69. ஊமையின் கதறலும்,உயிருள்ளவரை தொடரும் தவமும்

உயிரோடு உற
வாடி
உணர்வோடு ஸ்பரிசித்து
கருத்துக்குள் கை கோர்த்து
காதுக்குள் கதை
பேசி
வேண்டாமென எட்டியுதைத்த
நொடி தாண்டி......
உண்மை
ணர்ந்து
உறவுகளை தெளிந்து
உலகம் இதுதானெ

தெரிந்து எழுந்த போது
உணர்வுகள் தளர்ந்து - மீண்டும்
ஊமையாயின அவள்
அசைவுகள் அன்றும்!உன் வலிகளை
தாங்கிக் கொள்வேன்
வடுக்களை ஏந்திக் கொள்வேன்
என்னுயிராய் உன்னுயிர் காப்பேன்

என்று வார்த்தை மொழி பேசிய
உறவுகள்....மனதோடு சேர்த்து
உடலுக்கும் முடியாமல்
சோர்ந்துப் போயிருந்வேளை
உதறித் தள்ளி செல்ல
தன்னை தானே தூற்றி கொள்கின்றாள்
எதற்காக போலி உறவுகளின்
சுவாசத்தை தீண்டிப் பார்த்தேன் என...
வெளியில்
சொல்ல முடியாமல்
வெம்பி வெம்பி அழுத உணர்வுகளை
கண்ணீர் கொண்டு கறைத்த
காரிகை அவள்.... -
ஏனோ
கரையைத் தான்
கண்டுவிடவில்லை!
விளைச்சல் நிலம் தன்னால்
தரிசாதல் தாங்காமல்
ஏந்திப் பிடிக்க சென்று
ஏளானத்தோடு திரும்பிய நிலை!தொடர்பற்று நிற்றல்
கொண்டால்
நொறுங்கிடும் இதயமென்று
உணர்ந்து தொட்டுப்பேச
வந்தவளுக்கு.....
தொல்லை என கிரீடப்பெயர்!
பெ
ண்மையின் மனமதனை
படித்தவன் நானென கூறி
பேசித் தீர்க்கின்றாயே
கொடூர வார்த்தைகளால்
பேதை மன
ம்......
படும்பாட்டை அறியாமல்!
மடந்தையர் மனமதனில்
மாற்றான் வாழ்வில்
செழிப்பைக் காணும்
எண்ணம் பொய் என்கின்றாய்,

பொறுமை இழந்து!விழி கொண்ட நீ....

வலி தந்துப் போகின்றாய்
வலி கொண்டதனால்

வரிசையாக!


உனக்கெங்கே
கேட்கப் போகின்றது
நீ இல்லா நாளிகையில்

மனசுக்குள் பொங்கிய
ஊமையின் கதறல்!

என் சொற்கள் -
உன்னை
வதைப்பதைப் போல; - உன்
சொற்களும் குத்திக் கிழிக்கின்றன
நெஞ்சை!


என் செயல்கள் - உன்னை
தகிப்பதுப் போல; - உன்
செயல்களும் பிழிந்து எடுக்கின்றன
உயிரை!
இருந்தும்....


நேற்றுப் போல் இன்றும்
மண்றாடுகின்றே
ன் - உன்
வாழ்வு செழிக்க மனதால்!
இது போலவே....நாளையும் தொடரும்
என் தவங்கள் - உன்
வாழ்வு செழிக்க!


நரம்பில்லா நாவால்
வரம்பில்லாமல் நீ
தூற்றினாலும் - தூரமாய்
இருந்தேனும் தொடரும்
என் தவங்கள் உனக்காயும்
உயிருள்ளவரை!எத்தனை தான் செய்
து விட்டும்
நீ வேண்டுமென்றாலும்
வேண்டாமென்றாலும் - உன்
வலி தாங்கி இதயத்தின்
சுமை தாங்கியாவேன் நான்
வாழ்க நீ வளமோடு!


Comments

இதயத்தை வலிக்க வைத்தன உங்களது வரிகள்...

பின்னூட்டத்தில் வேர்ட் வேரிபிகேஷனை எடுத்து விடுங்கள், அநேகமானோர் பின்னூட்டும் போது வேர்ட் வேரிபிகேஷன் இருப்பதை விரும்ப மாட்டார்கள், ஓடி விடுவார்கள்.
நன்றி யோகா அண்ணா! தொடர்ச்சியாக உங்கள் என் கவிகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றீர்கள் நன்றிகள் கோடி

உடனடியாக வேர்ட் வேரிபிகேஷனை எடுத்துவிடுகின்றேன் ஆனால் அதனை எவ்வாறு நீங்குவதென்று எனக்கு தெரியவில்லையே.....:(
உங்களது ப்ளொக்கர் அக்கவுண்ட் உள்ளே சென்று பின்வருவனவற்றை தெரிவு செய்து
blogger --> settings--> comments-->Show word verification for comments என்னும் இடத்தில் No என்பதை தெரிவு செய்யுங்கள்.
//விளைச்சல் நிலம் தன்னால்
தரிசாதல் தாங்காமல்
ஏந்திப் பிடிக்க சென்று
ஏளனத்தோடு திரும்பிய நிலை!//

******************************

விளைச்சல் நிலமும் தரிசாகும் மழையின்றி..
அழகான கவிதைகள் உங்கள் மனச்செடியில் பூக்கின்றன
வலிகளுக்குக் கூட வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டிய காலத்தில் வாழ்கிறோம்
இப்போது சரி என நினைக்கிறேன்.
தொழில்நுட்ப உதவிகளுக்கு யோகாவிற்கு நன்றி
கீர்த்தி.. என்னிடம் வார்த்தையில்லை... அதுமையாக இருக்கின்றது.. ஏனோ மனது இறுகியது போல உணர்கின்றேன்.. காதல் வலி கொடியது.. வார்த்தைகளால் எளிமையாக வடித்துள்ளீர்கள்.. வாழ்த்துகள்..
கீர்த்தி...
தங்களின் கவிதைகளில் தொடர்ச்சி தெரிகிறது.அனுபவங்களும், ஏக்கங்களும் எட்டிப் பார்க்கின்றன. வாழ்த்துக்கள்.
காத்திரமான கவி வரிகள் பாராட்டுக்கள் கீர்த்தி.
வலிகளுக்கு உணர்வு கொடுத்துள்ளீர்கள்...உணர்வுகளுக்கு அளவுகள் தான் ஏது..இருந்தும் பெண் மனம் வெறும் இழகியதாக தோன்றுகிறது உங்கள் வரிகளில்..
வலி கொண்டு அது வலிமையாக உறுப்பெற்ற உருக்கென்று அடையாளப்படுத்தி வையுங்கள் தோழி..
Sivaji Sankar said…
"ஊமையின் கதறலும்,உயிருள்ளவரை தொடரும் தவமும்"
வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..,தோழி.
நன்றி யோகா அண்ணா, நன்றி அமுதன்
ஆம் சுபானு காதல் சுகமான சுமை

நன்றிகள்
///காத்திரமான கவி வரிகள் பாராட்டுக்கள் கீர்த்தி.///

நன்றிகள்
வலி கொண்ட போதும் வலிமை குறையாது மனதின் கிறுக்கல்கள்

உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றிகள்
நன்றி Sivaji Sankar

நன்றீகள்

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்