பதிவர்களின் திறமையும் பொங்கல் கொண்டாட்டமும்

மாட்டுப் பொங்கல் தினத்தில் பதிவர்கள் அவர்களுக்கே உரிய பாணியில் ஸ்ரேயா மாட்டுக்கு பொங்கல் ஊட்டி மகிழ்ந்திருக்கின்றார்கள் இதோ உங்களுக்காக அன்று கலந்து கொண்ட பதிவர்கள் சிலரது முயற்சி (ஸ்ரேயா என்பது பதிவர்கள் மாட்டுக்கு வைத்திருந்த செல்லப் பெயராம் என்பது தீர விசாரித்ததில் தெளிவானது)

தைத்திருநாளை இனிதே கொண்டாடி மகிழ்ந்த களிப்போடே இன்று மாட்டுப் பொங்கலைப் பதிவர்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நல்ல நாளிலே முதலாவதாக நானே ஸ்ரேயாவிற்கு பொங்கல் ஊட்டி தொடங்கி வைக்கலாம் என நினைக்கின்றேன். பதிவர்களே உங்கள் கரகோசம் வானை முட்டட்டும். "உனக்கு பொங்கல் ஊட்டி மகிழ்விப்பதற்காக பொடி லோஷன் போதாதென்று என் மகனுக்கு வாங்கி வைத்திருந்த பேபி லோஷனையும் பூசிக்கொண்டு வந்திருக்கின்றேன் கொஞ்சமாவது சாப்பிட்டு விடு..... மேலும் பொங்கல் ஊட்டி உன்னை கௌரவிப்பதற்காக பதிவர்கள் தயாராகக் காத்திருக்கின்றார்கள் அத்தோடு நான் விடைப்பெற வேண்டிய நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது... எனவே மீண்டும் ஒரு மாட்டுப் பொங்கல் தினத்தில் உன்னை சந்திக்கும் வரை உன்னிடமிருந்து விடைப்பெறுவது உன் அன்பு வாமபூசணி.

(இவ்வாறு குறித்த பதிவர் முயற்சி செய்தும் முடியாமல் போகவே களைப்போடும், சோர்வோடும் அவ்விடத்தை விட்டு நகர்கின்றார். அவரைத் தொடர்ந்து வேகமாக முன் செல்கின்றார் இன்னுமொரு பதிவர்)

முதலில் மூச்சு வாங்கிக் கொள்கின்றார்.......!

சிறிது நேர மௌனத்தின் பின்னர் தொடர்கின்றார்.

ஸ்ரேயா உனக்கே தெரியும் நான் 180 km க்கும் மேற்பட்ட தூரத்திலிருந்து இரண்டு, மூன்று பஸ்கள் மாறி ஒரு நாளை முழுவதுமாக செலவழித்து உனக்கு பொங்கல் ஊட்டுவதற்காக வந்திருக்கின்றேன் உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கொஞ்சமாவது சாப்பிட்டு விடு இன்றே நான் ஊருக்கு திரும்ப வேண்டும். அத்தோடு நான் வந்ததற்கான காரணம்..... இன்று நான் வராமல் விட்டிருந்தால் என் பெயரை பயன்படுத்தி யாராவது உனக்கு பொங்கல் ஊட்டிச் சென்றிருப்பார்கள் அதைத் தடுத்து நான் இருக்கிறேன் என அறிவிப்பதற்காகவே வந்திருக்கின்றேன் சாப்பிட்டு விடேன்....... என கெஞ்சி முடியாமல் போக கோபமடைந்த பதிவர் நீ ஆண் மாடா இருந்திருந்தா யோவ் னு திட்டி இருந்திருப்பேன் நீ ஸ்ரேயாவா ஆயிட்டாய் அதனால யோடி னு திட்டிக்கொண்டே செல்கின்றார்.

(இவ்வாறு முயற்சி செய்து இவரும் தோற்றுப் போகவே சொல்லிக் கொள்ளாமல் இடத்தை விட்டு விரைந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்த பதிவர் முயற்சிக்கின்றார்)

இவர் புன்னகையுடன் முன்னகர்கின்றார் (புன்னகையின் அர்த்தம் யாதென வினவிய போது, முதல் சென்ற இருவரும் வயதானவர்களாக இருந்தமையால் தான் ஸ்ரேயாவிற்கு பிடிக்கவில்லை நான் பச்சிளம் பாலகன் என்னால் முடியும் என்பது தான் விடயம் என்றார்)

