பெண்களும் வன்முறைகளும்











இன்றைய
உலகம் எத்தனை தான் முன்னேற்றங்களைக்
கண்டு, எட்ட முடியாத தூரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் பெண்களைப் பாதிக்கும் வன்முறைகள் காலத்துக்கு காலம் வெவ்வேறு வடிவம் பெருகின்றனவே தவிர இன்றும் அதே அளவில் காணப்படத்தான் செய்கின்றன.

என்ன தான் பெண்களைப் பாதிக்கும் வன்முறைகளை ஒழிப்போம் என கோஷம் போட்
டாலும் குறையுரா நிலையில் அதன் நீட்சி அமைகின்றது. 1999ல் ஐக்கியநாடுகள் சபை தீர்மானித்தமையை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25ம் திகதியை "பெண்களைப் பாதிக்கும் வன்முறையை ஒழிக்கும் தினம்" என பெண்களுக்கானதொரு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டாலும் இன்றும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளே இல்லை. உலகளாவிய கணிப்பில் இவ்வாறான வன்முறைகளால் 70% பெண்கள் உடல் மற்றும் உள ரீதியில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது மூன்றில் இரு பெண்கள் வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.









பெண்களும்
வன்முறைகளும் என பார்க்கும்போது அதனை இருவகையாகப் பி
ரிக்கலாம். அவையாவன,
01. பெண்கள் மீதான வன்முறை
02. பெ
ண்களுக்கெதிரான வன்முறை

பெண்கள் மீதான வன்முறை
பகிரங்க அல்லது தனிப்பட்ட வாழ்வில் நிகழுகின்ற செயல்களின் அச்சுறுத்தல், பலவந்தம், சுதந்திரத்தின் எதேச்சையான பறிப்பு என்பன உள்ளடங்கலாக உடல், உள மற்றும் பாலியல் அல்லது துன்பத்தை விளைவிக்கின்ற அல்லது விளைவிக்கக்கூடிய பால் அடிப்படையிலான வன்முறையின் ஏதேனும் ஒரு செயற்பாடு பெண்கள் மீதான வன்முறை ஆகும்.










பெண்களுக்கெதிரான வன்முறைகள்

சமத்துவம், அபிவிருத்தி மற்றும் சமாதானம் என்பவற்றின் குறிக்கோள்களை அடைவதற்கான தடை பெண்களுக்கெதிரான வன்முறையாகும். இவ்வன்முறை ஆனது, பெண்கள் தமது மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் அனுபவிக்கும் நிலையை இல்லாமல் செய்து அவர்களை அடிமைகளாகவும், கருவிகள் போன்றும் பயன்படுத்தப்படும் நிலையைக் குறிக்கின்றது.

இன்று எத்தனை தான் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறுப்பட்ட துறைகளிலும் முன்னேறி ஆண்களின் சாதனைகளை முறியடிப்பவர்களாக இருந்தாலும் பெண்ணடிமைத்தனம் இன்றும் காணப்படவே செய்கின்றது. அதாவது ஒரு குறித்த பெண்ணால் தன் விருப்பு, வெறுப்புக்களைக்கூடப் பகிரங்கப்படுத்த முடியாத நிலை இன்றும் காணப்படுகின்றது. இவ்வாறான நிலைகளுக்கான காரணங்கள் யாதென ஆராயும் போது, எந்த ஒரு பெண்ணும் இதனை எதிர்க்கத் துணியாமையே வன்முறைகளின் தொடர்ச்சிக்கான விளைவுகளாக காணப்படுகின்றது. அதாவது வெளியில் சொல்வதனால் பழிவாங்கப்படலாமென்ற அச்சம், பெண்களின் தாழ்ந்த பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்து, தங்கி வாழுதல், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாமென்ற அச்சம், சட்டநிவாரணங்களைப் பெறுவதற்கான வழிவகைகள் பற்றி அறியாதிருத்தல், ஆண்களின் அடக்குமுறை என்பன பாதிக்கும் வன்முறையின் காரணிகளாக அமைகின்றது. மேலும் இன்றும் இந்த நிலையின் தொடர்ச்சிக்கான காரணம் யாதென பார்ப்போமானால், பல்வேறான காரணங்களை முன் வைக்கலாம்.











