Posts

Showing posts from August, 2010

இமை மூடி திறந்த நொடி!

Image
பூகோளத்தின் பூக்கோலம் அழிக்கப்பட்டு புண்ணியம் புறக்கணிக்கப்பட்டது! புத்தனுக்கும் பக்தனுக்கும் இடை நடுவே புதிதாய் ஒரு யுத்த வெள்ளம் ரத்தத்தின் சித்தமானது! மாண்டவர் மனிதனாயும் மனிதன் மிருகமாயும் மாறிப்போயினர் - பாவம் அப்பாவி சிறுசுகள்! அலைகடலென திரண்ட அன்பில் அழுக்கேறி விஷத்துணிக்கைகள் மிஞ்சிப்போயின! இயந்திர சக்தியோ ஏறிப்போக இளைத்தவன் எட்டாய் மடிந்தான் ஐயகோ... பசிக் கொடுமை! சாஸ்த்திரமும், விஞ்ஞானமும் சண்டையிட்டதில் - பல சரித்திரங்கள் அழிந்து போயின! கழியுகத்தில் காதல் கற்பை மட்டும் சூரையாடி தூர ஓடிப்போய் மறைந்தது! தாய் பிள்ளையையும், பிள்ளை தாயையும் பேரம் பேசி விலை கழிவும் வழங்கப்பட்டது! சர்வாதிகாரமும், அதிகார உட்புகுத்தலும் பரவிப் போக பழி ஆடாய் அப்பாவி மக்கள்! கையோடு காசிருக்க கல்வித் தகைமையும் தானாய் கிடைத்தது - ஏனோ அறிவு தான் பெற முடியா பொக்கிஷம்! இளந்தென்றல் நெருப்பாய் சுட்டெறிக்க இலையின் உரசலும் வசை மொழிப்பாடின! இருப்புக்கள் பொறுப்புக்களாக இல்லாமை நிலைத்தது இதயமும் வலித்தது! புதிதாய் ஒரு உலகம் புதிரோடு ஜனனம் இத்தனையும் ஆகிப்போனது இமை மூடி திறந்த நொடி!

திருப்பம்

கனவுகளின் சில்லென்ற அணைப்பில் வழமைப் போல கடந்து திரிந்தது நேற்றுவரை நாட்கள் ! காற்றோடு பாட்டிசைக்கும் இலைகளின் தளிர்கள் இமை பொழுதில் சருகானது ! வானோடும் முகிலோடும் உறவாடும் விண்மீன்கள் மறைவான இடம் தேடி தொலைந்தன ! இரவோடு ஒளி சேர்க்கும் இனிமைக்கு பொருள் சேர்க்கும் நிலவும் நில்லாமல் சென்றது ! சுட்டெறிக்கும் சூரியனும் விட்டணைக்கும் மதியுடலும் மாற்றம் கொண்டன மறைவாக ! மோகம் கலந்த கானக் குயில்கள் சோகக் குரலில் ஓலமிட்டன ஸ்ருதி சேராமல் ! என்பதாக இயற்கையின் சாயலூடு .... வானம் தூவும் தூரலாக வலிக்காமல் வந்து சேருது ஆசைகள் வலிகளைத் தருவதற்காகவே !

தோற்ற மாற்றம்

Image
அகல் கண் கொண்ட பார்வைகள் பலவிதம் ஏனோ பார்ப்பவர் நிலை அதில் மாறுதே ! கூர் காதிலே கேட் பவை நன்மை எண்ணாது நலம் தீர விசாரித்து தெளிதலே சிறப்பு! பேச்சிலே மயக்கிடும் விந்தை கொண்டான் அங்கே வீழ்வதும் மனிதனின் மடமையே! ஆழ்கடல் ஆழமும் அழந்தால் சிறிதே அவன் சிறு மன ஆழமோ அதனிலும் பெரிதே! ஆளுமை எண்ணமே ஆளுதே பூமியை அன்பென்ற மென்மையும் அடிமையே அதனிலே! தோற்றத்தை மாற்றிடும் உலகிலே - இன்று பொய் மாயமாய் மாறுதே மனித மனமே! வீழ்ச்சியோ மீட்சியை நாடுதே - இங்கே மீதமோ மிருகத்தின் கொடுமை ஆட்சியே!

முடிவு

Image
கரைந்திட்ட காலமது அலையாக நுரைக்க அடிமனதின் ஆசைகளோ ஆயிரமாய் வளர ... இதயத்திலே சலனம் இடைவிடாமல் உரச இலக்கில்லாத பயணம் இறுதி வரை தொடர ... கனவினிலே வாழ்வு காலை மாலை துளிர நினைவுகளைச் சுமந்தே நிகழ்வுகளும் மிளிர ... எல்லைகளை கடந்த பாதை இதயத்திலே உதிக்க தொடங்கிவிட்ட முடிவை நோக்கி பல கேள்விகளும் படர ... இருப்பில்லாத வாழ்வில் உன் இருப்பை தேடிய நெஞ்சம் அதன் இழப்புக்கள் ஏற்று இறப்பா னது தஞ்சம் !