ஸ்ரேயா ஸ்ரேயா...... என்னை பார் நான் உனக்கு பிடிக்குமென சிவப்பு நிற சட்டை எல்லாம் போட்டு வந்திருக்கேன். உனக்கு வேண்டுமானால் சிவப்பு நிறச் சட்டையே வாங்கி தருகின்றேன். ஒரு முறை வந்து கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு வாந்தியாவது எடுத்துவிட்டு செல்லு வாம்மா.... ஸ்ரேயா. என்னம்மா ஸ்ரேயா நான் கமலகாசன் ஸ்டைலில் இத்தனை அமைதியாக பேசிக்கொண்டிருக்கேன் கொஞ்சமாவது சாப்பிட்டு விட்டு போயேன். இன்று கஞ்சப்பயல் கண்ணாடி நிதியை உதைக்க சந்தர்ப்பம் கிடைத்தும் விட்டு விட்டு ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதே ஸ்ரேயா ஏமாற்றி விடாதே. போராடி முடியாமல் சிரித்துக் கொண்டே போனவர் கண்ணீர் மல்க விலகுகின்றார்.

(அவரது கண்களில் கண்ணீரைக் கண்ட சக பதிவர் கோபத்தோடே ஸ்ரேயாவை நெருங்குகிறார்)

ஏய் ஸ்ரேயா உனக்கென்ன கொழுப்பா.... அழகி என்ற நினைப்பா..... நான் யாரென தெரியுமா? உனக்காக கடல் மீது கப்பலில் ஏறி வந்திருக்கின்றேன் என்னை யாரென நினைத்தாய் நீ மட்டும் இப்போது சாப்பிடவில்லை என்றால் நயனுக்கோ நமிதாவிற்கோ ஊட்டி விடுவேன் இங்கே வா வந்து சாப்பிடு..... ஸ்ரீ லங்கால கரம் பிடித்து ஆறிடும் முன்னமே இப்படி பொங்கல் தருவது அபூர்வம் என் உணர்வுகளை மதித்து சாப்பிடு....... ஸ்ரேயா சொல்வதை கேளேன்

(தன் அதட்டலுக்கும் ஸ்ரேயா அசையாமல் நிற்க இனி முடியாதென்ற நிலையில் திரும்பியவர் சக பதிவரும் நண்பருமானவரோடு கண்களால் பேச அந்த நண்பர் விரைகின்றார்)

ஹாய் ஸ்ரேயா, நமக்கு எப்போதும் மொக்கை ஜோக் அடித்து எல்லோரையும் சிரிக்க வைக்கனும் அது தான் முக்கியம் என்னவோ இவங்க எல்லோரும் அழைத்தார்களென உனக்கு பொங்கல் ஊட்ட வந்தேன் இத்தனை நேரம் தூங்கி வழிந்து கொண்டிருந்தேன் என்னவோ என் நண்பன் கண்களைப் பார்த்து பயந்துப் போய் உன்னிடம் வந்தேன். சாப்பிட்டு விடு நான் சிரித்து கொண்டே இருக்கின்றேனென நினைக்காதே சீரியஸானேன் சுட்டு பொசுக்கி விடுவேன் . நானே ஐந்து ரூபாய் செலவிட கூடாதென ஓசி காரில் ஏறி ஏசி வாங்கி வந்தேன் இதோ பார் நான் பாக்கட்டில் புல்லட்டோடு தான் வந்தேன் அடம்பிடித்தாய் உன்னைஅழித்துவிடுவேன்

(சொல்லிக்கொண்டே பாக்கட்டை தொட புல்லட் இல்லாததை உணர்ந்தாரோ என்னவோ அமைதியாக அசைகின்றார் அவரைத் தொடர்ந்து அடுத்தவர்)

சாப்பிடு ஸ்ரேயா ஏன் இப்படி செய்கின்றாய் சாப்பிடேன் பிலீஸ் எனக்கிருக்கும் வேலைப் பளுவில் இதற்கெல்லாம் நேரத்தை வீணடிக்க முடியாது ஓகே உனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நீ சாப்பிட்டு தான் ஆக வேண்டும் ஓகே நான் நல்லவனா கெட்டவனா என எனக்கே தெரியாது ஆனால் மனதில் பட்டதைச் சொல்லிவிடுவேன் இப்போது மட்டும் நீ சாப்பிடவில்லையானால் உன்னை இராட்சசி என்றே அழைப்பேன் நீ சாப்பிட்டால் உனக்கு ஊஞ்சல் கட்டி ஆட்டிவிடுகின்றேன் சாப்பிடேன்......(ஸ்ரேயா சாப்பிடாமல் இருக்க) இனியும் உன்னிடம் கெஞ்சி ஒரு பிரயோசனமும் இல்லை இனி உன்னோடு நான் பேசப்போறது இல்லை பாய்

