் அடைய முன் வந்தது.
தயவு செய்து உங்கள் கிறிக்கட் வர்ணனையோ அல்லது காலையில் நீக்கள் வாசிக்கும் நிகழ்ச்சி ஒன்றை பதிவிடுங்கள். அதில் எத்தனை பிழை உள்ளது என்று நான் சொல்கிறேன். ஒரு பிழை இல்லாவிட்டால் வெண்காட்டான் என்ற மின்னஞ்சலையே பாவிக்காமல் விடுகிறேன். மற்றும் படி உங்களின் ஆரம்ப சம்பளம் தான் நான் குறிப்பிட்டது. வெற்றி பண்பலை யாருடையது என்று நான் உங்களிடம் கேட்கும் போது நீங்கள் மழுப்பலாக சொன்ன பதில் எனக்கு ஞாபகம் உள்ளது. எனினும் சூரியன் மீண்டும் வருகிறது என்று பரப்பிய கதைக்கும் உங்களை அங்கு பணியாற்ற வைத்ததுக்கும் நிறைய ... உள்ளது. லோசன். உங்கள் தமிழ் உச்சரிப்பையும் அதில் ஆங்கில கலப்பையும் மக்களை ஏற்றுக்கொள்ள வைத்த உங்களிலும் உங்களையெல்லாம் வைத்து மக்களை ஏமாற்றிய சத்தி சுரியன் மீது தான் என் கோபம். மற்றும் படி எனக்கு ஒரு தொளிவு உண்டு. அறிவிப்பாளர்களுக்கு தங்கள் விசிறிகளால் தான் மதிப்பு. ஆனால் உங்களுக்கு தொலைபேசி எடுத்து பேசும் 95வீதமானோர் வீட்டில் வேலை வெட்டி இல்லாதவர்கள்தான். இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியவர்களின் கால்துசிக்குக் கூட நீங்கள் இல்லை.(தற்காலத்திய அறிவிப்பாளர்கள்).
லோசன் உங்களில் உள்ள கோபம் தற்கால ஒளிபரப்பாளர்கள் அனைவரின் மேல் உள்ள கோபம் தான்.தனிப்பட்ட கோபம் கிடையாது. உங்களில் பொறாமை கிடையாது. காரணம் நீங்கள் திறமையானவர் என்று நான் நினைக்கவில்லை.
நான் உங்கள் வானொலி கேட்டது 2004வரை. பின்னர் புலம்.
வெற்றி பண்பலை உங்களை ஒரு முதலீடாகத்தான் கருதியது. உங்களின் புகழே அவர்களின் அரசியல் ஏமாற்றுகளை மக்கள் அறிய பயன்பட்டது. லோசன் ஒரு பதிவே எழுதலாம். வேண்டாம். விடுங்கள். பிள்ளை குட்டி எல்லாம் உங்களுக்கு இருக்கு. பணம் அனைவருக்கும் பொதுவானது. தொழில் காரணமாக நீங்கள் அங்கு வேலைசெய்வதை தான் குற்றம் கூறவில்லை. எல்லாம் ஒரு ஆதங்கம் தான்.
சின்ன பரீட்சை... சக்தி தொலைக்காட்சியில்..
2 எதிர் எதிர் கருத்துக்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதும்.. என்று ஒரு நிகழ்ச்சி வரும். இதில் என்ன பிழை என்று உங்களால் சொல்லமுடியுமா?
(குரல் ந.குருபரன்.) இப்படி 1000 பிழைகள். அந்த கொலைவெறியின் தாக்கம் இன்னும் இருக்கிறது. மற்றும் படி உங்கள் வாரிசுகள் கனடாவிலும் வானோலியில் பிச்சு உதறுவதாக கேள்வி. இரட்டை அர்த்தத்துடன் சக்தி சூரியனை திறம் என சொல்ல வைக்கிறார்களாம்...
// வெகு சீக்கிரத்தில் பதிவர்களுக்கான ஒன்றுகூடலானது ஒழுங்கு செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

விரைவில் எதிர்பார்க்கிறோம். :)
LOSHAN said…
வெண்காட்டான்,
உங்கள் பின்னூட்டத்தில் நிறைய குழப்பங்களை அவதானித்தேன். எதையோ நினைத்துக் கொண்டு எங்கேயோ இடிக்கிறீர்கள்.