இதயத்தின் புலம்பல்

Image
இரவினிலே உளறுகிறேன் இதயம் வரை தேடுகிறேன் இடைவிடாது நான் துடித்து இன்று வரை வாடுகின்றேன் என்னவனே என்னுயிரே எக்கணம் தான் எனை சேர்ந்தாய் எங்கிருந்து வந்துதித்தாய் எந்தனையே எடுத்துக் கொண்டாய் உறவுகளை வெறுத்துவிட்டேன் உன்னை நம்பி மறுத்துவிட்டேன் உண்மையிலே என்றெனக்கு உடனிருக்கும் நொடி தருவாய் ஏனிந்த கொடுமையடா ஏக்கத்திலே நான் இருக்க ஏளனமாய் சிரிக்கின்றார் ஏடெடுத்து பார்த்தவர்கள் மண்தனிலே வந்துதித்தேன் மனதார வாழ்கின்றேன் மறு ஜென்மம் நான் பெறினும் மன்னவன் உன்னடி சேர !

காதல் ஒன்று

Image
மனசெல்லாம் படபடக்க உணர்வுக்குள் உயிர் பிறக்க உன் மீது எந்தனுக்கு வளருதையா காதல் ஒன்று! மு ட்டி முட்டி எனை வதைக்கும் முழு நேர உன் நினைப்பை கட்டி வைத்தும் காற்றைப் போல நுழையுதையா காதல் ஒன்று! மனசுக்குள் கடும் புயலடிக்க மறு ஜென்மம் தனை வெறுத்தும் இருப்போடு உனை அணைக்க துடிக்குதையா காதல் ஒன்று! எட்டி எட்டி தூரம் சென்று எட்டா தூரம் வாழ்வும் என்றாய் என்றாலும் உன் மீதே பிறக்குதையா காதல் ஒன்று! பட்டதெல்லாம் போதுமென்று பல தடவை செப்பி நின்றும் வெட்டி விட்ட வேரினின்றும் துளிர் க்குதையா காதல் இன்று!

முகத்திரை

Image
உன் முகத்திரை கிழிய முந்திக் கொள்கிறாய் மெருகேற்றும் என் தமிழில் எனை வசைக்க - நீ முந்திக் கொள்கிறாய் உன் முகத்திரை கிழியவே! வேஷமதை கண்ணுற்று போலிதனை கேட்டறிந்து விஷம் கொண்ட அமுத மொழியுண்ட சோகத்தில் நான் துவலையில் - நீ முந்திக் கொள்கிறாய் உன் முகத்திரை கிழியவே! நினைவெல்லாம் கானலாகி நினைவுமட்டும் இரு ப்பானது தெரிந்து நான் நொந்து நூலாய் போண நொடியில் - நீ முந்திக் கொள்கிறாய் உன் முகத்திரை கிழியவே! உன் அதிகார ஆட்சியை என் மீது திணிக்க முனைந்ததை வெறுத்து நான் மறுத்த வேளையில் விலகிச் செல்ல சொல்லி - நீ முந்திக் கொள்கிறாய் உ ன் முகத்திரை கிழியவே!

நின்னை நினைக்கையிலே!

என் கண்ணுக்குள் ஒளியான நின்னை நினைக்கையிலே....; விண் தாண்டி விண்மீன்கள் என்னைச் சூழும் வான் தொட்ட வாடையோ(காற்று) என்னை மீட்டும் இதயமோ செந்தமிழிலே கவிதை பாடும் எனக்கென்ன இனி வேண்டும் உலகிலென்று! என் வார்த்தையிள் மொழியான நின்னை நினைக்கையிலே....; கொதிர் நீர் கூட இதமாக என்னை நனைக்கும்: குளிர்மையோ நெஞ்சொடு குலாவிக் கொள்ளும் - என் தலை கூட தட்டாமல் உன்னைச் சாயும் எனக்கென்ன இனி வேண்டும் உலகிலென்று! என் கேட்டலில் புதைந்துள்ள நின்னை நினைக்கையிலே....; நடை கூட நளினமாய் நடனமாடும் வசை கூட என் தேச இசையாய் மாறும் - மறு நாளிகை நீள்கையில் எனக்குள் முழங்கும் எனக்கென்ன இனி வேண்டும் உலகிலென்று! என் உயிருக்குள் உணர்வான நின்னை நினைக்கையிலே....; அகிலத்தின் அசைவெலாம் அடிமையாகும் - அது உட்கொண்ட அனைத்துமே என் உடைமையாகும் நீயாகி நான் தொலைந்த இன்பம் கேட்கும் எனக்கென்ன இனி வேண்டும் உலகிலென்று!