முகத்திரை
உன் முகத்திரை கிழிய
முந்திக் கொள்கிறாய்
மெருகேற்றும் என் தமிழில்
எனை வசைக்க - நீ
முந்திக் கொள்கிறாய்
உன் முகத்திரை கிழியவே!
வேஷமதை கண்ணுற்று
போலிதனை கேட்டறிந்து
விஷம் கொண்ட அமுத மொழியுண்ட
சோகத்தில் நான் துவலையில் - நீ
முந்திக் கொள்கிறாய்
உன் முகத்திரை கிழியவே!
நினைவெல்லாம் கானலாகி
நினைவுமட்டும் இருப்பானது
தெரிந்து நான் நொந்து
நூலாய் போண நொடியில் - நீ
முந்திக் கொள்கிறாய்
உன் முகத்திரை கிழியவே!
உன் அதிகார ஆட்சியை என் மீது
திணிக்க முனைந்ததை வெறுத்து
நான் மறுத்த வேளையில்
விலகிச் செல்ல சொல்லி - நீ
முந்திக் கொள்கிறாய்
உன் முகத்திரை கிழியவே!
Comments
திணிக்க முனைந்ததை வெறுத்து
நான் மறுத்த வேளையில்
விலகிச் செல்ல சொல்லி - நீ
முந்திக் கொள்கிறாய் //
வலிகள் இங்கே... இருந்தும் அன்பும் உன்னை அடிமை கொள்ளுமாயின் அன்பையும் வெறுக்கக் கற்றுக் கொள்