ந.குருபரன் சக்தியில் பணியாற்றியவரே கிடையாது ..

எங்கள் வானொலி எந்தவிதத்திலும் அரசாங்கத்தினால் உரிமை கோரப்படுவது கிடையாது.
மற்றொரு வானொலி போல அரசாங்கத்தின் அங்கத்தவரின் அண்ணனின் வானொலியும் இல்லை.

எமது உரிமையாளர் ஒரு வர்த்தகர் மட்டுமே. தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள்.
ஜனாதிபதியுடன் இன்று எல்லா பிரமுகர்களும் நெருக்கம்.அப்படி ஒரு நட்பு மட்டுமே எம் நிறுவனத் தலைவருக்கும் உள்ளது.

எங்கள் செய்திகளையும் அண்மைக் காலத்தில், குறிப்பாக ஏப்ரல்,மே மாதங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது எங்களை அவதானித்திருந்தால் எமது நிலை, நோக்கு, பின்னணி சரியாகப் புரிந்திருக்கும்.
நீங்கள் தான் கேட்பதில்லையே?

அரசியல் தலையீடு எதுவுமே இங்கே இல்லை..

என் நிகழ்ச்சியில் பிழை பிடிக்கவேண்டுமாக இருந்தால், திங்கள் முதல் வெள்ளி வரை இணையத்தில் காலை ஏழு மணிமுதல் பத்து மணி வரை கேளுங்கள்.
www.vettri.lk


//இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியவர்களின் கால்துசிக்குக் கூட நீங்கள் இல்லை.(தற்காலத்திய அறிவிப்பாளர்கள்).
லோசன் உங்களில் உள்ள கோபம் தற்கால ஒளிபரப்பாளர்கள் அனைவரின் மேல் உள்ள கோபம் தான்.தனிப்பட்ட கோபம் கிடையாது. உங்களில் பொறாமை கிடையாது. காரணம் நீங்கள் திறமையானவர் என்று நான் நினைக்கவில்லை.//

இப்படி எல்லாம் சொல்லிவிட்டு எந்தக் கோபமும் இல்லை என சொல்கிறீர்களே, உங்களுக்கே வேடிக்கையாக இல்லை?
நீங்கள் களத்துமேட்டிலே இட்ட பின்னூட்டமும் பார்த்தேன்..
அதற்கெல்லாம் என்ன சொல்கிறீர்கள்?

2004இல் புலம் பெயர்ந்த பிறகு இங்கு எந்தவொரு வானொலியும் கேட்காமலேயே கண்மூடித் தனமாக விமர்சனம் செய்யும் (இது விமர்சனமே இல்லை.. தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி) உங்களை என்ன சொல்லலாம்..

முதலில் வானொலி கேளுங்கள்.. நான் /நாம் என்ன செய்கிறோம் என்று அறியுங்கள்..

நான் விமர்சனங்களை எதிர்கொள்ள என்றுமே தயங்காதவன்..அவை விமர்சனமாக இருக்கும் பட்சத்தில்..

உங்களுக்கு உங்கள் தரக்குறைவான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு நான் பதில் சொல்லி என் காலத்தை வீணடிக்கத் தேவையில்லை.. ஆனால் வாசிப்பவர்கள் உங்கள் போலி குற்றசாட்டுக்களால் ஏமாற்றமடையக் கூடாது என்பதாலேயே இந்த நீண்ட பதில் பின்னூட்டம்..

