இதயத்தின் புலம்பல்
இரவினிலே
உளறுகிறேன்
இதயம் வரை தேடுகிறேன்
இடைவிடாது நான் துடித்து
இன்று வரை வாடுகின்றேன்


என்னவனே
என்னுயிரே
எக்கணம் தான் எனை சேர்ந்தாய்
எங்கிருந்து வந்துதித்தாய்
எந்தனையே எடுத்துக் கொண்டாய்

உறவுகளை
வெறுத்துவிட்டேன்
உன்னை நம்பி மறுத்துவிட்டேன்
உண்மையிலே என்றெனக்கு
உடனிருக்கும் நொடி தருவாய்

ஏனிந்த கொடுமையடா
ஏக்கத்திலே நான் இருக்க
ஏளனமாய் சிரிக்கின்றார்
ஏடெடுத்து பார்த்தவர்கள்

மண்தனிலே
வந்துதித்தேன்
மனதார வாழ்கின்றேன்
மறு ஜென்மம் நான் பெறினும்
மன்னவன் உன்னடி சேர!

Comments

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்