பிரிவுகளை தடுப்போம்
ஈன்றோர், உடன்பிறப்பு, உறவு, நட்பு, காதல் என வரிசைப்படுத்தப்பட்ட நபர்களிடம் நெருக்கம், தெரிந்தவர், அயலவர் என பல்வேறு பாகுபாடுகளையும் உட்சேர்த்து நமக்கென ஒரு வரையறையை ஏற்படுத்திக்கொண்டே உரையாடல்களை தொடர்கின்றோம் என்றாலும் அனேக நேரங்களில் இவர்களுள் ஏதோ ஒரு தரப்பினரால் கசப்பான சம்பவங்களையும் வலிகளையும் சந்தித்து உணரவே செய்கின்றோம். எதனால் இவ்வாறான நிலை ஏற்படுகின்றது என ஆராய்ந்தால் நாம் அல்லது சம்பந்தப்பட்ட நபர் எதிர்ப்பார்க்கும் சாதகமான பதில் அவர்களுக்கு கிடைக்காமையினால் அவர்கள் வரையறுத்த எல்லை தாண்டப்படுவதே காரணமாக அமைகின்றது அது ஒரு விடயம் குறித்ததாகவோ, பொருள் குறித்ததாகவோ இல்லை இன்னொரு நபர் குறித்ததாகவோ அமையலாம். ஒருவர் மீது கோபம் தலை தூக்கும்போது இணைந்திருக்கும் போது வெளி தெரியாத அவர் குறித்த தீய அம்சங்கள், குணாதிசயங்கள் பெரிதாக தெரிய ஆரம்பிக்கும் இதனால் வெறுப்பு மூலமாகி பிரிவே நிரந்தரமாகும் இவ்வாறான நிலைமைகளை சமாளிப்பதற்கு ஏதாவது வழிமுறைகளை கையாளப்பழகிக்கொள்ள வேண்டும் எல்லா சந்தர்ப்பங்களையும் தீமை பயக்கும் என தெளிவாக தெரிந்தும் அணுசரித்து செல்ல வேண்டும் என்பது இதன் ...