காதல் செய்வோம் வாராய்

சிறுக சிறுக சேர்த்து வைத்த சிந்தனைகளை
சிதறடிப்பதான் உன் வார்த்தைகள்
அவ்வப்போது சீற்றம் கொள்ளும்
மூர்க்கமான முன் கோபம் - என

எல்லாமே வதைத்தாலும்
கல்வெட்டாய் பதிந்து விட்ட
உன் நினைவு தழும்புகள்
நினைவுள்ள வரை நீங்காது என்னில் - நீ

அன்பின் சிகரம் அவ்வப்போது
உன்னால் துப்பப்படும் அமில விஷங்கள்
அனைத்தையும் செயலிழக்க செய்கின்றது
என்றாலுமே இன்று வரை - உன்

மீது கொண்ட காதல் உணர்வு
கறையாமல், குறையாமல்
கடந்து வருகி்ன்றன கண்மணியே
விண் முட்டும் ஒலியோடும் - கண்

தெறிக்கும் ஒளியோடும்
காதல் செய்வோம் வாராய்
வாழ்வின் வசந்தங்களை
வறுமையிலும் வசமாக்கிட!

Comments

காதலா? அப்படியென்றால் ?
Vijay said…
அரு​மையான கவி​தை கீர்த்தி காதலின் ஆழத்​தை நன்கு புலப்படுத்தியுள்ளீர்கள் காதல் வருவதும் சுகம்தான், காதலில் வலிகளும் சுகம்தான், காதலை சுமப்பதும் சுகம்தான், காதலில் சுமைகளும் சுகம்தான்
KANA VARO said…
///மீது கொண்ட காதல் உணர்வு
கறையாமல், குறையாமல்
கடந்து வருகி்ன்றன கண்மணியே
விண் முட்டும் ஒலியோடும் - கண்///

கண்மணியே… ஆண்கள் விழிப்பது தானே???? இதிகாசங்களிலும் புராணங்களிலும் இதைத் தானே செய்தார்கள். வித்தியாசத்திற்கு நீராவது ஆண்களை விழிக்களாமே…
Admin said…
//சிறுக சிறுக சேர்த்து வைத்த சிந்தனைகளை
சிதறடிப்பதான் உன் வார்த்தைகள்
அவ்வப்போது சீற்றம் கொள்ளும்
மூர்க்கமான முன் கோபம் - என

எல்லாமே வதைத்தாலும்
கல்வெட்டாய் பதிந்து விட்ட
உன் நினைவு தழும்புகள்
நினைவுள்ள வரை நீங்காது என்னில் - நீ அன்பின் சிகரம் //

இரசித்தேன்... நல்ல வரிகள்.
Admin said…
//வந்தியத்தேவன் said...
காதலா? அப்படியென்றால் ?//

புல்லட் அண்ணாவிடம் கேளுங்கள் இலங்கைக் காதல் மட்டுமல்ல பல நாட்டுக் காதலைப் பற்றியும் சொல்வார். ( நிறையவே அனுபவசாலி)

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

91.தமிழர் ஆடற்கலை வடிவங்கள்

29. தவிப்போடு ஒரு மனசு