Posts

Showing posts from February, 2010

எங்கிருந்து வந்தாள்

தேவலோக அழகோ..... பூமியில் பூத்த மலரோ..... காணும் கண்கள் ஏங்கும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வேண்டும் என்று தோன்றும் என்னைக் கடந்து செல்ல - பல மின்னல் என்னைத் தாக்கும்....! அவளது அவளது நினைவினைத் தான் தினம் தினம் மனமதும் சுமந்திருக்கும் பகலது இரவினைக் கடந்த பின்னும் பட படவென அலை அடித்துச் செல்லும் மனதில் ஏதோ புதுவித மாற்றம்..... மணரம் வரையில் தொடரும் தேடல்....! நிலவவள் ஒளி தரும் நிலவவள் அவள் எழில் பாடவே மொழிகள் தான் போதுமோ மின்மினி அவளது கண்கள் தான் அவளது நினைவுகள் சுமந்து தான் நாட்களும் நகருமோ ஞாபகம் தொடருமோ நாளையும் மலருமோ.....? கண்ணிமைகள் மூடி ஜன்னல் திறந்திடும்போது காற்றும் கொஞ்சம் சிலிர்த்திடும், காதல் நெஞ்சை துளைத்திடும்.... செவ்விதழோ கோவைப்போல சிவந்து நிற்கும்... தத்துப் பற்கள் பார்க்கும் போது முத்தென எண்ணம் தோன்றும் முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாள் முகத்தில் அழகாய் புன்னகை பூத்தாள்! காலையில் புலர்ந்திடும் வேளையில் அவள் முகம் காணவே ஏங்குவேன் கண்களை மூடுவேன்.... கவிதைகள் பாடுவேன் இரவிலே நடுங்கிடும் குளிரிலே நிழலையும் பார்க்கவே வாழுவேன் தனிமையில் வாடுவேன் தலையணை தேடுவே...

எந்தையே

Image
உன் போல தந்தை இங்கே மண்ணிலுண்டோ? - உன் மடி மீது கண்ணயர்ந்தால் துன்பமுண்டோ........? வாழ்வோடு நானிருந்தேன் - நீ வாழும் வரை - ஏனோ வாட்டத்தை தந்து சென்றாய் சாகும் வரை.... :( உன்னாலே தொடருதிந்த உயிரின் வலி - உன் உறவோடு சென்றதெந்தன் உணர்வின் ஒலி! காற்றோடு கலந்துவிட் டு சுவாசம் என்றாய் கண் காணாமல் நீ இருந்து என்னைக் கொன்றாய்! நேற்றோடு முடிந்ததுந்தன் வழிப்பயணம் - உன் வழி தேடி தொடருதெந்தன் விழிப்பயணம்! தோற்றாலும் ஜெயித்தாலும் தோற்றமுண்டாம் - உன்னைத் தொலைத்துவிட்டு தேடுகின்றேன் தோற்றமெங்கே....? நேற்றோடு என்னருகில் நீயிருக்க - அந்த நேற்றைக்குள் தொலைந் துவிட ஆசைக் கொண்டேன்! இ ன்றைக்கு உன் என்னைத் இழந்துவிட்டு இடி தா ங்கி போல் நான் மாறி ஜடமாய் ஆனேன்! உன் அன்புக்காய் உயி ர்க்கின்றேன் அலை மோதி தவிக்கி ன்றேன் என் விடியலின் முகவரி உன் முகமாக வேண்டுவேன்! இன்னமும் எந்தையே நினைத்ததும் வியக்கின்றேன் உன் போல தந்தை இங்கே மண்ணிலுண்டோ....?

