- Get link
- X
- Other Apps
29. தவிப்போடு ஒரு மனசு
என்னவனே, ஏனடா இத்தனை தவிப்பு உன்னால் மட்டும்? உனை ஒருமுறையாவது சந்தித்து விட துடிக்குது மனசு உனை ஒருமுறையாவது ஸ்பரிசித்துவிட ஏங்குது நெஞ்சம் உனக்காய் வாழ்வதில் தான் எத்தனை இன்பங்கள் உனக்குள் தொலைவதில்தான் எத்தனை கோடி களிப்பு ஏனோ, உலகமே எனக்குள் இருப்பதாய் ஒரு உணர்வு நீ என்னோடு இருப்பதால் நான் உனக்குள் தொலைந்ததால் வாழ்வதாயின் உன்னோடு மட்டுமே வாழ்ந்துவிட கேட்கின்றேன் மாள்வதாயினும் உனக்காய் மட்டுமே மாண்டுவிட கேட்கின்றேன் உனை சுவாசிப்பதனிலும் உனை அணுவணுவாய் ரசிப்பதனிலும் இன்பமுண்டோ எனக்கு? உனை ஆதிமுதல் அந்தம் வரை எனக்கே கேட்கின்றேன் என்னவனாய் மட்டும்! உனை சந்திக்க போகும் அந்த நாள்………………… எப்போது கிட்டுமென எனையே நொந்து கொள்கின்றேன் எனக்குள் நீ வாழ்கின்றாய் என் இறுதி வரை வாழ்ந்து கொண்டே இருப்பாய் என் மூச்சு நிற்கும் வரை உனக்குள் நானும் வாழ்ந்து கொண்டிருப்பேன் என்றபோதும், உனை என்னருகிலேயே கேட்கின்றேன்! உன் சந்தோசத்தில் பங்கேற்பதற்கல்ல நீ இடிந்து போகும் நேரங்களில் உன் துணையாய் துணைவியாய் தாயாய் மாற…………!
Comments