மெழுகா.... நான்...???
மடி சாய்த்த நொடியில்
மபுணிப்பு மறைந்தது!
கவலைச் சிறை எனை விடுத்து
களிப்பு என் இதயக்கதவை
அணைத்துக் கொண்டது!
மெல்லத் தெளிந்த
என் மனதில் - மேன்மை
உருவம் நீ...!
செல்லம் கொஞ்சும் உன்
சிரிப்பில் கலந்த
நெஞ்சம் இன்பக்கோர்வை !
கானல் தான் இனிமையோ
இரு நாட்களில் இடிந்த - என்
இதயத்தை வலிகள் சூழ்ந்தன
அன்பனே...!
உயிர் சொரியும் - உன்
இனிய வார்த்தைகள்
எங்கோ தொலைந்து....;
மனம் கணக்கும்
மௌன பாஷைகள்
மொழியானதால்....;
உன்னன்பு கரம் பற்றி
உயிர் பெற்ற நானோ
சிலையாகிறேன்!
இன்று
மெழுகாய் நான்
உருக்கும் சுடராய் நீ!
Comments
bi-monthly magazine. in our magazine, we have a separate page for lady bloggers. we planned to publish your blog in future. i want just your o.k. and a recent photograph.
my mobile no is. +91 9500019222
E-Mail- devathaidesk@gmail.com
thanks
Navaneethan
தொடருங்கள் உங்கள் படைப்புகளோடு
வாழ்த்துகள்