கீர்த்தி, உங்கள் பதிவை திசை திருப்பியதற்கு வெண்காட்டானை மன்னியுங்கள்.
ramesh said…
வெண்காட்டான்
உங்கள் பின்னூட்டம் எதற்கு என்று முதலில் சொல்லுங்கள். அதை விடுத்து ஒருவர் மீது உள்ள உங்கள் பிதற்றல்கள் வேண்டாம். திறமையை வாழ்த்த தெரியாத உங்களுக்கு எனது பின்னூட்டல் நீங்கள் இன்னும் வளரவேண்டும் என்பதற்கே .!
உங்களுக்கு ஒன்றை ஞாபகப் படுத்துகிறேன் "கடவுளைப் பற்றி அடிக்கடி நாத்திகமாக பேசுபவனே கடவுளை பற்றி அதிகம் பேசுகிறவன் மற்றவர்கள் அதை பற்றி சிந்திப்பதில்லை"( இந்த வசனத்துக்காக மீளவும் லோஷனை கடவுள் என்கிறேன் என்று எழுதாதீர்கள் ஏனெனில் எல்லாம் உங்களுக்கு சொல்ல வேண்டி இருக்குது )
தமிழைப் பற்றி கதைக்கும் முன்னர் தமிழ் எழுத்துக்களை சரியாக தட்டச்சிடுங்கள்... உங்கள் எழுத்தின் வண்ணத்தில் தெரியுது எவ்வாறு தங்கலிஷ் பேசுவீர்கள் என்று.
புலம் தானே நீங்கள் பிறகு என்ன பொய் என்றாலும் ஒரு பெயர் வைக்கலாமே ஏன் வெண்காட்டான் காடு என்றாலே கருப்பு நீங்க இன்னும் வெள்ளையாய் .....
kiruthikan, உங்கள் தளத்திற்கு வருகை அதிகம் தேவை என்றால் நீங்கள் வழமைபோல ஒரு கிளு கிளு கதை போடுங்கள். வளர்ந்துவரும் பதிவர். பின்னனி இல்லாத பதிவர்.. ஆகவே உங்களை அதிகம் தாக்க விரும்பவில்லை.
லோசன், ஊடகவியலாளராக உங்களுக்கு இருக்கும் புகழ் கண்டு எனக்கு நிச்சயமாக பொறாமையே.. ஒரு மாயத்தோற்றத்திற்குள் இருந்து நீங்கள் வாழ்கிறீர்கள். உங்கள் இருக்கிறம் பற்றிய வலைப்பதிவு பார்த்தேன். ஏளாமான மறுமொழிகள். நிச்சயமாக வயிற்றறிச்சல் தான்.
வித்தியாதரனை குறைசொல்லும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி... வி்த்தியன்னைக்கு இது தேவைதான்.
நீங்கள் குறிப்பிட்ட தலையங்கள் எல்லாம் சுடர்ஒளியில் வந்தவை. அதற்கு பொறுப்பானவர் இரத்தினசிங்கம். வயதான திறமையான துணிவான ஆசிரியர். அதுதான் ஊடகம். விளப்பரதாரர்களுக்கும் ஆசிரியர் பீடத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அது தான் ஊடகம். அவரின் தலையங்கள் நகைப்புக்கிடமானவையாக இருக்கலாம். அவரின் வயது அப்படி. ஆனால் ஊடகம் ஊடகம் என்று புகழ் பெற்ற உங்களுக்கு சுடரொளி ஆசிரியர் யார் என்று கூட தெரியதா அளவு தான் உங்களின் ஊடக அறிவு. தயவு செய்து உங்கள் வாய்வித்தைகளை வானொலியில் வைத்துக்கொள்ளுங்கள். ஏழுத்தில் விட்டால் இப்படித்தான் அவமானப்படநேரிடும்.
நான் குழப்பத்தில் தான் இருக்கிறேன். தன்னை எந்தவிதத்திலும் யாருக்கும் விலைபோகாத ஊடகத்துறையே புகழும் விருதுகள் பெற்ற ஊடகவியலாளர்களை ஏனையா நீங்கள் இப்படி வதைக்கிறீர்கள். வெற்றி யாருடையது என்பது உலகறிந்த உண்மை. வெற்றி விளம்பரத்தில் ஏன் மிகின் எயர் விமானத்தின் படம் வரவேண்டும். மீண்டும் உங்கள் வாதங்களை உங்களின் முட்டாள் இரசிகர்களிடம் வைத்துக்ககொள்ளுங்கள்.
அது சரி. நான் கேட்டதற்கு பதில் இல்லையே? உங்கள் நிகழ்ச்சி ஒன்றை பதிவேற்றுங்கள். அதில் வரும் பிழைகளை நான் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
வெண்காட்டானின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்ககூடியவை.
LOSHAN said…
வெண்காட்டான் உங்கள் காட்டுத் தனமான கேள்விகளுக்கு பதில் என் தளத்திலே கொடுத்துள்ளேன்..

