நம்பிக்கை இல்லை

காயப்படுத்தி கடந்த பின் 
மன்னிப்பு கேட்டால்
எல்லாம் சரியாகிவிடும் 
என்னும் நம்பிக்கை எனக்கு இல்லை 

எதுவும் இல்லை என்றானபின் 
ஆறுதல் வார்த்தைகள் சொல்லி
அனுதாப காதல் பொழிய
விருப்பமும் இல்லை

விரும்பிய ஒன்றை 
விருப்பமில்லாமல்
தொலைப்பதை விட வலி 
வேறென்ன இருக்க முடியும்

ஏதோ சந்தித்தோம் 
காதல் செய்தோம் 
காத்திருந்தோம் - காலத்தால்
பிரிந்தோம் என்பதாகவா 
நம் காதல் இருந்தது 

எனக்கு உன்னையும் 
உனக்கு என்னையும் 
பிடித்ததற்கு இது தான் காரணம் 
என நம்மாலே கண்டறிய முடியுமா?

எனை கடக்கும் அத்தனையும் நீயாக
உனை கடக்கும் எல்லாமே நானாக
உருகி உருகி காதல் செய்து
இயலாமையில் தொலைக்கவில்லை
என் காதலை - உன் முயலாமையால்
மட்டுமே என் முடிவுரையை நானாக
எழுதிக்கொண்டேன்

உன்னுள் வீரிட்ட வலி - எனக்கு 
மட்டும் இல்லாமலா இருந்திருக்கும்
எத்தனை வழிகளோடு 
அத்தனை துணிந்திருப்பேன்

எல்லாம் உன்னால் தான் என
மொத்த பழியையும் உன்மீது
திணித்து உத்தமியாக
ஒருபோதும் எண்ணமில்லை

என்ன நான் இன்னும் 
கொஞ்சம் பொருத்திருக்கலாம்
உன்னை கொஞ்சம்
புரிந்திருக்கலாம்

இப்படியாக, 
காயப்படுத்தி கடந்த பின் 
மன்னிப்பு கேட்டால்
எல்லாம் சரியாகிவிடும் 
என்னும் நம்பிக்கை எனக்கு இல்லை 



Comments

Popular posts from this blog

29. தவிப்போடு ஒரு மனசு

ஹைக்கூ கவிதைகள்

தண்ணீரில் பதிவருடனான சந்திப்பு