(அவரும் சென்றுவிட நான் இருக்கேன் என ஒரு குரல் தொடர்ந்து என்ன நடக்கின்றதென தான் பார்த்துவிடுவோமே)

வியர்வை வழிய சிரித்துக் கொண்டே வருகின்றார் இவர் உழவர் திருநாளில் உழைத்து களைத்தாராம் ஸ்ரேயா என் அண்ணன்மார் எல்லோரையும் நீ தலைகுனிய செய்து விட்டாய் பதிவர்களில் மிக சிரியவன் நான் தான் (உருவத்தில் இல்லை வயதில்) அவர்கள் சார்பாக வந்திருக்கின்றேன் நானும் நீயும் உருவத்தில் வெவ்வேறாக இருந்தாலும் நம் இருவரின் நிறையும் ஒரே அளவுதான் இப்போது மட்டும் நீ சாப்பிடவில்லை உன் பொங்கலை நானே சாப்பிட்டு விடுவேன் ஜாக்கிரதை இப்படி மிரட்டியும் அது சாப்பிடாமல் இருக்கவே அவரும்கவலையோடு நகர்கின்றார்.

(இப்படியே ஸ்ரேயா சாப்பிடாமல் அடம்பிடிக்க ஸ்ரேயாவிற்கு யாரைப் பிடிக்கும் என்ற கேள்வி பதிவர்களின் தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்தது) தொடர்ந்து இன்னுமொரு பதிவர் விரைகின்றார்

ஸ்ரேயா அக்கா நான் உங்களுக்கு பொங்கல் கொடுப்பதற்காக வந்திருக்கின்றேன் எப்படி இருக்கின்றீர்கள் அக்கா? ஏன் இன்னும் சாப்பிடாமல் இருக்கின்றீர்கள்? நான் நீங்கள் ரொம்ப நல்ல அக்கா என்று தானே நினைத்தேன் என்ன நீங்கள் இப்படி இருக்கின்றீர்கள் அக்கா நான் பாவம் தானே (அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்கின்றார்) அக்கா சீக்கிரமாக சாப்பிடுங்கள் நாங்கள் அனைவரும் 155ல் ஐந்தறை கொண்ட பெட்டியைத் தூக்கிக் கொண்டு வீடு செல்லவேண்டும்.

(அப்போதும் ஸ்ரேயா ஒரு ரியாக்சனுமே இல்லாமல் இருக்க மோசமான அக்கா என திட்டிக் கொண்டே போவோமா என சக பதிவர் ஒருவரை நோக்கி பார்வையை திருப்ப பொறு நானும் என் பங்கிற்கு முயற்சிக்கின்றேன் என அவர் ஸ்ரேயாவை நோக்கி செல்கின்றார்)

"ம்.................." இப்போது நடக்கும் நிகழ்வை குறித்து பார்த்தால் என்ன நடக்குது எப்படி நடக்குது என்றே புரியவில்லை என்றாலும் இப்படி சாப்பிடாமல் இருப்பது அத்தனை நல்லதல்ல எனக்கு பெண்களின் சகவாசம் பிடிக்காது தான் என்றாலும் பொது இடத்தில் நீ இப்படி நடந்து கொள்வது சரியில்லை எல்லோரையும் சேர்த்து சொல்லவில்லை எனக்கு பிடிக்கவில்லை என்று தான் சொன்னேன் சொல்லிக் கேட்காத பட்சத்தில் அதனை விட்டு விலகி செல்வதே என் வழக்கம் என கூறிக் கொண்டே சக நண்பரையும் அழைத்துக் கொண்டு 155 நோக்கி ஓடுகின்றார்.

