எந்தையே
உன் போல தந்தை இங்கே
மண்ணிலுண்டோ? - உன்
மடி மீது கண்ணயர்ந்தால்
துன்பமுண்டோ........?
வாழ்வோடு நானிருந்தேன் - நீ
வாழும் வரை - ஏனோ
வாட்டத்தை தந்து சென்றாய்
சாகும் வரை.... :(
உன்னாலே தொடருதிந்த
உயிரின் வலி - உன்
உறவோடு சென்றதெந்தன்
உணர்வின் ஒலி!
காற்றோடு கலந்துவிட்டு
சுவாசம் என்றாய்
கண் காணாமல் நீ இருந்து
என்னைக் கொன்றாய்!
நேற்றோடு முடிந்ததுந்தன்
வழிப்பயணம் - உன்
வழி தேடி தொடருதெந்தன்
விழிப்பயணம்!
தோற்றாலும் ஜெயித்தாலும்
தோற்றமுண்டாம் - உன்னைத்
தொலைத்துவிட்டு தேடுகின்றேன்
தோற்றமெங்கே....?
நேற்றோடு என்னருகில்
நீயிருக்க - அந்த
நேற்றைக்குள் தொலைந்துவிட
ஆசைக் கொண்டேன்!
இன்றைக்கு உன் என்னைத்
இழந்துவிட்டு இடிதாங்கி போல்
நான் மாறி
ஜடமாய் ஆனேன்!
உன் அன்புக்காய் உயிர்க்கின்றேன்
அலை மோதி தவிக்கின்றேன்
என் விடியலின் முகவரி
உன் முகமாக வேண்டுவேன்!
இன்னமும் எந்தையே
நினைத்ததும் வியக்கின்றேன்
உன் போல தந்தை இங்கே
மண்ணிலுண்டோ....?
மண்ணிலுண்டோ? - உன்
மடி மீது கண்ணயர்ந்தால்
துன்பமுண்டோ........?
வாழ்வோடு நானிருந்தேன் - நீ
வாழும் வரை - ஏனோ
வாட்டத்தை தந்து சென்றாய்
சாகும் வரை.... :(
உன்னாலே தொடருதிந்த
உயிரின் வலி - உன்
உறவோடு சென்றதெந்தன்
உணர்வின் ஒலி!
காற்றோடு கலந்துவிட்டு
சுவாசம் என்றாய்
கண் காணாமல் நீ இருந்து
என்னைக் கொன்றாய்!
நேற்றோடு முடிந்ததுந்தன்
வழிப்பயணம் - உன்
வழி தேடி தொடருதெந்தன்
விழிப்பயணம்!
தோற்றாலும் ஜெயித்தாலும்
தோற்றமுண்டாம் - உன்னைத்
தொலைத்துவிட்டு தேடுகின்றேன்
தோற்றமெங்கே....?
நேற்றோடு என்னருகில்
நீயிருக்க - அந்த
நேற்றைக்குள் தொலைந்துவிட
ஆசைக் கொண்டேன்!
இன்றைக்கு உன் என்னைத்
இழந்துவிட்டு இடிதாங்கி போல்
நான் மாறி
ஜடமாய் ஆனேன்!
உன் அன்புக்காய் உயிர்க்கின்றேன்
அலை மோதி தவிக்கின்றேன்
என் விடியலின் முகவரி
உன் முகமாக வேண்டுவேன்!
இன்னமும் எந்தையே
நினைத்ததும் வியக்கின்றேன்
உன் போல தந்தை இங்கே
மண்ணிலுண்டோ....?
Comments
பிரிவுகள் உயிருக்கு இருக்கலாம் அது விட்டு போன உணர்வுகளுக்கு இல்லையம்மா.
வழிப்பயணம் - உன்
வழி தேடி தொடருதெந்தன்
விழிப்பயணம்!//
கீர்த்தி,
கவிதையின் வெளிப்பாடு அழகு.
அதுவும் தந்தையைப் பற்றிய கவிதைகள் அனைத்து கால கட்டத்திலும் மிகமிகக் குறைவாகவே எழுதப்படுகிறது.
எங்கள் தோழி கீர்த்தியும் தந்தையைப்பற்றி ஒரு கவிதைப் புனைந்திருப்பது மகிழ்ச்சி.
//உன்னாலே தொடருதிந்த
உயிரின் வலி - உன்
உறவோடு சென்றதெந்தன்
உணர்வின் ஒலி!//