//வெற்றி விளம்பரத்தில் ஏன் மிகின் எயர் விமானத்தின் படம் வரவேண்டும். ..//

விளங்காமல் உளறாதீர்கள். அது நாங்கள் நடத்திய ஒரு போட்டி நிகழ்ச்சி. விமானப் பயண சீட்டுக்களை வழங்கி அனுசரணை வழங்கியது மிகின் எயார்.

தவிர இலங்கை வந்து பன்பலைகளைக் கேட்டால் எந்த தமிழ் வானொலியில் அதிகம் மிகின் எயார் விளம்பரங்கள் ஒலிக்குது என்று தெரியும்.

//மீண்டும் உங்கள் வாதங்களை உங்களின் முட்டாள் இரசிகர்களிடம் வைத்துக்ககொள்ளுங்கள்.//

நீங்கள் முட்டாளாக இருக்கலாம் .. மற்றவரை முட்டாளாக்காதீர்கள்.எரிச்சலாக இருந்தால் தீரும் வரை தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள்.
இல்லை யாரும் வராத உங்கள் தளத்திலே என்னைத் திட்டி பதிவேற்றி உங்கள் மன சொறியையும் அரிப்பையும் தீர்த்துக் கொள்ளுங்கள்.


இன்னுமொன்று - மற்றவர்களில் தமிழ் பிழை, தகுதி பிழை பிடிக்க முதல் சுய முகத்தோடு வாருங்கள்.. உங்கள் எழுத்துப் பிழை, தமிழ்ப் பிழை, மனப் பிழைகளை திருத்திக் கொள்ளுங்கள்..
LOSHAN said…
என். கொ. சார்.. உங்கள் ரசனை இவரிடமிருந்து மிகத் தூரமைய்யா.. நீங்கள் எதைக் கவனத்தில் எடுக்கலாம் என்று விளக்கமாக சொல்லுங்கள்.
//kiruthikan, உங்கள் தளத்திற்கு வருகை அதிகம் தேவை என்றால் நீங்கள் வழமைபோல ஒரு கிளு கிளு கதை போடுங்கள். வளர்ந்துவரும் பதிவர். பின்னனி இல்லாத பதிவர்.. ஆகவே உங்களை அதிகம் தாக்க விரும்பவில்லை.//

கிருதிகன் என குறிப்பிட்டது என்னையா? நான் கிருத்திகன் இல்லை என் பெயர் கீர்த்தி. மேலும் கிளு கிளு கதைகளை போட்டுத் தான் வருகை சேர்க்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை, என் பதிவுகளை வாசிக்கும் பதிவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அப்படியான கிளு கிளு கதைகள் போட்டுத்தான் உங்கள் தளத்திற்கான வருகை சேர்த்தீர்களோ?

என்னை அதிகம் தாக்க விரும்பவில்லை என்றால் யாரை தாக்குவதற்கான முயற்சி இது??? இவ்வாறாக அடுத்தவரின் நிலையை பற்றிப் பேசி பேசியே தான் இன்று தமிழன் அனாதைகளாக நிறுத்தப்பட்டுள்ளான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்

லோஷன் அண்ணாவை இத்தனை கேள்விகள் கேட்கின்றீர்களே.... தமிழருக்காக நீங்கள் செய்தது தான் என்ன? உங்களால் உங்கள் சொந்த பெயரையே தெரிவிக்க முடியவில்லையே என்பது வருத்தம்

நான் ஒரு பெண்ணாக என் பெயரை என் படத்துடன் தெரிவித்திருக்கின்றேன் இதிலிருந்து உங்களுக்கு என்னை பற்றி விளங்கி இருக்குமே. பின்னணி இல்லாதவரென குறிப்பிட்டுள்ளீர் ஆனால் எனக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களை விட அதிகமே இருக்கின்றது. தவறுகள் நடக்கும் இடத்தில் தட்டிக்கேட்பது நியாயம் தான் அதை மறைவிலிருந்து செய்ய வேண்டியதில்லையே உங்களில் உண்மை இருந்தால் எதற்காக இந்த ஒழிவு விளையாட்டு.