(இப்படியாக அனைவரும் குழப்பத்தோடும் ஸ்ரேயாவிற்கு என்ன பிரச்சினை என்றும் தெரியாததால் சோகமாக இருக்கு இன்னுமொரு பதிவர் வருகின்றார்)

வணக்கம் ஸ்ரேயா வேலை இருந்தபடியால் பொங்கல் விழாவில் சற்று தாமதமாகவே கலந்து கொள்ள முடிந்தது முதலில் என்னை மன்னித்துவிடு ஆனாலும் சற்று முன்பிருந்தே பதிவர்களின் முயற்சிகளை அவதானித்துக் கொண்டு தான் இருக்கின்றேன் நீ சாப்பிடாமலேயே இருக்கின்றாய் என் பக்கம் வந்து சாப்பிடுமாறு அன்போடு வரவேற்கின்றேன் (ஸ்ரேயா வராமல் இருக்கவே) நீ கேட்கமாட்டாய் அதனால் இதனை சொல்லிவிட்டு செல்கின்றேன் அடுத்த பொங்கல் விழாவில் ஆரம்பத்திலேயே கலந்து கொண்டு முயற்சி செய்கின்றேன் என்ன தான் நான் முயற்சி செய்தாலும் உன் மனதில் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும் அப்போது தான் உன்னால் சாப்பிடமுடியும். பிறந்தோம் வளர்நதோம்னு மட்டும் இருந்தால் போதாது நாலு பேர் சொல்லும் நல்லதையும் கேட்கனும்.
(சொல்லிக்கொண்டே வெகு தூரமாக சென்று கொண்டிருந்தார் அந்த பதிவர்)

அவர் செல்வதற்கும் அடுத்த பதிவரின் வருகைக்கும் சொற்ப நேரமே ஆனது.

ஸ்ரேயா இன்று மாட்டுப் பொங்கல் எனக்கும் கௌ என்றால் ரொம்பப் பிடிக்கும் நான் சொன்னால் சாப்பிட்டு விடுவாய் என நினைக்கின்றேன். இப்படி சொல்வதை கேளாமல் இருந்தால் உன் வாயை ஹெக் செய்து இனி மேல் உன்னால் சாப்பிடவே முடியாத படி செய்து விடுவேன். நா இருந்தும் சுவை உணர முடிந்தும் உன்னால் சாப்பிடவே முடியாது அதனால் உடனடியாக சாப்பிட்டு விடுவாயானால் அனைவருக்கும் இலகுவாகவும் விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். இப்படிக்கு ப்ரியமுடன் மௌ சாறி கௌ ரசிகன்.

அடுத்தவர் மிக அமைதியாக வருகின்றார்

ஸ்ரேயா இன்று உனக்கென்ன ஆனது ஒரு பெண்ணின் பிரச்சினை பெண்ணால் தான் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும் என்பது எனக்கும் தெரியும் என்றாலும் ஒரு நண்பனாக சொல்கின்றேன் சாப்பிடேன். நான் நினைக்கிறது என்னவென்றால் பெண்களை மதிக்க வேண்டுமென்று தான் பெண்களுக்காக வலை உருவாக்கவும், பதிவர்களுக்காக சங்கம் ஒன்றை அமைத்து செயற்படுத்தவும் நினைத்திருக்கின்றேன் சக பதிவுலக நண்பர்களுடனும் கதைத்துக் கொண்டிருக்கின்றேன் இப்படி சாப்பிடாமல் இருந்தால் எப்படிஉன்னால் இப்படியான நிகழ்வுகளில் எல்லாம் கலந்து கொள்ள முடியும் முதலில் வா வந்து கொஞ்சம் சாப்பிடு இது நல்ல பொங்கல் தான் உனக்கு ஏதும் ஆகாது வா ஸ்ரேயா வந்து சாப்பிடு....

(அவர் பேசிப் பேசி களைத்துப் போய் மௌனமானார்) தொடர்ந்து வருகிறார் சகபதிவர் ஒருவர்

ஸ்ரேயா என்ன இது நீ இப்படி செய்து கொண்டிருக்கின்றாய்? மரியாதையாக சாப்பிடு இல்லை உன்னை வித விதமாக படம் பிடித்து கம்மண்ட்ஸ் எனும் பெயரில் கேவளமாக எதையாவது எழுதி உன் இமேஜை டேமேஜ் செய்துவிடுவேன். என்ன தான் இருந்தாலும் உனக்கு இவ்வளவு திமிர் ஆகாது நாங்கள் சுட்டெறிக்கும் வெய்யிலில் எரிந்தும் எரியாமலும் இருந்து கஸ்டப்படுகின்றோம் புரிந்துக் கொள்ளாமல் சின்ன புள்ள தனமா இல்ல...

