சுவாசமே நட்பாய்

ஆழப்பதிந்த ஈட்டியின்
தழும்பாய் உன் நட்பு
என் இதயத்தில்!

மீட்டிப்பார்க்கும் போதெல்லாம்
அத்தனையும் பசுமையான
நினைவுகளாய் நெஞ்சில்!

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சிதறிக்கிடந்த என் எண்ணங்களின்
சேர்க்கை உருவாய் நீ!

சில காலம் சேர்ந்திருந்தும்
பல காலம் பிரிந்திருந்தும்
பாசத்தின் ஊற்றல்லோ நீ!

வேசமில்லா வரமல்லோ
வாசமுள்ள மலரல்லோ என்றும்
வாடாத உன் நட்பு!

நேசத்தின் உறவதாம்
நெஞ்சத்தின் துணையதாம்
என்றென்றும் உன் நட்பு!

காலமும் நிலைக்குமாம்
காத்திருந்தும் தொடருமாம்
சுவாசமே உன் நட்பாய்!

Comments

அழகான கவிதை...
கவிதை நன்றாகவுள்ளது..
Bavan said…
வழக்கம்போல கவிதை கலக்கல் அக்கா..;)
//நேசத்தின் உறவதாம்
நெஞ்சத்தின் துணையதாம்
என்றென்றும் உன் நட்பு!
காலமும் நிலைக்குமாம்//

கீர்த்தி,

நிலைக்கும் நட்பூ.
Unknown said…
புது வருடத்தில் உங்களின் இரு ஆக்கங்களும் அருமையாக இருந்தது
நட்பைவிட சிறந்த ஒரு உறவு உலகத்தில் இல்லை என்பேன் நட்பின்
மீது நீ கொண்ட உண்மையான உணர்வே இக்கவிதை
எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

அன்போடு,
இசக்கிமுத்து..

Popular posts from this blog

ஹைக்கூ கவிதைகள்

விழுவியம் காப்போம்

29. தவிப்போடு ஒரு மனசு