நான் யாருக்கும் சார்பாக பேசவில்லை எனக்குள் தோணுவதை சொல்லுகின்றேன்
தூங்கும் நேரத்தில் பதிலளிக்க வேண்டிய நிலைமை.
கீர்த்தி: உங்களை தாக்கவில்லை. கீர்த்திகனைத்தான் குறிப்பிட்டேன். மன்னிக்கவும். தவறை முதலில் குறிப்பிட்டேன். என் தவறுதான்.
வருகைக்காக எதுவும் எழுதலாம். கீர்த்திகன் அப்படி ஒர் பதிவு இட்டிருந்தார். அவ்வளவுதான். உங்கள் ரசிகர் லோசனை நான் உங்கள் தளத்தில் தாக்க இடமளித்தற்கு நன்றி. காரணம் லோசனுக்கு நேரடியாக நான் இட்ட பதில்கள் அனைத்தும் வெளிவரவில்லை. என் தளத்தை பார்த்தவர்கள் 699 பேர் மட்டும் தான். எனக்கு பிடித்த அரசியல் மட்டுமே அதில் உள்ளது.
என்னை வெளிக்காட்டுவத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றது. உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன். சிறிலங்கா அப்படி ஒரு சிறந்த நாடு. ஆகவே என்னை மறைப்பதை பற்றி விவாதிப்பது பயனில்லை.
அடுத்து குறைகூறுவது..
கீர்த்தி நீங்கள் மதிப்பு வைத்திருக்கும்லோசன் வித்தியாதரனை விமர்சிக்கும் அளவிற்கு தகுதியானவர் இல்லை. அதனால் தான் எனக்கு அவர் மேல் காட்டுத்தனமாக கோபம். லோசன் எனக்கு 1-2 வயது குறைவு. ஒரே கல்லூரி.
உதாரணத்திற்கு.. அவர் சொன்னதை பாருங்கள். சுடரொளியில் வந்த தலைப்புக்கள் இரத்தினசிங்கம் எனும் மூத்த ஊடகவியலாளர் எழுதியது. அவரின் பாணி அது. சிலவிடயங்கள் மாற்றமுடியாது. மற்றும் படி அவர் ஒரு நேர்மையான ஊடகவியலாளர். லோசனும் ஊடத்தில் உள்ளவர் என அவர் பேசும் அளவிற்கு வெற்றி பண்பலையில் இயக்குனர் என்ற அளவிற்கு சுடரொளியில் யார் ஆசிரியர் என்று கூட தெரியாது தான் அவரின் ஊடக அறிவு. அப்படிபட்ட அறிவை வைத்துக்கொண்டு மேதாவித்தனமாக பேசக்கூடாது. தன்னடக்கம் வேணும்.
வித்தியாதரனோ இரத்தினசிங்கமமோ விளம்பரதாரர்களுக்காக செய்திகளையோ நிகழ்சிகளையோ மாற்றியமைக்கும் வியாபார ஊடகர்கள் அல்ல. ஊடகத்துறையில் என்றும் குறிப்பிடத்தக்க அளவிற்கு நேர்மையாகவே இயங்குகிறார்கள். இதற்காக லோசனை குறைகூறவில்லை. ஊடகங்களில் லோசனுக்கு இருக்கும் இரசிகர்கள் அளவு அவரின் சம்பத்தையும் அவர் நடத்தும் நிகழ்ச்சியில் இடம்பெறும் விளம்பர வருமானத்திற்கும் தொடர்பு உள்ளது. அப்படிப்பட்ட ஊடகம் உதயன் சுடரொளி. ஒரளவிற்கு விளம்பரங்கள் தான் ஆதிக்கம் செலுத்தினாலும் முழுமையாக கிடையாது. மற்றும் படி ஒளிபரப்பாளராக இருந்து சினிமா பாட்டு போட்டவர்கள் எல்லாம் மீடியா ஜடி வைத்திருந்தால் ஊடகவியலார் கிடையாது. எனக்கு வந்த காட்டுத்தனமாக கோபத்திற்கு காரணம்


