என்னவனே, ஏனடா இத்தனை தவிப்பு உன்னால் மட்டும்? உனை ஒருமுறையாவது சந்தித்து விட துடிக்குது மனசு உனை ஒருமுறையாவது ஸ்பரிசித்துவிட ஏங்குது நெஞ்சம் உனக்காய் வாழ்வதில் தான் எத்தனை இன்பங்கள் உனக்குள் தொலைவதில்தான் எத்தனை கோடி களிப்பு ஏனோ, உலகமே எனக்குள் இருப்பதாய் ஒரு உணர்வு நீ என்னோடு இருப்பதால் நான் உனக்குள் தொலைந்ததால் வாழ்வதாயின் உன்னோடு மட்டுமே வாழ்ந்துவிட கேட்கின்றேன் மாள்வதாயினும் உனக்காய் மட்டுமே மாண்டுவிட கேட்கின்றேன் உனை சுவாசிப்பதனிலும் உனை அணுவணுவாய் ரசிப்பதனிலும் இன்பமுண்டோ எனக்கு? உனை ஆதிமுதல் அந்தம் வரை எனக்கே கேட்கின்றேன் என்னவனாய் மட்டும்! உனை சந்திக்க போகும் அந்த நாள்………………… எப்போது கிட்டுமென எனையே நொந்து கொள்கின்றேன் எனக்குள் நீ வாழ்கின்றாய் என் இறுதி வரை வாழ்ந்து கொண்டே இருப்பாய் என் மூச்சு நிற்கும் வரை உனக்குள் நானும் வாழ்ந்து கொண்டிருப்பேன் என்றபோதும், உனை என்னருகிலேயே கேட்கின்றேன்! உன் சந்தோசத்தில் பங்கேற்பதற்கல்ல நீ இடிந்து போகும் நேரங்களில் உன் துணையாய் துணைவியாய் தாயாய் மாற…………!
வலையுலகில் கால் வைத்து எனது நூறாவது பதிவை எட்டிவிட்ட எந்தனுக்கு ஊக்குவித்து உறுதுணையாய் இருந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். ஒருவாறு 99 பதிவுகள் எழுதியாயிற்று 100 பதிவாக எதைப் பற்றி எழுதுவது என மூளையை குடை ந்தபோ து என் எண்ணங்களை தொட்டது அப்பா , காதல் , நட்பு என்னும் 3 விடயங்கள் ... சரி அந்த மூன்றைப் பற்றியுமே எழுதிடலாம் என இப்பதிவை தொடங்குகிறேன் . வாசித்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் . அப்பா “அப்பா ” நான் அதிகமாக ஒட்டிக் கொண்ட, என் மீது அதிக பாசம் கொண்ட நபர். இவரை பற்றி சொல்லும் போதே மனசு வலி கொள்ளுது கண்கள் கலங்குது. வரும் நவம்பர் மாதம் 16ம் திகதியோடு அவர் எங்களை விட்டுப் போய் 9 வருடங்கள். இன்று வரை அதை நம்ம முடியாமலே தான் இருக்கு. இந்த உலகத்திலேயே நான் அதிகமாக நேசித்த உறவு என் அப்பா தான். இவரைப் பார்த்து ஓவ்வொரு விடயத்திலும் நான் வியந்து போயிருக்கேன் . அன்பானவர் அதிலும் என் மேல் உயிரானவர் . கோபம் வந்தாலும் அப்படி தான் தேங்காய், வாழைப்பழத்தோடு பூஜை கலைகட்டு...
Comments