75. தொடர்பு

 உன் புன்னகை
இலைகள்
பூக்களாக!
       
 
          உன் அழுகை
மழை நீர்
உப்பாக!
           
 
   உன் ஏக்கம்குளிர்
நெருப்பாக!
 
 
                   உன் தவம்
தமிழ்
தாயாக!
                      உன் கவலை
பூமி
புதைக்குழியாக!
 
                     உன் இன்பம்
வானம்
  பந்தாக!
 
                  உன் அணைப்பு
முட்கள்
  பஞ்சாக! 
                 உன் விலகல் நெஞ்சம்கல்லாக! 
               உன் கனவு
வாழ்வு
வரமாக!
 
             உன் நினைவு
கடல்
கையாக!

 
             உன் கோபம்
தண்ணீர்
எரிமலையாக!
                      உன் பிறப்பு
என் உடலின்
உயிராக!

 
                     உன் வாழ்க்கை
நான்
நீயாக!
            
Comments

//உன் விலகள்
நெஞ்சம்
கல்லாக!// என்பது

விலகல்

என வரவேண்டும் என நினைக்கிறேன். சரியா.

மற்றபடி நல்ல கவிதை
நன்றி மாற்றிவிட்டேன்
//உன் அணைப்பு


முட்கள்

பஞ்சாக///

நல்லதொரு கவிதை
suthan said…
வாழ்த்துக்கள் என்றும் மனப்பூர்வமாக!
suthan said...

//// வாழ்த்துக்கள் என்றும் மனப்பூர்வமாக!////

நன்றி நன்றி நன்றி

Popular posts from this blog

இறுதிச்சடங்கு

உறவுகள்!

ஹைக்கூ கவிதைகள்