நாளைய பதிவர் சந்திப்பு
பதிவர்களின் பல வருட கனவுகளை நனவாக்கும் வண்ணமாக கடந்த ஆகஸ்டு 23ம் திகதியன்று கொழும்பு தமிழ்ச்சங்கம் வினோதன் மண்டபத்தில் இனிதே நடாத்தி முடித்த முதலாவது இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடலானது இன்றைய பதிவுலகை கலக்கி வருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!
பதிவுலகத்தை தத்தமது பதிவுகளால் கலக்கி வரும் பதிவர்களை சந்திக்கும் ஆர்வம் அனைத்து பதிவர்களின் மனதையும் துளைத்து எடுப்பதும் உண்மையே. இவ்வாறான பதிவர்களின் அவாவுக்கு தீணிப்போடும் வண்ணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப் பேரவை, காலி வீதி, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்) நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பானது குறித்த வேளையில் ஆரம்பிக்கப்படும் என்பதை ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் தெரிவித்துக் கொள்வதோடு ஏலவே பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்களையும், கடந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள தவறிய பதிவர்களையும் வருக வருகவென வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.
இதோ உங்களுக்காக நிகழ்ச்சி நிரல் மீண்டும் ஒருமுறை
* அறிமுகவுரை
* புதிய பதிவர்கள் அறிமுகம்
* கலந்துரையாடல் 1 : பயனுறப் பதிவெழுதல்
* கலந்துரையாடல் 2 : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
* சிற்றுண்டியும் சில பாடல்களும்
* கலந்துரையாடல் 3 : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
* கலந்துரையாடல் 4 : பெண்களும் பதிவுலகமும்
* பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
* உங்களுக்குள் உரையாடுங்கள்
டிசம்பர் 13, 2009 (ஞாயிற்றுக்கிழமை)- பி.ப. 2.00 மணிக்கே கலந்து நிகழ்வை சிறப்பிக்குமாறு அனைத்து பதிவர்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
ஏற்பாட்டுக்குழுவினர்
நாளை சந்திப்போம்... சிந்திப்போம்
Comments
சொல்லவே இல்ல?