என்றென்றும் நீ வேண்டும்

உயிரையே பிழிந்து எடுத்த பின்னும்
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்
கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன் தினம் தினம்
அப்படி என்னத்தான் இருக்கிறது உன்னிடம்

என்னை ஏங்க வைத்து சாகடிக்கிறாய்
ஏமாற்றங்களால் நோகடிக்கின்றாய்
என்றாலும் என்றும் சுகமான சுமையாய்
என் வாழ்வில் நீ வேண்டும்.

வாழ்க்கையை சுவைத்து விட
வாட்டத்தை துடைத்து விட
மாற்றானாய் நீ வேண்டாம்
மன்னவனாய் நீ வேண்டும்

சின்ன சின்ன சந்தோசங்கள் வேண்டும்
உன் சில்மிஷங்களும் வேண்டும்
துன்பமில்லா ஓர் வாழ்க்கைக்கு
துணையாய் நீ மட்டும் வேண்டும்.

சலிக்காத உன் பேச்சு வேண்டும்
சங்கமமாக நீ வேண்டும்
பூவைப்போல ஒரு வாழ்க்கைக்கு
உயிர் தர நீ வேண்டும்

என்னை ஏங்க வைத்து சாகடிக்கிறாய்
ஏமாற்றங்களால் நோகடிக்கின்றாய்
என்றாலும் என்றும் சுகமான சுமையாய்
என் வாழ்வில் நீ வேண்டும்.

Comments

அருமை.. பிரிவு வலியை எடுத்துரைக்கும் கவிதை..
அது சரி போகவேண்டடிய இடத்துக்கு போய்ச்சேருமா இந்தப்பாட்டு? சரியான குளிராம் இப்ப அங்க..:P
//அருமை.. பிரிவு வலியை எடுத்துரைக்கும் கவிதை..//

நன்றி நன்றி

//அது சரி போகவேண்டடிய இடத்துக்கு போய்ச்சேருமா இந்தப்பாட்டு? சரியான குளிராம் இப்ப அங்க..:P//
ம்ம் 1.5m snow இன்று.... traffic jam ஆம் அதனால இன்னும் போய் சேரல :(
என்னால ஏலாது. எனக்கு கனக்க வேலை இருக்குது. எதுக்கும் உங்கட வேண்டுகோளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறேன். :))
Subankan said…
அருமை அக்கா, :))
அப்பாடா....
கவிதை வளங்கீற்றுது....

கவிதை நல்லாயிருக்கு... :)

உணர்வுகளை நல்லா சொல்லியிருக்கிறீங்க....

எண்டாலும் சுபாங்கன் அங்கிளுக்கு நீங்கள் அக்கா எண்டுறது 'இந்த வயசில இதெல்லாம் தேவையா?' எண்டு கேக்க வைக்குது... ;)
Sangkavi said…
அழகான கவிதை...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
சந்ரு said…
அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்
வலி(மை)யான கவிதை....
இன்று தான் உங்கள் பதிவை முதல் பார்த்தேன். அருமையாக எழுதுகின்றீர்கள் . தொடர்ந்து உங்கள் பதிவோடு இணைந்து இருப்பேன்
//மதுவதனன் மௌ.... என்னால ஏலாது. எனக்கு கனக்க வேலை இருக்குது. எதுக்கும் உங்கட வேண்டுகோளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறேன். :))//

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல உங்களிடம் யார் கேட்டதாம்...? என் தலையில் நானே பெரிய கல்லை தூக்கி போட்டுப்பேனா? ஹி ஹி ஹி
//அருமை அக்கா, :))//

நன்றி டா தம்பி
//கவிதை நல்லாயிருக்கு... உணர்வுகளை நல்லா சொல்லியிருக்கிறீங்க....//

நன்றி நன்றி

//சுபாங்கன் அங்கிளுக்கு நீங்கள் அக்கா எண்டுறது//

அவன் ஆசைப்படுறான் சொல்லிட்டு போகட்டும் விட்டுடலாமே
// Sangkavi said...அழகான கவிதை...//
நன்றி

//இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...//
உங்களுக்கும் எனது பிந்திய வாழ்த்துக்கள்
//தர்ஷாயணீ லோகநாதன். said...
வலி(மை)யான கவிதை...//

நன்றி
//கருணையூரான் said...
இன்று தான் உங்கள் பதிவை முதல் பார்த்தேன். அருமையாக எழுதுகின்றீர்கள் . தொடர்ந்து உங்கள் பதிவோடு இணைந்து இருப்பேன்//

நன்றிகள் கோடி உங்கள் போன்றவர்களால் தான் வலையுலகம் இன்று பிரபல்யம் அடைந்துள்ளது வலையுலகோடு என்றும் இணைந்தே இருப்போம்

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்