Search This Blog

Tuesday, February 23, 2010

எங்கிருந்து வந்தாள்

தேவலோக அழகோ.....
பூமியில் பூத்த மலரோ.....
காணும் கண்கள் ஏங்கும்
மீண்டும் பார்க்கத் தூண்டும்
வேண்டும் என்று தோன்றும்
என்னைக் கடந்து செல்ல - பல
மின்னல் என்னைத் தாக்கும்....!

அவளது அவளது நினைவினைத் தான்
தினம் தினம் மனமதும் சுமந்திருக்கும்
பகலது இரவினைக் கடந்த பின்னும்
பட படவென அலை அடித்துச் செல்லும்
மனதில் ஏதோ புதுவித மாற்றம்.....
மணரம் வரையில் தொடரும் தேடல்....!

நிலவவள் ஒளி தரும் நிலவவள்
அவள் எழில் பாடவே
மொழிகள் தான் போதுமோ
மின்மினி அவளது கண்கள் தான்
அவளது நினைவுகள் சுமந்து தான்
நாட்களும் நகருமோ
ஞாபகம் தொடருமோ
நாளையும் மலருமோ.....?

கண்ணிமைகள் மூடி ஜன்னல் திறந்திடும்போது
காற்றும் கொஞ்சம் சிலிர்த்திடும்,
காதல் நெஞ்சை துளைத்திடும்....
செவ்விதழோ கோவைப்போல சிவந்து நிற்கும்...
தத்துப் பற்கள் பார்க்கும் போது
முத்தென எண்ணம் தோன்றும்
முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாள்
முகத்தில் அழகாய் புன்னகை பூத்தாள்!

காலையில் புலர்ந்திடும் வேளையில்
அவள் முகம் காணவே ஏங்குவேன்
கண்களை மூடுவேன்....
கவிதைகள் பாடுவேன்
இரவிலே நடுங்கிடும் குளிரிலே
நிழலையும் பார்க்கவே வாழுவேன்
தனிமையில் வாடுவேன்
தலையணை தேடுவேன்

சிறு பார்வையாலே சின்ன மனம் சிறைப்பிடித்தாள்,
கொஞ்சும் தமிழ் யுத்தம் செய்தாள்
என்னை ஏதோ செய்தாள்...
தவிப்பாக தள்ளினின்று வாழும் போதும்
இதயம் வரை உள்ளே வந்தாள்...
என் ஆயுள் வென்றாள்...
முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாளே...
முதலாய் என்னில் மாற்றங்கள் செய்தாள்
முடிவாய் என் மனம் அவளிடம் ஈர்த்தாள்

11 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

Vijay said...

அரு​மையான கவி​தை கீர்த்தி..
உண்​மையான வரிகள் கூட..
வாழ்த்துக்கள்

//தவிப்பாக தள்ளினின்று வாழும் போதும்
இதயம் வரை உள்ளே வந்தாள்...
என் ஆயுள் வென்றாள்...
முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாளே...
முதலாய் என்னில் மாற்றங்கள் செய்தாள்
முடிவாய் என் மனம் அவளிடம் ஈர்த்தாள்//

மனதின் கிறுக்கல்கள் said...

அவள் போல் உங்கள் வரிகளும் அழகு., அழகொன்றை அழகுத்தமிழில் அழகாக அழகுபடுத்தியுள்ளீர்கள் தங்கையே வாழ்த்துக்கள்.

//தவிப்பாக தள்ளினின்று வாழும் போதும்
இதயம் வரை உள்ளே வந்தாள்...
என் ஆயுள் வென்றாள்...
முழுதாய் என்னை தன் வசம் ஈர்த்தாளே...
முதலாய் என்னில் மாற்றங்கள் செய்தாள்//

அருமையான வரிகள்

கருணையூரான் said...

ம்...பிரமாதம்

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

சத்ரியன் said...

//மனதில் ஏதோ புதுவித மாற்றம்.....
மணரம் வரையில் தொடரும் தேடல்....!//

கீர்த்தி,

காதல் கீர்த்தனை.

சத்ரியன் said...

//அவள் எழில் பாடவே
மொழிகள் தான் போதுமோ//

கீர்த்தி,

உன் கேள்வி நியாயமானது தான்.

ஆனால்,

மெளனம் போதும்னா பாத்தா, மெளனத்தால் ஒன்னையும் சொல்ல முடியாதே.!

roshaniee said...

http://roshaniee.blogspot.com/2010/03/blog-post_15.html

Thanabalasingam Sinnathamby said...

என் அனுபவத்தின் சாயலை உங்கள் கவிதையில் கண்டேன் நீ அழகு உன் தமிழக்கு அந்தக் கவியழகு மொழியழகு அதன் பொருள் அழகு அதற்குள் உணர்வுகளை புனைந்தவிதம் அழகு இதற்காக உனக்கோர் பாராட்டு

Anonymous said...

என் அனுபவத்தின் சாயலை உங்கள் கவிதையில் கண்டேன் நீ அழகு உன் தமிழக்கு அந்தக் கவியழகு மொழியழகு அதன் பொருள் அழகு அதற்குள் உணர்வுகளை புனைந்தவிதம் அழகு இதற்காக உனக்கோர் பாராட்டு

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in