66. நீ வா.................
காற்றே கொஞ்சம் வா வா
காதை திறந்து வா வா
என் சுவாசம் தீண்டிப் போனாய்
சுகமாய் என்னை மீட்டாய்!
வரமாய் என்னுள் வந்தாய்
நல் மனமும் நீயே கொண்டாய்
அணுவாய் நீயே வந்தாய்
அன்பாய் என்னை தின்றாய்!
தனிமை என்னை சிறைப்பிடிக்க
எனக்காய் என்னில் வந்தாய்,
தனியாய் உலகில் நின்ற என்னை
நற்சிலையாய் மாற்றி கண்டாய்!
தாகம் கொண்ட தேகம் எங்கும்
தழுவல் மொழிகள் சொன்னாய்;
கணமாய் நீளும் நாட்கள் எங்கும்
கவிதை வரிகள் தந்தாய்!
என் பகலாய் மாறிப் போனாய்
இனிய இரவும் நீயே ஆனாய்
நிழலாய் நீயே நின்றாய்
நிஜமாய் மாறிப் போனாய்!
தடயம் நீக்கி கூடும் துணிவில்
தரணி தாண்டி வந்தாய்;
மலரும் நினைவில் மகிழ்ந்து போக
புதிரும் நீயே ஆனாய்!
மோனத்தின் ரசணைக்கு முதலும் நீயே ஆனாய்
முழு உலகின் நிலவும் நீயே ஆனாய்
புரியாத வார்த்தைகள் சொன்னாய்
நிஜமாய் என்னை அணைத்தாய்!
சொன்னேன் உன்னை சொன்னேன்
உன் தொணியில் உன்னை சொன்னேன்
தந்தாய் உன்னை தந்தாய் - நீ
எனக்காய் உன்னை தந்தாய்!
மீண்டும் மீண்டும் கேட்பேன்
மனதால் உன்னை கேட்பேன்
காற்றே நீயும் வா வா - என்னில்
நீயும் வா வா!
Comments
K.eladsian
இனிய இரவும் நீயே ஆனாய்
நிழலாய் நீயே நின்றாய்
நிஜமாய் மாறிப் போனாய்!//
அருமையான கவி வரிகள், பாராட்டுக்கள் கீர்த்தி.
முழு உலகின் நிலவும் நீயே ஆனாய்
புரியாத வார்த்தைகள் சொன்னாய்
நிஜமாய் என்னை அணைத்தாய்!
இரசித்தேன்..
ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் தமிழின் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்