உழைப்போம்

கடந்து வந்த பாதைகளில்
கரடான தருணங்கள்
கண் கொண்டு பார்ப்பதற்கு
கண்கள் தான் இன்றில்லை

கண் தன்னை பறித்துக்கொண்டு
நடவென்று அவன் சொல்ல
நடக்கத்தான் முயல்கின்றீர்
நாடகமே புரியாமல்

அறியாமல் தெரியாமல்
அகதி என்றான் அன்றொருவன்
அக்கதையை நிஜமாக்க
துடிக்கின்றர் இக்கணமும்

துடிக்காமல் துயிலாமல்
துவண்டு தினம் பணியாமல்
முடிவெடுத்து முயற்சிப்பீர்
முன்னேற வழி காண்பீர்

Comments

//துடிக்காமல் துயிலாமல்
துவண்டு தினம் பணியாமல்
முடிவெடுத்து முயற்சிப்பீர்
முன்னேற வழி காண்பீர்//

a nice one.. keerththi.
//துடிக்காமல் துயிலாமல்
துவண்டு தினம் பணியாமல்
முடிவெடுத்து முயற்சிப்பீர்
முன்னேற வழி காண்பீர் //

கீர்த்தி,

“ துவண்டு பணியாமல் “ ....உண்மைதான் சகோ.
“ துவண்டு பணியாமல் “ ....உண்மைதான் சகோ.

unmai than
பாராட்டுக்கள் சகோதரி. அருமையான ஒரு பதிவு.

//துடிக்காமல் துயிலாமல்
துவண்டு தினம் பணியாமல்
முடிவெடுத்து முயற்சிப்பீர்
முன்னேற வழி காண்பீர்//

இந்த வரிகளில் தெரியும் உறுதியும் தன்நம்பிக்கையும் தான் வாழ்க்கையின் வெற்றிக்கு முதல் படி
உலகெல்லாம் அகதிகள் நாங்கள்
உறவுகளோ கம்பி வெளிக்குள் அடிமை உனக்கு தெர்யுமா?
உலகினிலே பெரிய சிறை எதுவென்று
சொல்கிறேன் கேள் அது வடக்கு கிழக்கென்று
சொல்ல மனம் மறுக்கிறது
தம்பி ஆண்ட இடங்களெல்லாம்
தறிகெட்ட சிங்களவன் கையிலே
நீடிக்கும் என்று எண்ணாதே
நிலையெடுத்து வருவோம்
மிண்டும் மிண்டும்
///கடந்து வந்த பாதைகளில்
கரடான தருணங்கள்
கண் கொண்டு பார்ப்பதற்கு
கண்கள் தான் இன்றில்லை///
உண்மைதான் ....அருமை...
///நடவென்று அவன் சொல்ல
நடக்கத்தான் முயல்கின்றீர்
நாடகமே புரியாமல்//

ம்ம்
உண்மையில் இப்படியான பல விடயங்களை நாம் அறியாதவர்களாய் இருக்கிறோம்
கவிதை வடிவில் மிகச்சிறப்பு
நன்று

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்