என் ஒலிபரப்புத் ......குருபரன் அண்ணா ஆகியோரது குரல்வழியான சந்திப்பு என்று மகிழ்ச்சிக்குரிய பல நிகழ்வுகள்..


அவரது துணிச்சலுக்காகவும் சில விஷயத் தெளிவுக்காகவும் நான் மிக மரியாதை வைத்துள்ள வித்தியாதரன் அவர்கள் குறிப்பிட்ட பல விஷயங்கள் உண்மையாக இருந்தாலும், இலங்கையில் செய்தி தாள்களில் புதுமை புகுத்துகிறோம் என்று, இந்திய சஞ்சிகைகளின் பாணியில்
"அராலியில் நேற்று டுமீல்", "கொழும்பில் பகீர்" என்று தலைப்பு செய்திகளை வேடிக்கை ஆக்கியவர் என்று எனக்கு அவர் மீது தனிப்பட்ட விமர்சனமும் உள்ளது.

என்று எழுதியது தான்.
கீர்த்தி, மேல் குறிப்பிட்டதும் இதற்காகத்தான்.
இவர் விமர்சிக்கும் அளவிறகு வித்தியாதரன் இல்லை. இவரளவிற்கு இவர் பணி செய்யும் இடத்திற்கு விசுவாசம் யாருக்கும் கிடையாது.
இறுதியாக.. வெற்றி வானொலி இவர் போல தனியாருடையதாக இருக்கட்டும் நான் உண்மைப்பெயரிலே எழுதுகிறேன்.
மற்றம் படி கீர்த்தி.. உங்கள் லோசன் அண்ணாவின் பதிலுக்கு பிறகு தான் உங்களுக்கு என்மேல் கோபம் வந்ததா? ஏன் என் பதிலை வெளியிடும் பேர்த வரவில்லை.(just joking. no hard feelings.) again sorry for the keerthigan name mistake.)
அடுத்தவர்களை தாக்கவில்லை. ஆனால் இவர்களைப்போன்றவர்கள் தங்களை அதிமேதாவிகளாக காட்டிக்கொள்வதே என்னை காட்டுத்தனமாக கத்தவைக்கின்றது. என் எழுத்துப்பிழைகளுக்கு ஆங்கிலத்தில் அடித்து தமிழ் வருவதே காரணம்.
summery: i got mad because clowns like loshan think they are the kings of media and talk anything.
it if hurts u. sorry. kirthi.

Loshan: i will write a long blog about all the radio jourlisists. U said kuruanna is worked together with u.. he is not. he did a good job. and a proper job to tamils. not like u, to go behind vettiFM and protect it. everyone knows who owns it. if u can proof it is not owned by him, I quit from distrubing you.
again dont use sorry and arippu words in radio. I thought u must have developed in useing some good words. I still remember u did some program with full of these type of words. r u crazy? (I have to type in english because I am not good in Tamil.

Again, when those type of news lead appears in sudaroli, Mr. ratnasingam is in charge of Sudaroli. vithi anna was charge of uthayan. in ur blog u said Ratnasingam was working under Vithi anna. it never happend. pls losan, again u proved ur vast knowledge in media. lol.
keep it up.
//கீர்த்தி: உங்களை தாக்கவில்லை. கீர்த்திகனைத்தான் குறிப்பிட்டேன்.//
அவருக்கு கூறுவதானால் அவரின் தளத்திலேயே குறிப்பிடலாமே? என் தளத்தில் கூறி என்ன ஆகப்போகின்றது? என்னை பொருத்தவரை தவறு செய்யாத மனிதனே இல்லை. அப்படி ஒருவன் இருப்பானேயானால் அவன் கடவுளாக இருப்பான்.

