சிறகு விரியுமா?

எதுவாக வேண்டுமானால் 
இருந்துவிட்டு போ 
யாரோடு வேண்டுமானால்
இருந்துவிட்டு போ
என் மீதான காதலை 
எனக்கு மட்டுமே பத்திரப்படுத்தி வை
அது போதும் எனக்கு

திகட்ட திகட்ட அன்பை தந்ததால் தானோ
நீ என்னை சட்டை செய்யவும் இல்லை
என்னோடு சண்டை போடவும் இல்லை

உன்னை விட்டுச்செல்ல துளி
எண்ணமும் இருந்ததில்லை
உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க
துணிவும் இருந்ததில்லை
என்னை கண்டுகொள்ளாத
கோபத்தில் உனக்கு என் காதலை
உணர்த்தும் நோக்கத்தில்
ஏதேதோ செய்து தொலைத்தேன்
அப்போதும் நீ வரவே இல்லை
தனித்து விடப்பட்டு தத்தளித்தே போனேன்

என்னவனே! என் முட்டாள்தனம் எண்ணி
என்னையே நொந்துகொள்கின்றேன் இன்று

மனமுறுகி மண்டியிட்டு கேட்கின்றேன்
மன்னிப்பாயா என்னை?
மீண்டும் ஒரு முறை உன் காதல் வானில் என் சிறகுகள் விரிக்க இடம் தருவாயா?

Comments