இமை மூடி திறந்த நொடி!


பூகோளத்தின் பூக்கோலம்

அழிக்கப்பட்டு புண்ணியம்

புறக்கணிக்கப்பட்டது!


புத்தனுக்கும் பக்தனுக்கும்

இடை நடுவே புதிதாய்

ஒரு யுத்த வெள்ளம்

ரத்தத்தின் சித்தமானது!


மாண்டவர் மனிதனாயும்

மனிதன் மிருகமாயும்

மாறிப்போயினர் - பாவம்

அப்பாவி சிறுசுகள்!


அலைகடலென திரண்ட

அன்பில் அழுக்கேறி

விஷத்துணிக்கைகள் மிஞ்சிப்போயின!


இயந்திர சக்தியோ ஏறிப்போக

இளைத்தவன் எட்டாய் மடிந்தான்

ஐயகோ... பசிக் கொடுமை!


சாஸ்த்திரமும், விஞ்ஞானமும்

சண்டையிட்டதில் - பல

சரித்திரங்கள் அழிந்து போயின!


கழியுகத்தில் காதல்

கற்பை மட்டும் சூரையாடி

தூர ஓடிப்போய் மறைந்தது!


தாய் பிள்ளையையும்,

பிள்ளை தாயையும்

பேரம் பேசி விலை கழிவும்

வழங்கப்பட்டது!


சர்வாதிகாரமும், அதிகார உட்புகுத்தலும்

பரவிப் போக பழி ஆடாய்

அப்பாவி மக்கள்!


கையோடு காசிருக்க

கல்வித் தகைமையும்

தானாய் கிடைத்தது - ஏனோ

அறிவு தான் பெற முடியா

பொக்கிஷம்!


இளந்தென்றல் நெருப்பாய்

சுட்டெறிக்க இலையின் உரசலும்

வசை மொழிப்பாடின!


இருப்புக்கள் பொறுப்புக்களாக

இல்லாமை நிலைத்தது

இதயமும் வலித்தது!


புதிதாய் ஒரு உலகம்

புதிரோடு ஜனனம்


இத்தனையும் ஆகிப்போனது

இமை மூடி திறந்த நொடி!

Comments

Popular posts from this blog

விழுவியம் காப்போம்

ஹைக்கூ கவிதைகள்

29. தவிப்போடு ஒரு மனசு