//உங்கள் ரசிகர் லோசனை நான் உங்கள் தளத்தில் தாக்க இடமளித்தற்கு நன்றி.//
அவர் என் ரசிகன் என நான் குறிப்பிட்டேனா? எனக்கும் லோஷன் அண்ணாவிற்கும் வலைப்பதிவர்கள் என்பதை தவிர எந்தவிதத்திலும் தொடர்பு இல்லை. மேலும் வயதில் மூத்தவர்களை அண்ணா என அழைப்பதில் தப்பில்லை என நான் நினைக்கின்றேன். நீங்கள் ஏலவே குறிப்பிட்டிருந்தபடி வித்தியாதரன் அண்ணாவை பெயர் சொல்லி அழைத்திருந்தது தவறென ஏற்று அதை திருத்திக் கொண்டேன். அப்படியே என் தளத்தில் எனது பிழைகளை சுற்றிக் காட்டுவீர்களானால் சந்தோசப்படுவேன். ஏனையோரை என் தளத்தில் வைத்து தாக்குவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

//உங்கள் லோசன் அண்ணாவின் பதிலுக்கு பிறகு தான் உங்களுக்கு என்மேல் கோபம் வந்ததா? ஏன் என் பதிலை வெளியிடும் பேர்த வரவில்லை//
நான் அவரை அண்ணா என அழைப்பதில் உங்களுக்கென்ன சிரமம்??? உங்களை யாரென்றும் தெரியாது, உங்கள் வயதும் தெரியாது, பின் உங்களை நான் யாரென அழைப்பது? லோஷன் அண்ணாவின் பதிலை தொடர்ந்து தான் கோபம் வந்ததா என கேட்கின்றீர்கள் எனக்கு கணனி முன் இருப்பது மட்டுமே வேலை இல்லை நேரம் கிடைக்கும் போது தான் பதில் எழுத முடியும் மேலும் உங்கள் கேள்விக்கான பதிலையே தெரிவித்தேனே தவிர கோபத்தில் எழுதவில்லை.

மேலும் லோஷன் அண்ணாவை நான் லோஷன் என எழுதியிருந்தாலும் அவர் என் மேல் கோபித்திருக்க மாட்டார் மாறாக வயது குறைந்ததென சந்தோசப்பட்டிருப்பார்.

லோஷன் அண்ணாவின் மேலும் கீர்த்திகன்(அவரையும் எனக்கு யாரென தெரியாது) மேலும் காட்டும் கோபத்தை தமிழை அழிப்பவர்கள் மேல் காட்டியிருப்பீரானால் தமிழனுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

தமிழரை தாக்குவதை விடுத்து தமிழ் வளர்க்க ஏதாவது செய்யுங்கள்

இது அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். உங்களை சந்திக்க முடியுமா???
மீண்டும் என்னை லோசன் விசர் வர பண்ணீடார்...
சக்தியின் ஆரம்ப கால ஸ்தாபக உறுப்பினராம் தான்.. என்ன கொடுமை... ஸ்தாப உறுப்பினர் என்றால் அரம்பித்தவர்கள். அதில் ஆரம்பகால பிற்கால என்று கிடையாது. இப்படித்தான் என்னை லோசன் வெறுக்க வைத்தவர்... (கல்லூரியில் நண்பர் கூட)

மற்றது ஸ்தாபக உறுப்பினர் என்றால் சக்தியை ஆரம்பத்தவர்கள். அதில் பணியாற்றியவர்கள் இல்லை. லோசன் முதலிட்டு ஆரம்பித்தாரா சக்தியை?? பிளீஸ் கொஞ்சம் விளக்குங்கள்? தற்போது என் கோபம் விளங்கும் என நினைக்கிறேன்.

