Posts

மன்னிப்பாயா

ரோஜாவை நேசிக்கும் மனங்கள்  எத்தனை முட்களுக்கு நடுவில் முட்டி மோதி அரும்பாய் துளிர்கிறது என்னும் வலியை நினைத்து பார்ப்பது கூட இல்லை - சிலர் வாழ்வும் அப்படித்தான் வெளித்தோற்றத்துக்கும் உணர்வுக்கும்  தொடர்பே இருக்காது  புறக்கணிக்கப்பட்ட வாழ்வில் புறம்பேசும் உறவுகளின் முன் முட்டி மோதி எழுந்து நிற்பதற்குள் சிலர் வாழ்வு முடிந்தே விடுகிறது என்னது ஏதோ ஒரு விளிம்பில் தொடுத்துக்கொண்டது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது இருந்தாலும், இதயத்தை குடைந்து எடுக்கும் வலி ஒன்று அவ்வப்போது வந்து போவது வழக்கமாகி போனது - மனசு நான் அடைந்த வலியை  யாருக்கும் கொடுத்துவிட கூடாது எனும் தெளிவில் தீர்க்கமாய் உள்ளது குத்திக்கிழிக்கும் வலி கொடியது  அதுவும் எனக்கு பிடித்த உனக்கு விரும்பியா கொடுத்திருப்பேன் என் அறியாமை, கோபம்  என் காதலையும் சேர்த்தே கல்லறைக்குள் தள்ளிவிட்டது மீளவும் முடியாமல் - முழுதாய் மூழ்கவும் முடியாமல்  தத்தளிக்கும் மனதுக்கு மருந்து நீ நலமாய் இருக்கிறாய் எனும் செய்தி மட்டுமே - நானே இல்லாமல் போனாலும் நீ மனம் தளராதே - மகிழ்வாய் இரு மன்னித்து விடு உனக்கு செய்த அத்தனைக...

தொட முடியாத தூரம்

எண்ணங்களின் ஓட்டம் எங்கோ செல்ல என்னை மெல்ல மெல்ல  சூழ்ந்துக்கொள்ளும் இருள் - நெஞ்சை இறுக பற்றிக்கொள்ளும் பயம் எதனால் என்று அறியாதிருக்க - நான் அறிவேன் என்ற பேரொளி, அச்சம் என்னை ஒருநொடி அனைத்து கொன்றது மெல்ல மெல்ல மெல்லிய ஒலியில் நீ யாரென்றேன் - உன்  மனம் தான் என்றது அது உலகமே அதிர உதிரம் உறைவதாய் அறிந்தேன் உதடுகள் ஏதோ முணுமுணுக்க அவயவங்களை அசைக்க முடியவில்லை மெல்ல மெல்ல மயங்கியே போனேன் மீண்டும் ஒரு கனவு கனவோ, என் நினைவுகளின் வண்ணமோ எனக்கு பிடித்தமான நினைவுகளை மட்டுமே கோர்த்து  வானவில்லாய் தொடுத்திருந்தது அழகிய கிராமம்  அதன் நடுவே சில வீடுகள் விளையாட்டு மைதானம் பள்ளி, மருத்துவர் என அத்தியாவசியமான சிலதும் உள்ளடக்களாக ஏனோ அந்த நினைவுகள் என்னை  மேலும் மேலும் இன்புற செய்தன தொடர்கிறேன் மயான அமைதி - தூரமாய் உன் குறுகிய கண்களோடு  சிரிக்கும் சிரிப்பின் எதிரொலி கேட்டுக்கொண்டே இருந்தது என் கண்களில் பிரகாசமாய் உன் உருவம்  மனம் முழுவதும் உன் ஆழமான நினைவுகள் நீ என்னை அருகில் வருமாறு அழைக்கிறாய் அப்படியே கண் விழிக்கிறேன்  தூரமாய் உன் உருவம் மறைந்து கொண்டிருந்தது...

கொள்ளாமல் கொள்ளும்

தூக்கம் வருடுவதாய் இல்லை - அந்த நீண்ட இரவில் நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தேன் அத்தனையும் உன்னை அணைத்தபடி! எந்த ஒரு நீண்ட பயணமும்  உன்னோடு தொடரவில்லை உன் கைவிரல் கோர்த்து எந்த காதல் நாடகமும் இடம்பெற வில்லை! அப்படி உனக்கு பிடித்த எதையும்  செய்ய நீ கேட்டதும் இல்லை என்னை முழுதாக பிடிக்கும் என்பதை மட்டும் அடிக்கடி என்னிடம் கூறுவாய்! அப்படி ஒன்றும் நான் சிறப்பானவள் இல்லை ஆடவர் மயங்கும் அழகும் என்னில் இல்லை இதை தாண்டி எந்த திறமையும் இல்லை இருந்தும்  உனக்கு என்னை பிடிக்கும் என்பது எனக்கே ஆச்சரியமாயிருக்கும்! அப்போதெல்லாம் உன்னைச் சுற்றி எத்தனை பெண்கள் - உன்னை காதலிப்பதாய் சொல்லியிருப்பார்கள் எல்லாம் விட்டு என்னை தேர்ந்தது ஏன்? புரியாமல் இன்றும் நான்! அப்படி உன்னை விரும்பிய யாரையாவது நீ தேர்ந்திருந்தால் உன் வாழ்வு  இன்னும் சீராயிருக்குமோ? - நான் அனைத்தும் பறித்து எறிந்ததாய் குற்றவுணர்வு எனக்குள்! உன்னோடான என் நாட்கள்  உனக்கு எப்படியோ.... பட்டாம்பூச்சியாய் மாறிப்போனேன் நான் என்னுள் பல்லாயிரம் மின்மினிகளின் பிரகாச ஒளி வீச்சு  பார்க்கும் திசையெல்லாம் உன் விம்பம் ...

