தொடங்கிடுங்கள்

நித்திரை தொலைத்த
நெஞ்சத்தின் குமுறல்
நித்தமும் பிழியும்
உண்மையின் நினைவுகள்....

தமிழ் தாகமும் தேகமும்
பசிக்கு இரையாகும் போது
எங்கே ஒழிந்தன உங்கள்
போர்க் கொடிகள்....

வெல்வேன் வீழ்த்தி
வாளேந்தி சொன்னீர்
அன்றைய முழக்கத்தின்
சுவடுகள் எங்கே....

ஆயுதம் இழந்தேன்
அழுது துடிக்கின்றீர்
அடிமையானேன்
நீரே உரைக்கின்றீர்....

புரியாதவரே....!
உங்கள் எண்ணங்களின் சிசுக்கள்
விரல்வழி பிறக்கட்டும்
உங்கள் பேனையை விடவா
ஆயுதம் வேண்டும்....

படிந்த கரும்புள்ளிகளை
காணாமல் செய்து
புதியதோர் யுகத்தை
புதிதாய் சமைக்க.....

இன்றே தொடங்கிடுங்கள்
உள்ளே உறங்கும்
உணர்வுகளுக்கு உயிர்கொடுத்து
உண்மையை விளக்கிட....

கத்தி முனையை விட
கூர்மையாய் இருந்து
குத்திக் கிழிக்கட்டும்
உங்கள் எழுத்துக்கள்!

Comments

சரி பேனாவை எடுத் தாச்சு! யார குத்திக்கிழிக்கணும்னு சொல்லுங்க ?

வேணுமெண்டா கீபோட் டைப்ரைட்டரால மண்டையில பொடவும் ரெடி..

நல்ல உணர்ச்சி பூர்வமான கவிதை.. வாழ்த்துக்கள்..
Anonymous said…
உண்மை தான் தங்கையே ஆயுத பலத்தை விட எமு ஆத்ம பலம் பெரிது என்று உணர்ந்து செயற்பட நம்மவர் முன்வர வேண்டும். கண்ணீர் வரிகளை விட்டு காட்சி மாற்றங்களை நகர்த்த முன்வர வேண்டும்.
V.N.Thangamani said…
கத்தி இல்லை என்னிடம், பதிலாக சாட்டை வைத்திருக்கிறேன் .
வந்து பாருங்கள். www.vnthangamani.blogspot.com
வாழ்க வளமுடன்.
//உங்கள் பேனையை விடவா
ஆயுதங்கள் வேண்டும்....//

பொருள் பிழை இல்லை. சொற்பிழை நீக்குக தோழி.

நல்லா உணர்வுப்பூர்வமான கவிதை. தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்துவோம்.
Admin said…
அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...
உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!



வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com
//உங்கள் பேனையை விடவா
ஆயுதங்கள் வேண்டும்....// ரோஸ்விக் வழிமொழிகிறேன் உங்கள் கருத்தை!.

//தமிழ் தாகமும் தேகமும்
பசிக்கு இரையாகும் போது
எங்கே ஒழிந்தன உங்கள்
போர்க் கொடிகள்....//
பதிலளிக்க இயலவில்லை!.. இந்த வரிகளை படித்ததும் கனமாகிறது இதயம்
வாழ்த்துக்கள் சகோதரி

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

ஹைக்கூ கவிதைகள்

29. தவிப்போடு ஒரு மனசு