......
irukkiram.tk
http://irukkirammagazine.blogspot.com/2009/11/blog-post_02.html
இல் என் கருத்துக்களை பார்க்கலாம். அம்மா தாயே சந்திக்க மாட்டன். நீங்கள் லோசனிடம் என்னை காட்டிகொடுத்துவிட்டால்? (தமிழனின் புத்தி அதுதானே) just joking... venkattan@gmail.com
mail me. lets have some good fight.. lol..
tc
(pls this is not a comment..
y u didnt post my comment? it is not fair. u can make corrections but u must post it.
Anonymous said…
Keerthi,

neengal oru poruppana Bloggera nadanthu kollavillai. Loshan naadarintha,anaivaralum etruk kollappatta oru Media personnel. yaaro sonthap peyarillatha oruvan avarai tharakkuraiva Loshanai vimarsikka neengal ungal Blogil idam koduththiruppathu thavaraanathu.

neengale thoondi vittu ungal Blogkku vilambaram thedureergalo ena santhegamum varukirathu?

yaar intha venkaattaan endru kaatta sollungal? ivarukku media, thamil patri enna theriyum?

Loshan has shown his dignity,responsibility and culture. Now its your turn to respect Loshan, our Sri lankan Tamil's identity.

one of his listeners and your readers

M.Sugitharan
சுகிதரன் உங்கள் ஆதங்கம் புரிகின்றது. ஆனாலும் நீங்கள் சொல்வது அத்தனையையும் அப்படியே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

//neengal oru poruppana Bloggera nadanthu kollavillai// எதை வைத்து சொல்கின்றீர்கள்? எனக்கு வந்த பின்னூட்டங்களை லோஷன் அண்ணாவிடம் காட்டிய பின்னர் அவர் கூறியே அந்தரங்கப்படுத்தினேன். மேலும் என் தளம் எந்த ஒரு தனி நபரையும் தாக்குவதற்காக பயன்படுத்தப்படுவதை கண்டிக்கின்றேன் என்பதோடு பெயரிழிகளை அனானிகளை நான் ஒரு பொருட்டாக எடுப்பதே இல்லை. உங்கள் கருத்தை கூற முகத்தை மறைத்து கொண்டு செயற்படுவதையிட்டு வெட்கப்படுகின்றேன் இப்படியும் பயந்த தமிழர்களா என வேதனை கொள்கின்றேன்.

//neengale thoondi vittu ungal Blogkku vilambaram thedureergalo ena santhegamum varukirathu?//
யாரை யார் தூண்டிவிடுவது? என் தூண்டலின் விளைவல்ல இது என்பது லோஷன் அண்ணாவுக்கும் தெரியும், வெண்காட்டானுக்கும் தெரியும். தவறை செய்தது யாராக இருந்தாலும் முகத்துக்கு நேரே சொல்லும் தைரியம் எனக்குண்டு.

இது சார்ந்து லோஷன் அண்ணாவையே பதிலளிக்க சொல்லட்டுமா? ஒருவரை தவறாக பேசுவது தவறென்றால் உண்மை தெரியாமல் பேசும் உங்கள் பேச்சும் தவறானதே!

வெண்காட்டான் யாரென சொல்ல சொல்கின்றீர்கள்... நீங்களே அனானியாக கருத்தளித்து... உங்களை முதலில் அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள் பார்க்கலாம். உங்களுக்கும் வெண்காட்டான் போல பயமா? உங்கள் மீதோ வெண்காட்டான் மீதோ தனிப்பட்ட பிரச்சினைகள் ஏதும் இல்லைதான் முகம் தெரியாதவர்கள் தான் நீங்கள் ஆனாலும் உங்கள் இருவரின் அனுகு முறைகளுமே தவறானவை

நம்மை திருத்திக் கொண்டு அடுத்தவரை பற்றி பேசுவதில் நேரத்தை செலவிடுவோம் இது யாரையும் புண்படுத்தவென சொல்லவில்லை உண்மை நிலையை சொல்கின்றேன்.

இனி என்னோடு பேசுபவர்கள் நீங்கள் வீரத்தமிழர் என்றால் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டு பேசுங்கள்.

நன்றி.
நீங்கள் என்னையும் இன்றெருவரையும் ஒரே ஆள் என்று சொல்லியிருந்தீர்கள். நான் அவன் இல்லை.. தாராளமாக நீங்க்ள என்னை தொடர்புகெள்ளலாம்...

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்