உதாரணமாக
ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டாலுமே அங்கே ஆண் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் சுதந்திரம், சலுகைகள் பெண் பிள்ளைகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவன் வேலைக்கு சென்று வருகின்றான், அவனுக்கு அதை செய்து கொடு, இதை செய்து கொடு என தாய்மாரால் பெண் பிள்ளைகள் தூண்டப்படுகின்றார்கள். இவ்வாறு பெண்களே ஆண்களுக்கு உயர்ந்த இடத்தை வழங்கும் தன்மை இன்றும் காணப்படுகின்றது, மற்றும் திருமணமான பெண் என்றால் அவளே தான் தனியாக வீட்டு வேலைகள், குழந்தைகளைப் பராமரித்தல் இவற்றோடு கணவனுக்கான சேவைகளை முன்வந்து செய்பவளாகவும் காணப்படுகின்றாள். இவற்றுள் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை கவலைக்குறியது. வெவ்வேறான இரு சூழலுக்கேற்ப தன்னை தயார்ப்படுத்த வேண்டியவளாகக் காணப்படுகின்றாள். மேலும் கணவனே கண்கண்ட தெய்வம் என்ற பொருளை நியாயப்படுத்துவதாக அவர்களின் வாதமும் போக்கும் காணப்படும் அதாவது கணவனின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் வழங்கப்படுவதில்லை, அப்படியே எதிர்த்து பேசினாலும் அடி, உதை என வாங்க வேண்டிய நிலையும் ஏற்படும். அத்தோடு அவள் குடும்பத்துடனான, உறவுகளுடனான தொடர்பு நீக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவாள். இப்படி பேச்சுக்கள் முற்றி கையால் பேசும் நிலைக்கு வந்தாலும் இன்று எங்காவது பெண்கள் திருப்பி அடித்ததாக கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அப்படியே அடித்தாலும் அவர்கள் லட்சத்தில், கோடிக்குள் ஒரு பெண்ணாக இருப்பார்கள். ஆனால் அந்நிகழ்வின் பின்னரான எதிர்த்த பெண்ணின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். இவ்வாறான நிலைக்கு அக்குறித்த பெண்ணை தள்ளும் நிலைக்கு ஊக்கியாக கணவனின் தாய், மற்றும் சகோதிரிகளே காணப்படுவார்கள். இவ்வாறு பெண்ணுக்கு பெண்ணே எதிரிகளாக மாறும் நிலையும் இன்றும் காணப்படுகின்றது. இப்படியான பல சிக்கலான பிணைப்புகளுக்குள் திணிக்கப்படும் பெண்கள் அதற்குள்ளேயே முடக்கப்படுவதற்கு பெண்களும் ஒரு காரணமே! மேலும் இங்கே ஆண்வர்க்கத்தினரை நோக்கும் போது சிலர் பெண்கள் மீதான, பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்ப்பவர்களாகவும், ஒழிப்பதற்காக பாடுபடுபவர்களாகவும் காணப்படவே செய்கின்றனர். என்றாலும் ஓரிருவரின் கருத்துக்கள் எடுபடுவதான நிலை இல்லையே... :(

இந்த நிலை மாறுபட வேண்டுமென்றால் பெண்களே துணிவு கொண்டு பாரதிகாணத்துடித்த புதுமைப்பெண்களாக நிஜத்தில் மாறுங்கள்.

Comments

Unknown said…
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை...
என் எண்ணங்கள் சிலவற்றும் உங்களுடன் பகிர்த்து கொள்ள விரும்புகிறேன்.
பொதுவாகவே பெண்கள் புரிந்துணர்வு மிக்கவர்கள். மேலும்
முற்போக்குள்ள பெண்கள் பெண்களையும், ஆண்களையும் முழுவதாக புரிந்து கொள்ள முற்படுகிறாள்...
சங்கடங்கள் தோன்றும் போது தீர்வு காண முயற்சிகிறனர்.
ஆனால், நீங்கள் அமோதிபீர்களோ தெரியவில்லை.என் அனுபவம் 75% ஆண்களின் வாழ்கை முறை அடிப்படையில் மாறுபாடுகள் அற்றவை...
புரிந்துணர்வு பெண்களுக்குரியது என்னும் கருத்தில் வேரூன்றி நிற்கின்றனர்...
சங்கடங்கள் தோன்றும் போது விலகி நிற்கவே பழகிவிட்டார்கள்...
பெண்கள் மீது குற்றம் சாட்டிவிட்டு அல்லது வன்முறைகளை பிரயோகித்து தங்களை குற்றம் அற்றவர்களை சமுதாயதற்கு கான்பிக்கிறனர்...
என்று சமஉரிமை பிறக்கும் என்பது கடவுளுக்கு தன வெளிச்சம்...
விதிவிலக்குகளின் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்......
Unknown said…
பெண்கள் மீதான வன்முறைக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைக்கும் எனக்கு அர்த்த வேறுபாடு விளங்கவில்லை....

சொற்பிரயோகத்தில் வேறுபாடு உண்டா?

மற்றையப்படி உங்கள் பதிவு அருமை....

வன்முறைகள் உடல், உள ரீதியாக பெரியளவில் முன்னெடுக்கப்படுகின்றன... தீர்க்கப்பட வேண்டுமாயின் சமூகக் கட்டமைப்பில் மாற்றம் வேண்டும்....
பகீ said…
இன்னும் விரிவாக எழுதுங்கள். நன்றாயிருக்கிறன்றது.
Anonymous said…
@உண்மை தானே. உலகம் என்னதான் வளர்ச்சி போக்கில் சென்றாலும் பெண்கள் மீதான பார்வை மாற்றங்கள் காண்பது என்னவோ தந்த கதியில் தான் உள்ளது. என்னை பொருத்தவரை பெண்கள் தங்களை வலியவர்களாக மாற்றிக் கொள்ளும் வரை இந்த நிலைமையில் மாற்றம் வருவது என்பது அரிது தான்.வலியவன் வாழ்வான் என்பது தான் வரலாறு.
ம்ம்.. இப்ப ஒரு நூற்றாண்டாதானே பெண்கள் முட்டிமோதிி முன்னுக்கு வாறாங்க.. ஆணாதிக்கம் பல மில்லியன் வருட சம்பிரதாயம்.. அதை முறியடிக்க இன்னும் ஒரு பத்தாயிரம் ஆண்டுகளாவது செல்லலாம்..;-)
Nila Loganathan said…
அருமையான பகிர்வு , இன்னும் உரத்துக் கூறிக்கொண்டே இருங்கள் ..........

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

ஹைக்கூ கவிதைகள்

29. தவிப்போடு ஒரு மனசு