திருப்பம்

கனவுகளின் சில்லென்ற அணைப்பில்

வழமைப் போல கடந்து திரிந்தது

நேற்றுவரை நாட்கள்!


காற்றோடு பாட்டிசைக்கும்

இலைகளின் தளிர்கள்

இமை பொழுதில் சருகானது!


வானோடும் முகிலோடும்

உறவாடும் விண்மீன்கள்

மறைவான இடம் தேடி தொலைந்தன!


இரவோடு ஒளி சேர்க்கும்

இனிமைக்கு பொருள் சேர்க்கும்

நிலவும் நில்லாமல் சென்றது!


சுட்டெறிக்கும் சூரியனும்

விட்டணைக்கும் மதியுடலும்

மாற்றம் கொண்டன மறைவாக!


மோகம் கலந்த கானக் குயில்கள்

சோகக் குரலில் ஓலமிட்டன

ஸ்ருதி சேராமல்!


என்பதாக

இயற்கையின் சாயலூடு....


வானம் தூவும் தூரலாக

வலிக்காமல் வந்து சேருது ஆசைகள்

வலிகளைத் தருவதற்காகவே!

Comments

‎//காற்றோடு பாட்டிசைக்கும்
இலைகளின் தளிர்கள்
இமை பொழுதில் சருகானது!//

அத்தனையும் வலிகள் தங்கச்சி. உணர்வுகள் வலிகளையும் சேர்த்து தான் அன்றி வலிகள் மட்டுமே இல்ல

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்