ஏக்கம்

அன்பின் ஊற்றுத்தான்
ஆனந்த கானம் தான்
இன்பத்தின் வெள்ளம் தான்
இனியதொரு குடும்பம் தான்

இன்னிசை பயின்ற இனிமை காலம்
மின்மினி தேசத்து மிளிரும் ராதை
விதியின் விளையாட்டு திருப்பம்
உறவோடு உறையுளும் தொலைத்த நிலை

பணத்தின் மதிப்பு பாசத்திற்கில்லை
பற்றற்ற வாழ்வு பழக்கப்பட்டியல்
எட்டிய மன்னவன் எட்டிடும் துடிப்பு
ஏழை வீட்டு வைரக் கனவு

ஏக்கமும் தாக்கமும் இரு உலகம்
இருக்கையில் பறித்தல் இறைவன் தேடல்
பழக்கமும் வழக்கமாய் பாவி துடுத்தாள்
பக்கத்தில் உற்றவன் சுவாசம் பெறவே!

Comments

V.N.Thangamani said…
கவிதை நன்றாக வருகிறது.
மைய நோக்கத்தை இன்னும் கொஞ்சம்
கெட்டியாக பிடித்திருக்கலாம்.
நன்றி கீர்த்தி. வாழ்க வளமுடன்.

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

ஹைக்கூ கவிதைகள்

29. தவிப்போடு ஒரு மனசு