(அவரும் முடியாத கட்டத்தில் அழுதுவிடவே அடுத்தவர் சாந்தமாக வருகின்றார்)

ஸ்ரேயா இன்றைய விலைவாசி பற்றி உனக்கு தெரியுமில்ல? (தெரியுமாஇல்லையா என கேட்கின்றார்) உனக்கு விழா கொண்டாடவென ஆன செலவுகள் எவ்வளவென தெரியுமா? அந்த காசை கொண்டு போய் ஏதாவது பிசினஸ்ல போட்டிருப்பேன் பாவமென உனக்கு செலவழித்தால் நீ இப்படி செய்கின்றாய் என்ன நடக்குது இங்கே..... இன்றைய சந்தையின் போக்கு உனக்கு தெரியுமா விலைவாசி எவ்வளவு ஏறிப் போனதென தெரியுமா? தெரிந்திருந்தால் நீ ஏன் இப்படி செய்ய போகின்றாய் தெரியாத உன்னிடம் பேசுவதை விட நான் பேசாமல் செல்வதே மேல் வருகின்றேன்

(இப்படி பேசியும் ஒன்றும் ஆனபாடில்லை தொடர்ந்து கோபத்தோடு ஒருவர் முன்வருகின்றார்)

நேற்று ஆதவனை மகிழ்வித்தாயிற்று இன்று உன்னை சந்தோசப்படுத்தவென இத்தனை ஏற்பாடுகளை செய்தும் நீ ஒரு வாய் சாப்பிட மாட்டேனென இருக்கின்றாய் இப்போது சாப்பிட போகின்றாயா இல்லையா? கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வைத்திருந்த பொங்கலைக் குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டு அதே கோபமான முகத்துடன் விரைந்தார் அந்த பதிவர்.

அவரது அந்த செயல் அங்கு வருகை தந்திருந்த ஏனைய பதிவர்களை முயற்சிசெய்து கஸ்டப்பட விடாமல் தடுத்தது ஆனாலும் ஸ்ரேயாவிற்கு யாரைப் பிடித்திருக்கின்றது என தெரியவில்லையே என்ற கவலையோடே அனைத்துப் பதிவர்களும் விரைந்தார்கள்.

Comments

இதை எழுதியதற்கு உங்களை யோடி என திட்டலாமா? கலக்கலாய் எழுதியிருக்கிறீர்கள். ரசித்து சிரித்தேன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

பதிவர்கள் அனைவரின் இமேஸ்களும் சுக்குநூறாய் உடைந்தன....

என்றாலும் என்னை மட்டும் போட்டுத் தாக்காமல் இருந்தமைக்கு மிக்க நன்றி... :P ;)
Bavan said…
அக்கா,

செம மொக்கை,

நானும் ஏதோ எங்களை மாடு என்று சொல்லி மொங்கப்போறீங்களோ என்று பயந்துவிட்டேன்..ஹீஹீ

//ஸ்ரேயாமாட்டுக்கு பொங்கல் ஊட்டி மகிழ்ந்திருக்கின்றார்கள்//

என்னாதுதுது? ஸ்ரேயாவா?
நம்ம ஸ்ரேயா அக்காவில உங்களுக்கு என்ன கோபமோ...:p

//பொடி லோஷன்போதாதென்று என் மகனுக்கு வாங்கி வைத்திருந்த பேபி லோஷனையும் பூசிக்கொண்டு வந்திருக்கின்றேன்//

லோசன் கமகமக்குது...

//நானும் நீயும்உருவத்தில் வெவ்வேறாக இருந்தாலும் நம் இருவரின் நிறையும் ஒரே அளவுதான்//

ஹீஹீ...


//உன்னை வித விதமாக படம் பிடித்து கம்மண்ட்ஸ் எனும்பெயரில் கேவளமாக எதையாவது எழுதி உன் இமேஜை டேமேஜ் செய்துவிடுவேன்.//

ஹீஹீ... எனக்குமா?... அவ்வ்வ்...


***

மற்றது ஸ்ரேயா ரசிகர்கள் உங்களை கொலைவெறியோடு தேடுவதாகத்தகவல் கிடைத்துள்ளது கவனமாக இருங்கள்..

அக்கா அருமையான மாட்டு மொக்கை...

பொங்கலை குப்பையில் கொட்டாமல் விடடிருக்கலாம்(நாங்க சாப்பிட்டிருப்பமுல்ல...lol)
//இதை எழுதியதற்கு உங்களை யோடி என திட்டலாமா?//
உங்கள் தங்கையை நீங்களே அப்படி திட்டலாமா?

//கலக்கலாய் எழுதியிருக்கிறீர்கள். ரசித்து சிரித்தேன்//
நன்றி அண்ணா
//பதிவர்கள் அனைவரின் இமேஸ்களும் சுக்குநூறாய் உடைந்தன....//
இமேஜா அப்படினா....?

