திருப்பிக் கொடு
உன்னைக் கண்ட நாள் தொட்டு உள்ளத்துடிப்பு பல மடங்காய் இரத்த நாடியில் ஏதோ பிசைய "சுர்" என்று ஏதோ உடலெங்கும் பரவியது இன்ப ஊற்று இரட்டிப்பாகி உணர்வெல்லாம் உன் நி னைவு சூடிக்கொள்ள சிறகு முளைத்த பறவையாய் என் மனசு ஆனது இடைக்கிடை இதயம் தொட்டுச் சென்ற நீ இன்று என் இரவுகளை மொத்தமாய் விழுங்கிச் செல்கின்றாய் இரவோடு இரவாகி என் இரவுகளைத் தொலைத்தப் பின்னும் விடியலிலும் உனையே தேடித் துடிக்கின்றேன் இப்பொழுதெல்லாம் நான் உன்னை நினைப்பதே இல்லை - ஏனோ இதயம் தான் ஏங்கி அழுகின்றது நி தம் உந்தன் தரிசனம் வேண்டி இரவுகளின் சாரல் தனலாக விடியலின் தூரல் குளிராக மனதினில் நீயும் மலராக மௌனத்தால் நானும் சிலையாக மனதினில் மாற்றம் தந்தாயே இதயத்தை இடம் மாற்றிச் சென்றாயே இன்று நீ யே நானாய் ஆனேன் ந ிலவாய் பாதி தேய்ந்தேன் உன்னில் என்னை விளக்கிவிடு உறவே என்னை மறந்துவிடு உலகில் நா னாய் வாழ்வதற்கு என்னை எனக்கே தந்துவிடு!