81. மீண்டும் சுனாமி
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதியை நினைக்கும் போதே இதய இயக்கம் நின்றுவிட்டதான ஒரு எண்ணம் அனைவர் மனதையும் ஆட்டிப்படைக்கும். எத்தனை இழப்புக்கள், எத்தனை உயிர் சேதங்கள்....? உடைமைகளையும், உறவுகளையும் இழந்து தவித்த அவர்களின் கதறல் நினைக்கும் போதே காதுகளில் ஒலிப்பதாக உணர்கின்றேன். இன்று வரை அவ்விழப்புக்கள் ஈடு செய்யப்பட்டதாக இல்லையே....! இவ்வாறாக கடந்து விட்ட கசப்பான சம்பவம் மனதில் நீங்காமல் இருக்க மீண்டும் சுனாமி.... கதி கலங்க வைக்கின்றது கேட்கும் போதே அனைவரையும். ஆம் நேற்று பசிபிக் பெருங்கடலில் நடந்த பெரும் நில நடுக்கம் காரணமாக சமோவாத்தீவுகளில் சுனாமி ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கிராமமே அழிந்ததாகவும் ஊடகங்கள் அறிவித்தவண்ணமாக! (ரிக்டர் ஸ்கேலில் 8.3 அளவு இருந்தததாக அறிவிக்கப்பட்டுள்ளது) சுனாமி பெரும்பாலும் சமோவா தலைநகரமான 'ஆபியா' வைச் சுற்றி இருந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நியூஸியை சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த அலைகள் இரண்டு மீட்டர் உயரம் வரை இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. முதன்முதலில் கி.மு. 365ம் ஆண்டு ஜூலை 21ம் திகதி கிழக்கு ம...