காதலர் தினம்

Image
அனைவருக்கும் எனது இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள் "கண்களிலே ஒளியாகி கவி மொழியில் கதைப்பேசி கனவுகளை தினம் பருகி நினைவுகளில் நிஜமாகி அடை மழையில் உறவாடி அந்தம் வரை உயிராகி காதலோடு காதலாகி காதல் செய்வோம் வாரீர்"

இன்றைப்போல் அன்றிருக்கவில்லை

நம் கண்கள் முதன் முதலாய் நம் உருவங்களை முத்தமிட்டுக் கொண்டன இதழில் ஒரு சிறு புன்னகை இளையோடி மறைந்தது நீ யாரென எனக்கோ நான் யாரென உனக்கோ தெரிந்திருக்கவில்லை நாம் இருவரும் இரு துருவங்கள் இணைத்திருந்தது தாய் மொழி நம்மை நம் சந்திப்பு எதுவும் செய்யவில்லை நான் நானாகவும் நீ நீயாகவும் இருந்தோம் பிரிந்தோம் இடைக்கிடை இணையவழி இரண்டொரு வார்த்தைகள் இதயம் இயங்கிக் கொண்டுதான் இருந்தது இடை நிறுத்தம் செய்யாமல் என்னிடம் என்னதும் உன்னிடம் உன்னதும் இரண்டாவது சந்திப்பு உன் வருகைக்காய் ஏங்கவில்லை மனது ஏதோ பேசிக் கொண்டோம் எல்லோரையும் போல அதே பார்வை அதே புன்னகை அகன்றது அன்றோடு உன் நினைவு அடுத்தடுத்தும் நம் கணனிகள் கைத்தொட்டு போயின இதயம் தூரத்திலேயே இயங்கிக் கொண்டிருந்தது நம் இதயங்களுக்கிடைப்பட்ட தூரம் அப்படியே இருந்தது ஏதோ நான் பேச எதையோ நீ பேச எங்கோ நின்ற உன்னில் எதுவும் தோன்றவில்லை எதற்காகவோ முதலில் நானே அலை(ழை)த்தேன் துண்டித்தேன் தொடர்பை எட்டவே நின்றாய் நீ இதனிடை பேச்சுக்களில் சொல்லியும் போனாய் பெண் எப்படி இருக்க வேண்டுமென முதலாய் உன்னில் ஒரு மதிப்பு அலைபேசியும் அடிக்கடி ஒளித்து ஒழிந்தது பேசிக்கொண்டோமே தவிர...

உழைப்போம்

கடந்து வந்த பாதைகளில் கரடான தருணங்கள் கண் கொண்டு பார்ப்பதற்கு கண்கள் தான் இன்றில்லை கண் தன்னை பறித்துக்கொண்டு நடவென்று அவன் சொல்ல நடக்கத்தான் முயல்கின்றீர் நாடகமே புரியாமல் அறியாமல் தெரியாமல் அகதி என்றான் அன்றொருவன் அக்கதையை நிஜமாக்க துடிக்கின்றர் இக்கணமும் துடிக்காமல் துயிலாமல் துவண்டு தினம் பணியாமல் முடிவெடுத்து முயற்சிப்பீர் முன்னேற வழி காண்பீர்

ஹைக்கூ கவிதைகள்

"நண்பன்" துன்பத்திலும் வாழ்பவன் உற்ற துணையாக ! "இரவு" நிலவொளியினோடு தனிமையும் சொந்தமானது ! "கல்வி" இறப்பினூடும் அழிவில்லா செல்வமிதுதான் ! "காதல்" இதயங்களின் இனிமையும் இன்பமயமாக ! "கவிதை" உணர்வு சொட்டு உதிரமாய் உருவாகின்றது ! "நிலவு" வட்டமுகமது வானத்தில் வட்டமிட்டது ! "மௌனம்" வார்த்தைகளின் தொடர்ச்சி வந்துதிக்குது ! "தனிமை" இல்லாமையிலும் இறுதிவரை உடனிருப்பது ! "கடவுள்" நேற்றையதினமே எதிர்கால வித்திட்டவன் ! "ஏழை" தினம்தினமும் உண்டழுக தண்ணீர் அமுது ! "தாலி" பெண்ணவளுக்கு துணைவனின் உத்தரவாதம் !