நம்பிக்கை இல்லை

காயப்படுத்தி கடந்த பின்  மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடும்  என்னும் நம்பிக்கை எனக்கு இல்லை  எதுவும் இல்லை என்றானபின்  ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அனுதாப காதல் பொழிய விருப்பமும் இல்லை விரும்பிய ஒன்றை  விருப்பமில்லாமல் தொலைப்பதை விட வலி  வேறென்ன இருக்க முடியும் ஏதோ சந்தித்தோம்  காதல் செய்தோம்  காத்திருந்தோம் - காலத்தால் பிரிந்தோம் என்பதாகவா  நம் காதல் இருந்தது  எனக்கு உன்னையும்  உனக்கு என்னையும்  பிடித்ததற்கு இது தான் காரணம்  என நம்மாலே கண்டறிய முடியுமா? எனை கடக்கும் அத்தனையும் நீயாக உனை கடக்கும் எல்லாமே நானாக உருகி உருகி காதல் செய்து இயலாமையில் தொலைக்கவில்லை என் காதலை - உன் முயலாமையால் மட்டுமே என் முடிவுரையை நானாக எழுதிக்கொண்டேன் உன்னுள் வீரிட்ட வலி - எனக்கு  மட்டும் இல்லாமலா இருந்திருக்கும் எத்தனை வழிகளோடு  அத்தனை துணிந்திருப்பேன் எல்லாம் உன்னால் தான் என மொத்த பழியையும் உன்மீது திணித்து உத்தமியாக ஒருபோதும் எண்ணமில்லை என்ன நான் இன்னும்  கொஞ்சம் பொருத்திருக்கலாம் உன்னை கொஞ்சம் புரிந்திருக்கலாம் இப்படியாக,...

சிறகு விரியுமா?

எதுவாக வேண்டுமானால்  இருந்துவிட்டு போ  யாரோடு வேண்டுமானால் இருந்துவிட்டு போ என் மீதான காதலை  எனக்கு மட்டுமே பத்திரப்படுத்தி வை அது போதும் எனக்கு திகட்ட திகட்ட அன்பை தந்ததால் தானோ நீ என்னை சட்டை செய்யவும் இல்லை என்னோடு சண்டை போடவும் இல்லை உன்னை விட்டுச்செல்ல துளி எண்ணமும் இருந்ததில்லை உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க துணிவும் இருந்ததில்லை என்னை கண்டுகொள்ளாத கோபத்தில் உனக்கு என் காதலை உணர்த்தும் நோக்கத்தில் ஏதேதோ செய்து தொலைத்தேன் அப்போதும் நீ வரவே இல்லை தனித்து விடப்பட்டு தத்தளித்தே போனேன் என்னவனே! என் முட்டாள்தனம் எண்ணி என்னையே நொந்துகொள்கின்றேன் இன்று மனமுறுகி மண்டியிட்டு கேட்கின்றேன் மன்னிப்பாயா என்னை? மீண்டும் ஒரு முறை உன் காதல் வானில் என் சிறகுகள் விரிக்க இடம் தருவாயா?

காலம் கடந்தும் காதல்

ஏனோ என் காதல் மீது அத்தனை பிரியம் எனக்கு -அது இனம்புரியாத உணர்வை தந்துவிட்டு போகும் வெளியில் இருந்து பார்க்க எல்லாமே நன்றாக தான் தோன்றும் ஒருவருடனான ஆழ்ந்த உரையாடல் அதன் பின்னான நீண்ட மௌனம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு வலி... ஒரு ஏக்கம்... ஒரு இழப்பு... இருக்கத்தான் செய்யும் என்பதை புரியவைக்கும் எல்லா வாழ்வும் இனிமையாய் மட்டும் இருந்திடாது அப்படி இருந்தால் சில அற்புதங்களின் அருமை புரிந்திடாது சில இழப்புக்கள் ஏன் நிகழ்ந்ததென்று கிரகித்து முடிப்பதற்குள்  எல்லாம் முடிந்தே போய்விடும் - முழுதாய் தொலைந்தே போய்விடும் இங்கு யார் யாரை குற்றம் சொல்ல... வாழப்போவதை பற்றி பேசவே நேரம் கிட்டாத போது பிரிவைப்பற்றி சிந்தித்திருக்கவா போகிறோம் காலம் நம் காதலையும் விட்டு வைக்கவில்லை காலம் கடத்தியே காதலை கொன்றுவிட்டது இருந்தும், ஏனோ என் காதல் மீது அத்தனை பிரியம் எனக்கு -அது இனம்புரியாத உணர்வை தந்துவிட்டு போகும்!

மடல் ரசிகை

 மடல் காதல் தாண்டி  இப்போது தான்  அலைபேசி உலகுக்குள்  காலடி வைக்கிறது என் காதல்! இந்த உலகம் அழகாகத்தான் உள்ளது இருந்தும் எனக்கென்னவோ வரிகளுக்குள்ள சக்தி  வார்த்தைகளில் அவ்வளவாக இல்லை என்றே தோன்றும்! வேக உலகம் ஏனோ அதற்கு முழுதாக  மாறிப்போய்தான் உள்ளது நாம் மட்டும் என்ன விதிவிலக்கா? எதுவும் இல்லையென்றானபின் -பெரிதாக  எதை கேட்டுவிடப்போகின்றது மனசு கொஞ்ச நேரமாவது என்னிடம் பேசிவிட்டு போ என்பதை தவிர! என்றாவது உனக்கு  நேரம் கிடைத்தால்  எனக்காக இரு வரிகளையாவது எழுதிவிட்டுப்போ - நான் உன் வரிகளின் ரசிகை!