//என்றாலும் என்னை மட்டும் போட்டுத் தாக்காமல் இருந்தமைக்கு மிக்க நன்றி... :P ;)//
இந்த தன்னடக்கம் தான் உன்னிடம் எனக்கு ரொம்ப பிடித்தது அப்படியே போய் ஒருக்கா கண்ணாடியை பாருடா
//செம மொக்கை,//
அப்பாடா மொக்கைனு ஏற்றுக்கொண்டாயே சந்தோசம்

//நானும் ஏதோ எங்களை மாடு என்று சொல்லி மொங்கப்போறீங்களோ என்று பயந்துவிட்டேன்..ஹீஹீ//
அப்படி சொல்வேனா...? அதாவது நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்றேன்

//என்னாதுதுது? ஸ்ரேயாவா?
நம்ம ஸ்ரேயா அக்காவில உங்களுக்கு என்ன கோபமோ...:p//
இப்போ எல்லாம் ஸ்ரேயா நமிதானு எழுதினால் தானே வாசிக்கிறீங்க அதான் ஹி ஹி ஹி

//லோசன் கமகமக்குது...//
அப்படினா அவர் குளிப்பதே இல்லைனு சொல்ல வாராயா? இதை நான் லோஷன் அண்ணாவிடம் சொல்லி உன்னை மாட்டி கொடுக்கவே மாட்டேன்

//ஹீஹீ... எனக்குமா?... அவ்வ்வ்...//
உனக்கில்லாமலா...?


***

//மற்றது ஸ்ரேயா ரசிகர்கள் உங்களை கொலைவெறியோடு தேடுவதாகத்தகவல் கிடைத்துள்ளது கவனமாக இருங்கள்..//
இது வேறா நான் எஸ்கேப்

//அக்கா அருமையான மாட்டு மொக்கை...//
நன்றி நன்றி

//பொங்கலை குப்பையில் கொட்டாமல் விடடிருக்கலாம்(நாங்க சாப்பிட்டிருப்பமுல்ல...lol)//
இது நியாயமான கேள்வி தான் ஆனால் அதனை ஆதவனிடமல்லா கேட்க வேண்டும்
அதை சாப்பிட வைக்க ஒண்டு செய்திருக்கலாம்..

மரியாதையா சாப்பிடு.. இல்லாட்டி

”ங்கொய்யாலே கோமாதா” என்று ஒரு கவிதை பாடிடுவன் என்று புலவி கும்குமுக்காவை விட்டு மிரட்டியிருக்கலாம்.. பொங்கலென்ன பொங்கல் ஆடுப்புச்சாம்பலையும் சேத்து சாப்பிடிருக்கும்..
Subankan said…
என்ன அக்கா இது, இப்படுக் காலை வாரிவிட்டுட்டியளே அக்கா, நல்ல கற்பனை அக்கா, நல்ல பதிவு அக்கா, கலக்கல் அக்கா, அப்ப நான் வரட்டுமா அக்கா
//இல்லாட்டி ”ங்கொய்யாலே கோமாதா” என்று ஒரு கவிதை பாடிடுவன் என்று புலவி கும்குமுக்காவை விட்டு மிரட்டியிருக்கலாம்.. பொங்கலென்ன பொங்கல் ஆடுப்புச்சாம்பலையும் சேத்து சாப்பிடிருக்கும்..//

அது சரி யாரந்த கும்குமுக்கா???
கேட்டதா சொல்லிடுங்க
//என்ன அக்கா இது, இப்படுக் காலை வாரிவிட்டுட்டியளே அக்கா, நல்ல கற்பனை அக்கா, நல்ல பதிவு அக்கா, கலக்கல் அக்கா, அப்ப நான் வரட்டுமா அக்கா//

இவன் இந்த ஜென்மத்தில் திருந்த மாட்டான் போலிருக்கே

நன்றிடா தம்பி சரிடா தம்பி வாடா தம்பி போடா தம்பி ஹி ஹி ஹி
வித்தியாசமான முறையில் கடித்துள்ளீர்கள் ..ம் ..தொடருங்கள்
tharshayene said…
ஹை ஹை எல்லாரையும் கரெக்டா கண்டு பிடிச்சிட்டன் .......
கடைசியில மாதர் சங்க தலைவியாக்கீட்டிங்களே அக்கா !
எண்டாலும், இது கொஞ்சம் ஓவர் ....!!!

நல்லாச் சிரிச்சேன்.....

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு